Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

குறள் 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
[அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பும்  -  அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

அறனும் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம்

உடைத்து - உடை-தல்
uṭai-   4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burst into fragments; தகர்தல் என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல் உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossom as a flower; மலர்தல் கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ 12, பெண் 3). 7. To be discomfited, routed, broken, as the ranks of an army; தோற்றோடுதல். வழுதி சேனையுடைந்ததே (திருவிளை. சுந்தரப். 18). 8. To be dispirited, dejected,as one's heart with grief; to be in despair;மனங்குலைதல். உடைபு நெஞ்சுக (கலித். 10). 9. To become poor, reduced in circumstances; எளிமைப்படுதல். (பிங்.) 10. To be divulged, to become publicly known; வெளிப்படுதல் 11.To die; சாதல் உடைந்துழிக்காகம்போல் (நாலடி,284).  

ஆயின் - ஆனால்

இல்வாழ்க்கை - மனையாளோடு கூடி வாழ்கை; இல்லறத்தில் வாழ்கை

ண்பும் - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

பயனும் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

அது - அஃது; அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர்; ஆறாம் வேற்றுமை ஒறுமையுருபு.

முழுப்பொருள்
இல்வாழ்க்கையில் கணவன் மனைவி என்று இருவர் முக்கியமாக இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்து இவர்களது பிள்ளைகள். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேசம் கொண்டு அன்பு செலுத்தவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பு செலுத்த வேண்டும்.

இல்வாழ்க்கையில் நேர்மையும் ஒழுக்கமும் மிக அவசியம். ஒருவர் மற்றோருவரிடம் நேர்மையாக இருத்தல் வேண்டும். உடற்கின்பத்திற்கு மட்டும் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது என்பது இல்வாழ்க்கையாகாது. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நேர்மையாக இருத்தல் வேண்டும். ஒருவருக்கு ஒருவர் மனம் ஒத்து இல்வாழ்க்கை நடத்த வேண்டும். இருவரும் மனம் கோணாமல் இருத்தல் வேண்டும். இல்வாழ்க்கைக்கென்ற கோட்பாடுகளையும் பின்பற்றி, கடமைகளையும் ஆற்றி வாழ வேண்டும்.  அதுவே அறம்.

கணவன் மனைவி ஆகிய இருவரும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர்களாய் இருத்தல் வேண்டும். பிள்ளைகளை சான்றோராய் வளர்த்தல் வேண்டும். அறம் அறிந்து அவ்வழியில் செல்லும் பிள்ளைகளாய் அவர்களை வளர்த்தல் வேண்டும். அதுவே அறம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறுவார்கள். அறம் என்றால் தர்மம் அதாவது ஒருவர் ஆற்றவேண்டிய கடமைகள். இல்லறவாழ்வில் ஒருவர் இல்வாழ்க்கையின் கடமைகளை ஆற்றவேண்டும். அவ்வாறு ஆற்றினால் அவர் பொருளை ஈட்ட முடியும். அவ்வாறு தேவையான அளவு பொருள் இருந்தால் இன்பம் வாழ்வில் பயனாய் கிட்டும். காமமும் சுவைக்கும். கல்யாணம் செய்து கொண்டு வேலைக்கு செல்லாமல் வீண் செலவு செய்தால் பொருள் தங்காது தரித்திரம் ஒட்டிக்கொள்ளும். இன்பம் இருக்காது.

ஆதலால் ஒருவர் இல்வாழ்க்கையில் அன்பும் அறனும் மலர்ந்தால் (மலரச் செய்யதால்) அதுவே அவ்வாழ்க்கைக்கு அழகாகவும் வண்ணமாகவும் செல்வமாகவும் அமையும்.

மேலும் அஷோக்  உரை


மணவுறவின் வெற்றி என்பது ஓர் எல்லைவரை உகந்த மனிதரை தெரிவுசெய்வதில் உள்ளது. ஆனால் வாழ்க்கையை முடிந்தவரை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது அதன் அடுத்தபடி. மாற்றிக்கொள்ள இயலாதவர்களால் ஒருபோதும் வெற்றிபெற்ற வாழ்க்கையை அமைக்கமுடியாது. அந்த இலட்சிய துணையைத்தான் தெரிவுசெய்வேன் என எவரேனும் தேடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் வாழ்க்கைதான்.

மணவாழ்க்கை மட்டுமல்ல நட்புகளே கூட இந்நட்பு என்றென்று நீடிக்கும், எந்நிலையிலும் வளரும் என எண்ணிக்கொண்டாலொழிய அழமாக நீடிக்கமுடியாது. பிடித்தால் சேர்ந்திருப்போம், தேவையான அளவுக்குக் காட்டிக்கொள்வோம், பயன்படும்வரை நட்புடன் இருப்போம் என ஒரு நட்பைத் தொடங்கினாலே அது கசப்புடன் முறிவதைத் தடுக்கவியலாது.

சுருக்கமாகச் சொன்னால், உறவுகளை ஒருபொருட்டாக நினைக்காத உள்ளம் கொண்டவராக இருந்தால், எல்லா உறவுகளும் அதற்கான குறைந்தபட்சத் தேவைக்கு மட்டுமே உரியவை என உணர்ந்து உணர்வுரீதியாக ஈடுபடாதவராக இருந்தால் சேர்ந்துவாழ்தல் உகந்த வழிமுறையாக இருக்கும்.
....
.....

பெண்ணும் ஆணும் தங்கள் உரிமைகளை, இடங்களை வரையறைசெய்துகொண்டால் திருமண உறவில் இல்லாத எந்த வசதி சேர்ந்துவாழ்வதில் உள்ளது? 
....
....
எந்நிலையிலும் ஆண்பெண் உறவு என்பது சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டதாக, கண்ணீரும் சிரிப்பும் நிறைந்ததாகவே இருக்கும். அதுவே அதன் அழகு. அதில் வெற்றியும் தோல்வியும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதெல்லாம் இல்லாத நேர்த்தியான வணிக ஒப்பந்தம்போல உறவை அமைத்துக்கொண்டால் என்ன சுவாரசியம்? சரி, அந்த உடலுறவேதான் எவ்வளவுநாள் சுவாரசியமாக இருக்கும்?

ஒப்புமை
”அன்பிலன் அறனிலன் எனப்படான்” (கலி 74:6)
“பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்” (நற் 160:2)

பரிமேலழகர் உரை
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும்.

இல்லறவாழ்க்கை இருபகட்டொருசகட் டொழுக்கம் போல்வ தாகலின், கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும் அறம் பயனும் ஆகும் என்பது நிரனிறை.

மணக்குடவர் உரை
இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இல் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - இல் வாழ்க்கை அன்பும் அறமும் உடைத்தாயின், அது பண்பும் பயனும் - அவ்வுடைமை (இல் வாழ்க்கையின்) பண்பும் பயனு மாம்.

அகலம்: ஈண்டும் இல் வாழ்க்கை என்றது இல் வாழ்வாரைக் குறித்து நின்றது. பண்பு -தன்மை. பயன்- ஊதியம். நச்சர் பாடம் ‘உடைத்தாய வில்வாழ்க்கை’ ; ‘பயனுந் தரும்’.

கருத்து: அன்புடைமையும் அறனுடைமையும் முறையே இல் வாழ்க்கை யின் பண்பும் பயனும் ஆம்.

Thirukkural - Management- Married Life
What is not there for a husband or what is missing in his married life, if his wife is virtuous?  That means a wife with all the positive qualities: passion, patience, politeness, participation, perspective, and positive thoughts. On the contrary, what does a husband have when his wife is not virtuous? What is available to him when his wife lacks passion, patience, politeness, participation, perspective, and positive thoughts?

When we look at married Me only from a husband's point of view, we will miss the other side. The same Kural can be adapted to include husbands also. What is not there for a wife or what is missing in her married life, if her husband is virtuous? That means a husband with all the positive qualities: passion, patience, politeness, participation, perspective,  and positive thoughts. On the contrary, what does she have when her husband is not virtuous? What is there when he lacks passion, patience, politeness, participation, perspective, and positive thoughts?

Two things make one's married life successful. One is love and the other is being virtuous. A couple's married life becomes meaningful and successful when the couple shower their affection on each other and express love to each other, assures Kural 45.


Love and virtue are the flower and fruit
Of domestic life.

Love and virtue are the founding pillars of a blissful married life. If the husband is true to himself and the wife is true to herself, the relationship  will take care of itself. The qualities and gains of amarried life are to have love and virtuous practices. 

English Meaning - As I taught a kid - Rajesh
In a married life, husband and wife play a major role. If husband and wife take care to ensure the foundations of a marriage viz, love/affection and the marriage dharma/duties/virtue pervade in the family life, then that marriage would have a character/meaning and fruit/result/progress/growth/success. Such a marriage is a blissed married life. 

Questions that I ask to the kid
What are essential for a meaningful and successful marriage?
What should pervade in a married life?

No comments:

Post a Comment