Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label உறுப்புநலனழிதல். Show all posts
Showing posts with label உறுப்புநலனழிதல். Show all posts

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

 

குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான

பசப்போ - பசப்பு -  பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்

பருவரல் - துன்பம்; பொழுது

எய்தின்றே - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

ஒள் - ஒள்ளொளி - மிகுந்தஒளி; oḷ   adj. bright, பிரகாசமான; 2. good, excellent, நல்ல; 3. beautiful, அழ குள்ள; 4. knowing, அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தது - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கண்டு காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் தழுவிக்கொண்டு இருக்கும்பொழுது ஏற்பட்ட இடைவெளியில் குளிர்க்காற்று உட்புகுந்துவிட்டது. அச்சிறுப்பிரிவை பொறுக்கமுடியாமல் தலைவியின் ஒளிபொருந்திய நெற்றி ஒளியிழந்தது. ஏனெனில் அச்சிறுப்பிரிவானாலும் கூட அவை பசலைநோய்/காதல்நோய் உற்றது. நெற்றி ஒளி இழந்ததை கண்டு தலைவியின் கண்களும் பசலைநோய் உற்று துன்பற்றது என்று தலைவி கூறுகிறாள். இணைந்திருந்த பொழுது ஏற்பட்ட சிறுபிரிவிற்கே தலைவியின் ஒவ்வொரு உறுப்புகளும் வாடின. தலைவன் இப்பொழுது பிரிந்து வேறெங்கோ சென்று உள்ளான். அப்படி இருக்கையில் தலைவியின் உறுப்புகள் எத்தனை துன்பம்கொள்கின்றனவோ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.).

மணக்குடவர் உரை
ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.

மு.வரதராசனார் உரை
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

 

குறள் 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.
இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

முயக்கிடைத்  -  தழுவுகையில் ஊடாக

தண் - குளிர்ச்சி; அருள்.

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை.

போழ - போழ்-தல் - pōl-   4 v. intr. [K. pōḻ.] 1.To be cleft, split; to gape; பிளவுபடுதல். (திவ்.இயற். திருவிருத். 87.) 2. To be disunited; பிரிவுபடுதல். (W.)--tr. 1. To split, cleave open;பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப(பதிற்றுப். 19, 2). 2. To pass through, crossover; ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர்கலவர் (நான்மணி. 18). 3. To dispel; to destroy;அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 2118).

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்

உற்ற -  adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்

பெரு - பெருமை
பெரு - பெரிய- பெரிதான; மூத்த; இன்றியமையாத.

மழைக் - மழை - மேகத்தினின்றுபொழியும்நீர்; நீருண்டமேகம்; காண்க:மழைக்கால்; நீர்; கருமை; குளிர்ச்சி; மிகுதி.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் கூடியிருந்த சமயங்களில், இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு (முயங்கி) இருந்தனர். அப்படி முயங்கி இருக்கையில் நடுவே ஒரு கணம் அவர்களுக்கு நடுவே ஒரு இடைவெளி விழ அதில் குளிர்க்காற்று உட்புகுந்து இருவரையும் சற்று பிரித்ததாம். இன்பம் சுவைக்கும் பொழுது அறிவு மயங்கிய அந்நிலையில் அந்த பிரிவை விரும்பாத பேதை தலைவியின் பெருமை வாய்ந்த குளுமையான கண்கள் பசலைநோய் உற்றன. அதாவது முயங்குதுலக்கு இடையே உள்ள சிறு பிளவையும் விரும்பாதவள் தலைவி. அச்சிறு பிரிவிற்கே காதல் நோய் வந்தது. அப்படி இருக்கையில், தலைவனை பிரிந்து இவ்வளவு காலம் வாடும் தலைவியும் அவளது கண்களும் என்னவாயினவோ?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே” (நற் 3:12)

“நெய்தல் உண்கண் பைதல் கூர” (நற் 113:7)

“கண்ணுந் தோளுந் தண்ணுறுங் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய” (நற் 219:1-2)

“பசலை யார்ந்தன குவளையங் கண்ணே” (குறுந் 13:5)

“பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே” (ஐங்குறு 16)
”உண்கண் பசப்ப தெவன் கொல் அன்னாய்” (ஐங்குறு 21)
”ஏதி லார்க்குப் பசந்தவென் கண்ணே (ஐங்குறு 34)
”கயலெனக் கருதிய உண்கண்
பயலைக் கொல்கா ஆகுதல் பெறினே” (ஐங்குறு 36)
”நயந்தோ ருண்கண் பயந்துபனி மல்க” (ஐங்குறு 37)
”பசப்பணிந் தனவான் மகிழ்நவென் கண்ணே” (ஐங்குறு 45)
”என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே” (ஐங்குறு 169)
”பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ” (ஐங்குறு 170)
”பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே” (ஐங்குறு 264)
”பனிமலர் நெடுங்கண் பசலை பாய்” (ஐங்குறு 477)
”கொன்றைப் பூவிற் பசந்த உண்கண்” (ஐங்குறு 500)

“பல்லிதழ் மலருண்கண் பசப்ப” (கலித் 45:11)
“பொன்னெனப் பசந்தகண்” (கலித் 77:12)
“பைதல வாகிப் பசக்குவ மன்னோஎன்
நெய்தல் மலரன்ன கண்” (கலி 142:22-3)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி).

மணக்குடவர் உரை
யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

மு.வரதராசனார் உரை
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

 

குறள் 1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

பெறுதியோ - பெறுதி -peṟuti   n. பெறு-. 1. Gain,profit; இலாபம். பெறுதி விரும்பினை யாகுவை (மணி.25, 115). 2. That which is sought to be got orreached; goal; அடையத்தகும் பொருள். மறைகளினிறுதி யறுதியிடவரிய பெறுதியை (திருப்பு. 928). 3.See பெறுமதி.

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்

நெஞ்சே - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel  

கொடியார்க்கு கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர் 

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

வாடு-தல் - vāṭu-   5 v. intr. [T. vāḍu, K.bāḍu, M. vāḍuga.] 1. To wither, fade, dry up;உலர்தல். பொதியொடு பீள்வாட (நாலடி, 269). 2.To be emaciated; to become weak; மெலிதல்.எந்தோள் வாட (கலித். 68). 3. To pine away,grieve; மனமழிதல். வாடினேன் வாடி வருந்தினேன்(திவ். பெரியதி. 1, 1, 1). 4. To turn pale; பொலிவழிதல். குழலியென் வாடிப் புலம்புவதே (திருக்கோ. 14). 5. To be defeated; தோல்வியடைதல்.வாடாவஞ்சி தலைமலைந்து (பு. வெ. 3, 1, கொளு). 6.To perish; கெடுதல். காரிகை பெற்றதன் கவின்வாட(கலித். 124). 7. To be removed; நீங்குதல். சூலமும் . . . கரத்தினில் வாடாதிருத்தி (கல்லா. 87, 29).8. To diminish, decrease; குறைதல். வாட்டருஞ்சீர்க்கண்ணகி நல்லாளுக்கு (சிலப். 9, 40). 9. To fallshort in weight; நிறைகுறைதல். Loc.

வாடு - vāṭu   n. வாடு-. Faded flower;வாடற் பூ. ஈங்கைவா டுதிர்புக (கலித். 31).

தோட் - தோள் - புயம்; கை; தொளை

பூசல்  - போர்; பேரொலி; பலரறிகை; கூப்பீடு; வருத்தம்; ஒப்பனை.

உரைத்து - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

முழுப்பொருள்
ஓ நெஞ்சே! நான் தலைவனின் பிரிவால் வாடுகிறேன். என்னை பிரிந்து சென்ற அந்த கொடியாரிடம் பிரிவால் என் மெல்லிய தோள் வாடி உள்ளது என்று என் வருத்தத்தை பேரொலியாக உரைப்பாயோ? அப்படி உரைப்பதனால் நீ அழகும் பெருமையும் அடைவாயோ? அதாவது நீ கூறிவிட்டால் அவர் வந்துவிடுவாரா என்ன? வருபவர் என்றால் இந்நேரம் வந்திருப்பார் அல்லவா? நீ சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன? என்று தலைவி நெஞ்சை கேட்கிறாள்.

அதனால் தான் கேட்கிறேன் நெஞ்சே, என் மெல்லிய தோள் தலைவனின் பிரிவால் வாடிஉள்ளது என்று கூறினால் நீ என்ன பெருமை பெறுவாய் என்று?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை. ('கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'? என்றாள்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?. இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?.

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

குறள் 1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.

தொடியொடு - கைவளையல்களுடன் 

தோள் - புயம்; கை; தொளை.

நெகிழ - நெகிழ்தல் - குழைதல்; மெலிதல்; பொசிதல்; பொடியாதல்; மலர்தல்; இளகல்; கட்டுத்தளர்தல்; மனமிரங்குதல்; நிலைகுலைதல்; நழுவல்; விட்டுநீங்குதல்.

நோவல் - நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம்.

அவரை - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

கொடிது  - கொடியது. தீங்கு விளைவிப்பது.

கொடியர் - கொடுமை விளைவிப்பவர். கொடுமையானவர் 

எனக் என -  என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

கூறல் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.

நொந்து - நொந்துதல் - அழிதல்; தூண்டுதல்.

முழுப்பொருள்
பிரிந்து சென்றுள்ளான் தலைவன். அப்பொழுது பிரிவு தந்த காமநோயால் தலைவியின் தோள்கள் மெலிந்து அவள் பூண்டிருந்த தோள்வளையல்கள் கழன்று கீழே விழுந்துவிட்டன. வளையகள் அல்லாத மெலிந்த பொலிவற்ற தோள்களை காணும் உறவினர்களும் ஊராரும் இவளுக்கு இந்த அவநிலையை கொடுத்த தலைவனை கொடியவன் என்று பழிக்கின்றனர். 

தலைவன் தலைவியை பிரிந்துள்ள பொழுது தலைவிக்கு தலைவன் மேல் ஆயிரம் கோபங்களும் வருத்தங்களும் இருந்தாலும் பிறர் தலைவனை பழிப்பதை அவள் விரும்பவில்லை. அவள் காதல் அதை ஏற்கவில்லை. ஆனால் இத்தகைய இந்த வருத்தமும் அவளுக்கு மேலும் மனசுமையை தரும். நொந்துவிடுவாள். ஆதலால் மேலும் மெலிவாள். 

இது பிரிவுக்கு என்றில்லை, பொதுவாகவே தலைவன் தலைவி வருந்ததக்க வண்ணம் எது செய்தாலும் (உதாரணமாக கடன் அதிகம் வாங்குவது, உடலை பார்த்துக்கொள்ளாது உடலை கெடுத்துக்கொள்வது, வரவுக்கு மீறி செலவு செய்வது, கெட்ட / தீய பழக்கங்களும் கூடா நட்பு கொள்வது, விலைமகள் சகவாசம் கொள்வது, சூதாடுவது, குழந்தைகளை பேணி வளர்க்காதது என்று பல) அது அவள் உடலை பாதிக்கும். அவள் மெலிந்துவிடுவாள். ஆதலால் தலைவன் தலைவி வருந்தாத வண்ணம் நடந்துக்கொள்வது அவனுடைய அறம் / கடமை/ தருமம் ஆகும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
1.” நெடுமென் பனைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந்து” (குறுந்.185:2)
2. “தொடி நெகிழ்ந் தனவே தோள்சா யினவே” (குறுந் 239:1)
3. ஒந்தொடி நெகிழச் சாஅய்
மென்தொள் பசப்பது எவன்கொல் அன்னாய்” (ஐங்குறு 28:3-4)
4. திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்” (அகநா 387:1)


பரிமேலழகர் உரை
(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.).

மணக்குடவர் உரை
வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து. இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது

மு.வரதராசனார் உரை
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

குறள் 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
கொடியkoṭiya   pollaata பொல்லாத harmful, cruel  

கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர் 

கொடுமை  - கடுமை; முருட்டுத்தன்மை; தீமை; வளைவு; மனக்கோடடம்; அநீதி; பாவம்; வேண்டாதசொல்.

உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

தொடி வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண்.

தொடியொடு - கைவளையல்களுடன் 

தொல் - பழைய; இயற்கையான

கவின் - அழகு

வாடிய - வாடுதல் - உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல்.

தோள் - புயம்; கை; தொளை.

முழுப்பொருள்
தலைவன் தலைவியைவிட்டு வேலை நிமித்தமாகப் பிரிந்துச் சென்றுள்ளான். அப்பிரிவுத் தலைவிக்கு ஆற்றும் துன்பம் எவ்வாறு அவள் உடலையும் வருத்துகிறது என்கின்றது இக்குறள். 

முன்பு காதல் இன்பம் தந்த தலைவன் இப்பொழுது தலைவியை பிரிந்துள்ளதால் அப்பிரிவு துன்பத்தை தலைவிக்கு தந்துள்ளதால் இப்பொழுது தலைவிக்கு பொல்லாதவனாகவும் கொடியவனாகவும் ஆகிவிடுகிறான். பிரிவு தந்த துன்பத்தால் மனதால் வாடுகிறாள். மனதின் வருத்தம் அவள் உடல் மெலிய காரணம் ஆகிவிடுறது. அவள் முன்னர் இயற்கையாக அழகினை கொண்ட தோள்கள் இப்பொழுது மெலிந்து விட்டதால் கைவளையல்கள் அவள் கைகளை விட்டு நழுவுகின்றன.இவ்வுடல் மெலிவு தலைவன் புரிந்த கொடுமையான செயலான பிரிவை (தலைவியை பிரிந்து சென்றதை) இவ்வுலகுக்கு பறைசாற்றிவிடும் என்று தலைவி கூறுகிறாள்.

குறுந்தொகை (239:1) வரி, “தொடி நெகிழ்ந் தனவே தோள்சா யினவே” என்கிறது. 

ஐங்குறுநூறு (28:3-4) வரிகள், “ஒண்தொடி நெகிழச் சாஅய் மென் தோள் பசப்பது எவன்கொல் அன்னாய்”.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியோடு தொல் கவின் வாடியதோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை? ('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும். இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

குறள் 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
பணை - பருமை; பெருமை; மரக்கொம்பு; மூங்கில்; அரசமரம்; மருதநிலம்; வயல்; நீர்நிலை; குதிரையானைகள்தங்குமிடம்; விலங்கின்படுக்கை; முரசு; வாத்தியம்; மருதநிலப்பறை; உயரம்; பரண்; தவறுகை; ஐந்துஆண்டுகொண்டகாலவளவு; சாணைக்கல்; உலைக்களத்துப்பட்டடை; யானைத்தந்தம்.

நீங்கிப்  - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

பைந்தொடி - பொன்வளையல்; பெண்

சோரும் - சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல்.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

நீங்கித் நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

தொல் - பழைய; இயற்கையான

கவின்  - அழகு

வாடிய - வாடுதல் உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல்.

தோள் - புயம்; கை; தொளை.

முழுப்பொருள்
தலைவி தன்னுடைய பெருமைப் படக்கூடிய அழகினை இழந்துள்ளாள். பிரிவின் துன்பத்திலும் வருத்தத்திலும் மெலிந்துள்ளதால் அவள் கைகளில் இருந்த பொன்வளையல்கள் அவள் கைகளில் இருந்து நழுவுகிறது. மேலும் அவள் மேனியில் இருந்த ஒளி குறைந்துள்ளதால் அதில் இருந்து ஒளி பெரும் பொன்வளையல்களும் இப்பொழுது ஒளியிழந்து சோர்வாக காணப்படுகின்றன. ஏனெனில் தலைவனை பிரிந்துள்ள தலைவி துன்பத்தால் வாடுகிறாள். அதனால் அவள் இயற்கையாக அழகுபடைத்த அவளுடைய தோள்களும் பொலிவிழந்துவிட்டன. 

பிரிவினால் வாடுவதால் இயற்கை அழகும் தன்னை விட்டு போய்விட்டது உடலும் மெலிந்துவிட்டது அழகுக்கு அழகு சேர்க்கும் ஆபரணங்களும் அழகு சேர்க்கவில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. (பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன. 

தணந்தமை சால அறிவிப்ப

குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
தண-த்தல் - taṇa-   12 v. intr. 1. To depart,go away; நீங்குதல் தங்குதீமல நாளுந் தணந்திடும்(பிரமோத். 10, 38). 2. To go; to pass; போதல் --tr. 1. To put away, remove; நீக்குதல் மெலிவைத்தணப்பான் (தணிகைப்பு. கள 340). 2. To leave,separate from; பிரிதல் தணந்தமை சால வறிவிப்பபோலும் (குறள், 1233).

தமை - tamai   n. T. tami. Passion,desire; ஆசை அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது. 

தணந்தமை - அவர் நீங்கியதை

சால - மிகவும்

அறிவிப்ப - அறிவிக்கை, அறிவிப்பு , விளம்பரம்

போலும் - ஓர்அசைச்சொல்; ஐயப்பாட்டைக்குறிக்குஞ்சொல்.

மண-த்தல் -  maṇa-   12 v. intr. 1. To beunited, mingled; கலத்தல். அறையும் பொறையுமணந்த தலைய (புறநா. 118). 2. To come together;வந்து கூடுதல். நிரை மணந்த காலையே (சீவக. 418).3. To happen; நேர்தல். மருவுற மணந்த நட்பு (கலித்.46). 4. To be fixed, attached; பொருந்துதல்.மத்தகத் தருவியின் மணந்த வோடைய (சீவக. 2211).5. To emit fragrance; கமழ்தல். மணந்த சோலையும் (அரிச். பு. விவாக. 98). 6. To shine; விளங்குதல். தேவர் மகுட மணக்குங் கழல் வீரா (திருப்பு.527).--tr. 1. To wed; மணம் புரிதல். மணந்தார்பிரிவுள்ளி (நாலடி. 397). 2. To copulate with;புணர்தல். (பிங்.) மாசில்வண் சேக்கை மணந்தபுணர்ச்சியுள் (கலித். 24). 3. To live in companywith; கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்னதகையவாய் (கலித். 25). 4. To embrace; அணைத்தல். திருந்திழை மென்றோள் மணந்தவன் (கலித்.131).

மணந்த -  கூடிய ; கலந்த ; மணம் புரிந்த ; அணைத்த

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

வீங்கிய - வீங்குதல் - பருத்தல்; பூரித்தல்; வீக்கமுறுதல்; வளர்தல்; மிகுதல்; நெருங்குதல்; இறுகுதல்; விறைப்பாய்நிற்றல்; மேனோக்கிச்செல்லுதல்; மெலிதல்; ஏக்கங்கொள்ளுதல்; தூங்குதல்.

தோள் - புயம்; கை; தொளை.

முழுப்பொருள்
தலைவனுடன் கூடிய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்த பொழுது பூரித்திருந்த தலைவியின் தோள்கள் இன்று தலைவன் பிரிந்து இருக்கும் பொழுது பிரிவாற்றாமையால் துன்புற்று மெலிந்து காணப்படுகின்றன. தலைவன் தன்னை பிரிந்து இருக்கிறான் என்பதை அவளது பொலிவிழந்த தோள்கள் இவ்வுலகிற்கு பறைசாற்றுகிறது. 

தலைவன் நீங்குகையில் தலைவி தோள்கள் நெகிழ்வதைக் குறுந்தொகைப் பாடல் இவ்வாறு கூறுகிறது.

“மணப்பின் மாணலம் எய்தித் 
தணப்பின் ஞெகிழ்ப தடமெந்தோளே” (குறுந்தொகை:299:7-8)

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன. கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.

நயந்தவர் நல்காமை சொல்லுவ

குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயந்தவர் - நயந்தோர் -nayantōr   n. id. (பிங்.) 1.Friends, companions; மித்திரர். 2. Husband,as one who loves; கணவர்

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

ஆமை - கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்

நல்காமை - விரும்பாதவர்

சொல்லுவ - colluvāṉ-kuṟippu   n. சொல்¹- +. Speaker's aim or intention;கூறுவோன் கருத்து

போலும் - போன்று

பசந்து - pacantu   n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior kind of Mango fruit; உயர்ந்த மாம்பழம் உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.

பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

பனி - குளிர்ந்துவிழுந்துளி; காண்க:பனிக்கட்டி; குளிர்:குளிர்ச்சிநீர்:கண்ணீர்; மழை; மஞ்சு; இனிமையானது; அச்சம்; நடுக்கம்; நோய்வகை; சுரம்; துன்பம்.

வார்  - நெடுமை; கடைகயிறு; தோல்வார்; நுண்மை; நேர்மை; வரிசை; உயர்ச்சி; நீர்; தோல்; முலைக்கச்சு; துண்டு.

வாரும் - வார்-தல் - vār-   4 v. intr. 1. To flow,trickle; ஒழுகுதல். நெய்வார்ந்தனைய திண்கோல்(சீவக. 1697). 2. To spread, overflow; வெளிவிடுதல். நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 3. Tobe long; நெடுமையாதல். வார்மயி ருளரினள் (அகநா. 102). 4. To be upright; நேராதல். வார்ந்திலங்கு வையெயிற்று (குறுந். 14). 5. To rise high;உயர்தல். (பிங்.) 6. To be in order; to bearranged in order; ஒழுங்குபடுதல். மணல்வார் புறவில் (மலைபடு. 48). 7. To form milk, as grain;நென்மணி முதலியன பால்கட்டுதல். ஐவன வெண்ணெல் பால்வார்பு கெழீஇ (மலைபடு. 114). 8. Topeel off; உரிதல். பீலி வார்ந்து (அகநா. 69).--tr. 1.To comb, as hair; மயிர் கோதுதல். வாருறு வணரைம்பால் (கலித். 58). 2. To know; தெரிதல்.(சது.)

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
தலைவியை முன்பு காதலித்த தலைவர் இப்பொழுது அன்பு பாராட்டாமல் இருக்கிறார். இதனால் தலைவி (பசலை நோயினால்) துன்புற்றாள். இந்த துன்பத்தை அவளுடைய கண்கள் ஒளியிழந்து கண்ணீர் சொட்டி இவ்வுலகிற்கு கூறுகின்றன.

முன்பு விரும்பியவர் இப்பொழுது நம்மை விரும்பவில்லை என்றால் தலைவியின் மனம் மட்டும் வருந்தவில்லை. அவளுடைய உறுப்புகளும் துன்பத்தில் வருந்தி அதன் நலன் கெடுகிறது. 

மேலும் 
இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே

எனும் சரசுவதி அந்தாதி (கலித்துறை பாகம் 6) சரசுவதியைத் துதிப்பவர் நிலையைக் கூறுகிறது

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

முயங்கிய கைகளை ஊக்கப்

குறள் 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
முயங்கிய  - முயக்கம் -  muyakkam   n. முயங்கு-. 1.Embrace; தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் (குறள், 913). 2. Copulation; புணர்ச்சி.முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை). 3. Connection; uniting, joining; சம்பந்தம். ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).

கைகளை - கைகள் தனை

ஊக்க - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல்.

பசந்தது - பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல்.

பை - ஓர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ); நிறம்; அழகு; பசுமை; இளமை; உடல்வலி; துணி, தோல்முதலியவற்றால்அமைந்தகொள்கலம்; பாம்புப்படம்; குடல், மூத்திரப்பைமுதலியஉடல்உறுப்பு; நாணயவகை.

தொடி - toṭi   n. தொடு²-. 1. Curve, bend;வளைவு. தொடிவளைத் தோளும் (சிலப். 10, 128). 2.Bracelet; கைவளை (பிங்.) குறுந்தொடி கழித்தகைச்சாபம் பற்றி (புறநா. 77). 3. Armlet;தோள்வளை.நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து . . . போக்கில்பொலந்தொடி (நற். 136). 4. Armlet, warrior'sarmlet; வீரவளை வலிகெழு தடக்கை தொடியொடுசுடர்வர (மதுரைக். 720). 5. [T. toḍi.] Ring,ferrule, ornamental knob of an elephant's tusk;பூண். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). 6.Circular projections in stone-wells serving assteps; பாறைக்கிணறுகளில் படியாக உதவ வெட்டப்படும் சுற்றுவட்டம். Loc. 7. A standard weight.See பலம் தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள்,1037).  
பைந்தொடி -  s. A bracelet, an orna ment of the arm, கைவளை. 2. See தொடி.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை அன்பினால் இறுகத் தழுவிக் கொண்டு இருக்கிறான். அதனில் மெய்மறந்துள்ளாள் தலைவி. தலைவன் தான் தலைவியை சற்று இறுகத் தழுவியுள்ளதை உணர்ந்து தலைவிக்கு வலிக்குமே என்று தன் கைகளை மெல்ல சற்று தளர்த்தினான். அப்போது, தலைவியால் தலைவனின் கைகள் சற்று விலகியதை கூட தாங்கமுடியவில்லை. அதனால் பொன் வளையங்களை அணிந்த இந்தப் பேதை தலைவியின் அழகிய நெற்றியின் ஒளி குறைந்து பசலை நிறம் தழுவியது!

தலைவனின் பிரிவை சற்றும் (இம்மி அளவுக்கூட) தாளமுடியாத தலைவியின் அன்பை காட்டுகிறது. அதுமட்டும் இன்றி இதற்கு முன் அவள் அனுபவித்த பிரிவு தந்த துயரின் ஆழத்தையும் நினைவு படுத்துகிறது.

ஒப்புமை
”பைபயப் பசந்தன்று நுதலும்”  (அகநா.95:1)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.

மு.வரதராசனார் உரை
தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

சாலமன் பாப்பையா உரை
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்

குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
[காமத்துப்பால், கற்பியல்,  உறுப்புநலனழிதல்]

பொருள்
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை; கழிகாமம்

நமக்கு -  நமக்கு

ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல்.

ஒழிய - தவிர;  நீங்க; கெட.

ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease']

நமக்கொழியச்  - நமக்குக் கிடையாது

சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.

சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
சென்றார் - சென்றவர்

சேட்சென்றார் - அகல தொலைவிற்கு சென்றவர்

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளி - நினைத்து

நறுமை - நன்மை; நன்மணம்.

நறுமணம்- நல்ல வாசனை,சுகந்தம்,மணப்பு,நறவு,குரவு

நறுமலர் - வாசனை கொண்ட மலர்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணின - நாணுதல், உடல் கூச்சங்கொள்ளுதல், To be influenced unfavorably as some trees or plants by nearness to the cocoa; to be uncongenial, to each other, as the red and white lotus, பிணங்க

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
கண்ணே உன் கண்களை காணும் மலர்கள் அனைத்தும் நாணம் கொள்ளும். அவ்வளவு அழகு நீ! அவ்வளவு அழகு உன் கண்கள். ஆனால் காதலர் உன்னைவிட்டுப் பிரிந்து தொலைவாகச் சென்றுவிட்டார். அதனை நினைத்துக்கொண்டு (உள்ளி) இருந்தால் நீ நோய் கொள்வாய் துன்பம் கொள்வாய். ஆதலால் உன் கண்கள் அழகிழக்கும். அதனால் உன்னைப் பார்த்து நாணம் கொண்ட மலர்களைப் பார்த்து நீ நாணம் கொள்ளும் நிலைமை வரும். ஆதலால் அத்தகைய துன்பம்(சிறுமை) நமக்கு (பெண்களுக்கு) தகாது (ஒழிய). ஆதலால் நீ அழலாமோ ? (என்று தோழி கூறுகிறாள்)

முழுப்பொருள்2: இக்குறளுக்கு முன்பு ஒருமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை சற்று தாமதமாகவே கண்டு உள்ளேன். ஆதலால் அதை இங்கே பதிவு செய்து பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

கணவர்(தலைவர்/காதலர்) மனைவியை (தலைவி/காதலி) விட்டுத் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு / நாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்று உள்ளார்.

அப்படி சென்று இருக்கையில் மன வருத்தமும், துன்பமும், (மன)நோயும் மனைவியான எனக்கு மட்டும் தான். அவருக்கென மன வருதம் ஏதுமில்லை 
(ஏன் என்றால் அவர் தான் வேறு வேலையாக அங்கு இருக்கிறாரே. என்னை பிரிந்த எண்ணம் அவருக்கு இல்லை - என்று நாம் புரிந்து கொள்ளலாம் - நமக்கொழியச் என்று குறியமையால்). 

அப்படி துன்பத்தில் வாடும் எனது மனது அவரையே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படி நினைத்துக்கொண்டு அவரை ஏங்கி துன்பத்தில் அழுது வாடுகையில் என் கண்கள் ஒளி இழந்து, பொலிவிழந்து இருக்கின்றன. 

அத்தகைய அழுது வாடிய கண்கள் இன்று ஒரு நறுமலரை காண கூட கூசுகிறது, நறுமலரை அழகு என்று நினைகிறது. நறுமலரில் மயக்கும் வாசனை உள்ளது என்று நினைகிறது. இது எத்தனை பெருங்கொடுமை அவளுக்கு ?

ஏன் நறுமலர் மேல் நாணம் கொள்வது ஒரு பெருங்கொடுமையாக சொல்லபடுகிறது என்றால், முன்பு ஒரு காலத்தில் நறுமலர்கள் இவள் அழகை கண்டும் இவள் மேல் உள்ள வாசனையை நுகர்ந்தும் இவளை கண்டு வெட்கபட்டன. ஆனால் இன்றோ அப்படியே தலைகீழாக நடக்கிறது. இவள் நறுமலரை கண்டு ஆச்சர்யப்படுகிறாள். இவள் கண்கள் வெட்கபடுகின்றன, கூசுகின்றன.

இவ்விளக்க உரை ஆசிரியரின் கேள்வி :
இப்படி பெருங்கொடுமை ஆற்றி வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள கணவன்மார்களை என்ன செய்யலாம் ?



பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகள்தன் கண்ணும் , தோளும் , நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல் . இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின் , பொழுது கண்டு இரங்கலின் பின் வைக்கப்பட்டது.]

(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன. (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)

சிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)

மணக்குடவர் உரை
நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.

மு.வ உரை
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

சாலமன் பாப்பையா உரை
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்
கண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்
நாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது
நளின விழி தனைக் கண்டால் என்று என்றும்
வானளவு புகழ்ந்திட்ட காதலர்தாம்
வரவில்லை என்பதனால் விழியிரண்டும்
ஆன மட்டும் அழுதழுது அழகிழக்க
ஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து


உனை நினைத்து கலங்கிய... 

என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய...
கண்கள் அழகிழந்து
விட்டதடா ...!!!

உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ
அழகிழந்து இருக்கும் கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!