Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label சுற்றந்தழால். Show all posts
Showing posts with label சுற்றந்தழால். Show all posts

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்


குறள் 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
உழைப் - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

உழைப் - (வி)உழைஎன்னும்ஏவல், பாடுபடு.

உழைப் – சுரத்தில் மத்தியமம் (நடு சுரம்), கார்காலம் (நடுவிலே அல்லது துன்பம் வந்த காலத்து)

உழைதல் - துன்பமுறல்; இரைதல்.

பிரிந்து - பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

காரணத்தின் - காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

வந்தானை - வந்தான் - வருதல்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

இழைத்து - நுட்பமாக
இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல்

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

எண்ணிக் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்

முழுப்பொருள்
உழை என்பது ஏழு சுரங்களில் மத்திய சுரத்தைக் குறிப்பது. அதாவது நடுவிலே இருப்பது.இச்சொல் கார்காலத்தையும் குறிக்கும். ஒரு வேந்தனுக்கு கார்காலம் போல முடங்கிய காலத்தில் அவனை விட்டுப் பிரிந்து சென்றவர் என்று பொருள் கொள்ளலாம். அல்லது, நடுவிலேயே தன் சுற்றமாகிய வேந்தனைப் பிரிந்து சென்றவர் என்றும் பொருள் கொள்ளலாம். 

இக்குறள் மன்னராட்சியில் இருக்கும் மன்னர்களுக்கு, இன்றைய மக்களாட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு, வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கு, அலுவகத்தில் உள்ளோருக்கு என எல்லோருக்கும் பொருந்தும் குறள்.

ஒருவரின் (அரசரின்) துன்பகாலத்தில் அல்லது முக்கியமான தருணங்களில் அல்லது அன்றாட தருணங்களில் நடுவே தன் சுயநலத்திற்காக ஒருவர் பிரிந்து சென்றுவிடுவார். அப்படி பிரிந்து சென்ற ஒருவர் மறுபடியும் ஏதோ ஒரு காரணத்தை பொருட்டு மீண்டும் (அரசனிடம்) வந்து சேரக்கூடும். அப்படி மறுபடியும் வந்தவரை பொறுமையாக கையாள வேண்டும். அவரை நுட்பமாக ஆராய்ந்து அவருடைய எண்ணங்களை நுண்ணிதாக ஆராய்ந்து பின்பு தேவையெனில் பிறருடன் நன்கு ஆலோசித்து எண்ணி முடிவு செய்தல் வேண்டும். காரணமும் நபரும் நன்றாக இருப்பின் சேர்த்துக்கொள்ளலாம்.

நமது வீடுகளில் நமக்கு ஒரு துன்பக்காலம் அல்லது உதவி என்றால் நம்மைவிட்டு பிரிந்துவிடுவர் சொந்தங்கள். ஆனால் நமது நிலைமை முன்னேறினால் மீண்டும் வருவர். அப்படி வந்தார் என்றால் அவருடைய எண்ணம் என்னவென்று நன்கு கருத வேண்டும். நாம் சுயேட்சையாக முடிவு செய்யாமல், நமது வீட்டில் உள்ள பெரியோர்கள் (பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா) உடன் ஆலோசிப்பது நன்று. நமக்கு தெரிய யதார்த்தம் அவர்களுக்கு அனுபவம் மூலம் இருக்கும். அவர்கள் குறைந்தது ஒரு எச்சரிக்கைகளை எல்லைகளை கூறுவர். ஆங்கிலத்தில் binary என்று கூறுவார்கள். 0 (பூஜ்ஜியம்) அல்லது 1 (ஒன்று) என்று இல்லாமல். நடுவில் கூட இருக்கலாம் என்று எல்லைகளை வகுப்பர். மீண்டும் சில காலம் பழகியப்பின்பு, அவர்களின் நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்த பிறகு, அவர்களின் எண்ணம் நமக்கு நன்கு தெளிவாகும். எண்ணங்கள் நன்றாக இருப்பின் அவர்களை 1 (ஒன்று) என்ற சகஜ நிலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். இது அலுவலகம், வணிகம், வணிக உறவுகள், கட்சி என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
(வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், அது செய்யாமற் போய்ப் பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக.

மு.வரதராசனார் உரை
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்


குறள் 529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

ஆகித் - ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்.

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்

அமராமைக் -  நீங்கிய ; விரும்பாத; பொருந்தாத

காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

இன்றி - இல்லாமல்

வரும் - வந்து சேரும் 

முழுப்பொருள்
நம்முடன் உற்ற உறவாக இருந்த நமது சுற்றம் (சான்றோர்கள், நண்பர்கள், உற்றார்கள், வேண்டியவர்கள்) நம்முடைய ஒரு குற்றத்திற்காக அல்லது ஒரு தவறுக்காக அல்லது ஒரு கேடான பழக்கத்திற்காக நம்மை விரும்பாமல் நம்மை துறந்தது நீங்குவர். அப்படி அவர்கள் நீங்கியதற்கான காரணத்தை (அதாவது அமராமைக் காரணம்) கண்டறிந்து அவற்றை நம்மிடம் இல்லாத வண்ணம் (காரணம் இன்றி) நம்மை மாற்றிக்கொண்டால், விலகிச்சென்ற அச்சுற்றம் நம்மிடம் மறுபடியும் வரும். 

நண்பர் தவறு செய்யும் பொழுது அவரை விட்டு விலகுவது சரியா? என்றால். ஒரு விதத்தில் சரியே. நமது விலகல் அவரை சிந்திக்க வைக்கக்கூடும். அது ஒரு மனோத்தத்துவ சிகிழ்ச்சையாகவே எனக்குப் படுகிறது. ஆனால் தவறு செய்த நண்பர் அதைத் திருத்திக்கொண்டால் அவரை மன்னித்து எற்றுக்கொள்வதும் நமது கடமையாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய்வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், அமராமைக் காரணம் இன்றி வரும்-அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.).

மணக்குடவர் உரை
முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல் அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும். இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்


குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கான் - நோக்காமல் இருப்பவர்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வரிசைசெய்தல் - மரியாதைசெய்தல்;

வரிசையா - வரிசை - ஒழுங்கு; நிரையொழுங்கு; வேலைமுறை; அரசர்முதலியோரால்பெறுஞ்சிறப்பு; அரசசின்னம்; மரியாதை; மேம்பாடு; தகுதி; பாராட்டு; நல்லொழுக்கம்; நன்னிலை; சீராகச்செய்யும்நன்கொடை; வீதம்; ஊர்வரிவகை; பயிர்விளைவில்உழவனுக்குரியபங்கு.

நோக்கின் நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

நோக்கி  - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வார் - வாழ்கிறார்

பலர் - அநேகர்; சபை.

முழுப்பொருள்
எல்லோரையும் சமமாக காணவேண்டும், எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே விதி. அது சரியானதும் கூட. ஆதலால் சுற்றத்தார் எல்லோரையும் ஒன்றுப்போல் கருதாமல், தகுதியும், திறமையும் (அதற்கு ஏற்ற பணிவும்) உடையோரை மரியாதை செய்யும் அரசனின் அருகில் தகுதியும் திறமையும் உடைய பல சான்றோர்கள் மன உவந்து விரும்பி மொய்ப்பர். அப்படி தகுதியும் திறமையும் அனுபவமும் உடையோர் அரசனின் அருகில் இருக்கும் பொழுது அவரால் மிக திறமையாக ஆட்சி/நிர்வாகம் செலுத்த முடியும். ஆட்சி சரிவர நிர்வகிக்கபட்டால் நாடும் முன்னேறும், மக்களும் வளம்படுவர். அதனால் அம்மன்னனை மக்களும் மிக விரும்புவர். கல்விக்கும் தகுதிக்கும் எற்ற மதிப்பை கொடுப்பது அவசியம்.

அதுவே திறமை உடையோரை மற்ற எல்லோரையும் போல் சமமாக நடத்தினால் பின்பு அவர்கள் திறமைக்கு என்னதான் மதிப்பு? அவர்களும் மற்றவர்கள் (/கல்லாதவர்கள் / திறமையில்லாதவர்) போல் அரசனுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பர். அது அரசனுக்குப் பின்னடைவே. அரசனால் தனிமனிதனாக ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு நிபுணத்துவம் வாய்ந்தோரின் துணை மிக அவசியம். அதற்கு அவர்களை மரியாதை செய்தல் அவசியம். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண்.217)
“பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி” (புறநா.6:16)
“வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை” (புறநா.47:6)
“தத்தம் வரிசையான் இன்புறூஉம் மேல்” (நான்மணி 66)

“ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே” (புறநா.121)

பரிமேலழகர் உரை
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

குறள் 527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
காக்கை - காகம்; அவிட்டநாள்

கரவு - மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை

கரவா - மறைக்காது 

கரைந்து - கரைதல் - கரைந்துபோதல்; உருகுதல்; இளைத்தல்; அழைத்தல்; சொல்லுதல்; அழுதல்; உருவழிதல்; ஒலித்தல்; வருந்துதல்; காக்கையின்கூப்பீடு

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

ஆக்கமும் - ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

நீரார்க்கே - குணம் படைத்தவர்க்கு 

உள - உள்ளது

முழுப்பொருள்
காக்கை உணவை மறைத்துவைத்தோ அல்லது தனிமையில் உண்ணாது. காக்கை உணவை மறைத்துவைக்காமல் பிற காகங்களை சத்தமிட்டு அழைத்து பகுத்துண்ணும். இவ்வாறு செய்வதால் எல்லா காகங்களுக்கும் உணவு கிடைக்கிறது. ஆதலால் எல்லா காகங்களும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  இப்படி பகுத்துண்டு வாழ்வதால் அவர்கள் உறவும் பலப்படுகிறது. ஒருவருக்கொருவர் ஒத்துமையாய் இருக்கின்றனர். 

அதுப்போல மனிதர்களும் தன்னுடைய செல்வத்தை மறைத்துவைக்காமல் பிறரிடம் பகிர்ந்து அளித்து வாழ்ந்தால் அவர்களிடம் செல்வம் எப்பொழுதும் இருக்கும். பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதே செல்வம். தனித்து மறைத்து வைப்பதற்கு அல்ல செல்வம். அத்தகைய தன்மை உடையவர்களுக்கே, வளம், பகையின்மை, நல்லுறவு, பெருமை ஆகிய எல்லாச் செல்வங்களும், இருக்கும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். 'அப்பெற்றித்தாயஇயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.).

மணக்குடவர் உரை
காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும். அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது. இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.

மு.வரதராசனார் உரை
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

சாலமன் பாப்பையா உரை
காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
A crow never conceals/hides its food. It doesn't eat alone. It always cries out for company. Wealth and progress too stays only with those of such quality (that of crow).  Like a crow shares its food with others, one has to share his/her food, wealth, progress, knowledge etc. with others.  Wealth, food, knowledge are not meant to be hidden. They are meant to be shared. Only those who share their wealth without hiding with all have more wealth, no enmity/jealous from others, good relationships, fame etc. 

Questions that I ask to the kid
Should we be like a crow in any respect? If so or not why? What is the consequence of being or not being so?

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

குறள் 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
பெருங்கொடை - எல்லோருக்கும் ஏராளமாகக் கொடுக்கை.
பெருங்கொடையான் - எல்லோருக்கும் ஏராளமாகக் கொடுப்பவன் .

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்

பேணான் - போற்றாதவன் ; விரும்பாதவன் ;

வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்

அவனின் - அவனிடம்

மருங்கு - பக்கம்; விலாப்பக்கம்; இடை; வடிவு; எல்லை; இடம்; சுவடு; சுற்றம்; குலம்; ஒழுங்கு; செல்வம்; நூல்.

உடையார் -  உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.- 

இல் - இல்லை

முழுப்பொருள்
இவ்வுலகில் எல்லோருக்கும் ஏராளமாகக் கொடுக்கும் பெருங்கொடையாளனின் குணத்தையும் சினத்தை (கோபத்தை) / வெறுப்பை விரும்பாதவனையும் உறவினர்களும் நண்பர்களும் சுற்றத்தாரும் சூழ்ந்து இருப்பார்கள். இவ்வுலகில் அவனை போன்று சுற்றம் உடையவர்கள் வேறில்லை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.
(மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.).

மணக்குடவர் உரை
மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை. இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.

மு.வரதராசனார் உரை
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்

குறள் 525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கொடுத்தலும் - கொடுத்தல் - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொலும் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அடுக்கிய - அடுக்குதல் - அடுக்கல்; ஒன்றன்மேல்ஒன்றாகவைத்தல்; வரிசைப்படவைத்தல்.

சுற்றத்தால் - சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

சுற்றப்படும் - சுற்றுதல் - சுற்றிவரல்; சுழன்றுசெல்லுதல்; வளைந்தமைதல்; கிறுகிறுத்தல்; மனங்கலங்குதல்; தழுவுதல்; விடாதுபற்றுதல்; சூழ்ந்திருத்தல்; வளையச்சூடுதல்; வளையக்கட்டுதல்; சுருட்டுதல்; சிந்தித்தல்; அலைதல்; உடுத்துதல்; சுழற்றுதல்; கம்பிகட்டுதல்; வஞ்சித்தல்:கைப்பற்றல்.

முழுப்பொருள்
தன்னுடைய சுற்றத்திற்கு (சுற்றம் எனப்படும் உறவினர், நண்பர், அக்கம் பக்கத்தவர்கள்,  வேலையில் பழகுபவர்கள், பொதுவாக நாம் பழகும் எல்லோருக்கும்) தேவையான உதவிகளை செய்து கொடுத்தும், அவர்களிடம் அகத்தினில் இருந்து இனிமையான சொற்களை கூறியும் நடந்துகொண்டான் என்றால் அவனை பலவகையான சுற்றத்தார்கள் அடுக்கடுக்காக அடுக்கி சூழ்ந்து இருப்பார்கள்.

நிறைந்த மனதுடன் அந்த சுற்றம் அவனை தழுவுவதால் அவனுக்கு அன்பு நிம்மதி நிறைவு ஆகியவை தானாக உண்டாகும். வலிமையான அன்பான சுற்றம் ஒருவனுக்கு இன்றியமையாத செல்வமாகும் அமையும்.

மேலும் வினை விதைத்தவன் வினை அறுப்பான். அதுப்போல் அன்பை விதைத்தவன் அன்பை அறுவடை செய்வான். நாம் பிறருக்கு நறுமணம் வீசும் சந்தனத்தை பூசினால் நம் மீது பிறர் சந்தனம் பூச வேண்டும் என்று விரும்புவது நியாயமானது. ஆனால் நாம் பிறர் மீது சேற்றை வாரி இறைத்தால் நம் மீது பிறர் எப்படி சந்தனைத்தை பூசவேண்டும் என்று நினைக்க முடியும்?

ஆதலால் சுற்றத்தவர் சுகம் விசாரிக்க வருவர்; நீயும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கேட்டு அறிக. கடன் கேட்பார்கள்; மறுத்துவிடாதே; உதவி கோருவர்; தள்ளாதே; இனிமையாகப் பேசினால் அவர்கள் இதயம் குளிரும்.

பிறருக்கு நேர்மறையான (Positivity / Positive Thoughts) எண்ணங்களை செயல்களை நாம் பகிர்ந்துக்கொண்டால் நம்மிடம் பிறரும் நேர்மறையானவற்றை திருப்பிக்கொடுப்பர். எண்ணம் போல் வாழ்க்கையும் அமையும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும். - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.
(இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.).

மணக்குடவர் உரை
வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின் தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன். இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
The one who practices generosity and kind words (with his family, relations, friends, neighbors, colleagues, acquaintances, and in general everyone) will be encircled by an extended family. Because the world loves such people and would reciprocate the positivity. When one whole heartedly embraces fellow human beings, he gains love, peace, satisfaction. A strong lovable circle of people would turn out to be an invaluable wealth/asset.

Also, one who harvests what he seeds. When one seeds kindness, he harvests kindness.

Questions that I ask to the kid
Who will be encircled by fellow human beings as an extended family? Why?

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்

குறள் 524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரிய துணையில் ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

சுற்றத்தால் - சுற்றத்தினால்; உறவினர்களால், பரிவாரங்களால், அரசரின் துணைகள்

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப் புறப்பற்றுகளாகிய விருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

சுற்றப்பட - சுற்றுப்பட்டு- பற்று 

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

தான் - தன்னுடைய

பெற்றம் - பெருமை; காற்று; எருது; மாடு; இடபராசி
பெற்றத்தால் - பெற்று - செல்வாக்கு; அடுக்கு; பெருக்கம்; எருது.

பெற்ற - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

முழுப்பொருள்
ஒருவர் தன்னுடைய பெருமைகளால் செல்வாக்கினால் பல செல்வங்களை பெறலாம்.  அவற்றினால் பல பயன்களை நாம் அடையக்கூடும். செல்வம் என்பது நிலையில்லாத ஒன்று. ஆதலால் அது நம்மை விட்டு விலகிவிடும். ஆதலால் அது உண்மையான நிலையான செல்வம் கிடையாது என்று நாம் சொல்லலாம்.

உண்மையான செல்வம் எது என்று சொன்னால் நம்மை சுற்றி இருக்கின்ற சுற்றத்தின் அன்பு. இங்கே திருவள்ளுவர் சுற்றப்பட்ட என்று சொல்லி பற்றினை முன்னிலை படுத்தி அன்பை அடிக்கோடிடுகிறார். ஏனெனில் பிரச்சனை நோய் பணத்தட்டுப்பாடு என்றால் மனிதர்களும் நம்மை விட்டு விலகக்கூடியவர்கள். சுயநலவாதிகள். ஆனால் உண்மையான அன்பு அப்படி இல்லை. அது என்றென்றும் நம்முடன் இருக்கும். அதனால் நம்மை சுற்றி இருக்கின்ற சுற்றங்களின் (உறவினர்களின், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின்) உண்மையான அன்பினால் நாம் அடையக்கூடிய உயர்ச்சியே நாம் அடையும் உண்மையான செல்வம். அந்த அன்பு தான் உண்மையான செல்வம். அதுவே அவர்கள் பெற்ற பெருமையாலும் செல்வாக்கினாலும் பெற்ற பயன்.

ஒப்புமை
“தொலையாக் கொள்கைச்சுற்றம்  சுற்ற” (பதிற் 70:17)

“சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி” (கலி.10:2)

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்” (நாலடி.93)

”செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப் வெனின்” (நாலடி 170)

நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறு சொல்கிறது. படிக்கும் போதே விளங்கும் பாடல்.
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன். (நாலடி 202)

”மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வழியும் ஏமாப்பச் செய்வதாம்” (பழமொழி 289)

“தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற
தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்” (பழமொழி 368)

அறநெறிச்சாரப் (76) பாடலொன்றும், இதே கருத்தை எளிதாக இவ்வாறு சொல்கிறது.

செல்வத்தைப் பெற்றார்சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு (அறநெறி 76)

“ஆரியன் அருளில் போயவ் வகன்மலை யகத்த னான
சூரியன் மகனும் மானத் துணைவரும் கிளையும் சுற்ற” (கம்ப.அரசியல் 52)

“அடைந்தவர்க் கருளா னாயின் அறமென்னாம் ஆண்மையென்னாம்” (கம்ப.விபீடணன்.111)

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
(பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன். இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The true love and affection of people around us during both ups and downs is the real valuable wealth we could earn. Note: we should earn such relationships by being true to the relationship and contributing to the relationship. We should not take it granted for us. 

Questions that I ask to the kid
What is the real wealth that we could earn?

விருப்பறாச் சுற்றம் இயையின்

குறள் 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
விருப்பு விருப்பம் - ஆசை; அன்பு; பற்று
அறாச் - அகலாத
சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரிய துணையில் ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.
இயை - iyai   s. junction, union, இசைப்பு, iyai   II. v. i. (poet, for இசை) join, agree, பொருந்து; be proper for, agreeable to; அழகு; புகழ் இசைப்பு வாழை
இயையின்  -
அருப்பு- அரும்புதல் (துளிர்த்தல்) 
அறா - கருகி ஓயாது
ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து
பலவும் - pala   pron. cf. bahula. [K. hala, M.pala.] Many, several, diverse; ஒன்றுக்கு மேற்பட்டவை.
தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
இக்குறளை இரு இடங்களில் வைத்து பார்க்கிறேன். ஒன்று குடும்பம். மற்றொன்று அலுவலகம் மற்றும் அரசின் அமைச்சகம்.

1) முதலாவதாக குடும்பம். ஒரு குடும்பத்தில் ஓயாது ஆத்மார்தமாக அன்பு செலுத்தும் உறவினர்கள் சுற்றமாக இருந்தால் அவனுக்கு குன்றாத பல வகை செல்வமும் வளங்களும் வாழ்வில் வரும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அறிவு உள்ளவராக இருப்பார்கள். குறைந்தது அதனை பற்றி தெரிந்தவரையாவது தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு அல்லது அப்படி ஒருவரை தேடி கண்டுபிடிக்கும் வல்லமையும் எண்ணமும் உண்டு. இப்படி ஒருவர் இருப்பின் நமது உறவினரே நம்மீது அன்பு கொண்டு நமக்கு உதவுவர். இது நமக்கு வளர்ச்சியை கொடுக்கும். ஒரு விதத்தில் இது ஒரு உலகியல் லாபம். இன்னொரு விதத்தில் நம்மை நல்ல நிலையில் காண வேண்டும் என்று நினைப்போர் நம்மை அன்பால் நல்வழி படுத்துவார்கள். நாம் தீய பழக்கங்களில் சிக்கினால் கூடா நட்பில் இருந்தால் நம்மை நல் வார்த்தை பேசி திருத்துவர். நாம் சோர்வாக இருக்கும் நேரங்களில் நம்மை உத்வேக படுத்தவர். இவையெல்லாம் நம்மை நல்வழியில் செலுத்தி நமக்கு செல்வங்களை கொடுக்கும். சுறுக்கமாக சொன்னால் நிபந்தனையற்றை அன்புக்கொண்ட அன்பர்கள் நம்மை சுற்றி இருந்தால் நம் வாழ்வு சற்று இலகுவாக்கிவிடும். 

2) இரண்டாவதாக அலுவலகம்/அமைச்சகம். ஒரு வேலை செய்யும் இடத்தில் சுற்றம் மிக முக்கியம். கூட வேலை செய்வோர் விருப்பத்துடன் ஆசையாக வேலை செய்தால் தான் அந்த சக்தி (energy), புத்துணர்ச்சி நம்மையும் தொற்றிக்கொண்டு நம்மையும் உத்வேகத்துடன் வேலை செய்ய வழி வகுக்கும். அப்படி ஆசைக்கொண்டவர்கள் நாம் தவறு செய்தால் அதனை திருத்தி நம்முடைய ஆற்றலை கூட்டுவர். நம்மை மெருகேற்றுவர். அது ஒரு மிகப்பெரிய செல்வமாகும். எல்லா நல்ல புத்துணர்ச்சிகளும் (positive energy) நம்மை அடுத்த இடத்திற்கு கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

உதாரணமாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை சுற்றி உள்ளவர்கள கொடுக்கும் உத்வேகம் தன்னை மெருகேற்றுகிறது என்று கூறி உள்ளார். 

https://youtu.be/a44vlfpnBvU?t=11m37s   (ஏ.ஆர். ரஹ்மான் உடன் நேர்காணல்)

சுறுக்கமாக சொன்னால் நிபந்தனையற்றை அன்புக்கொண்ட அன்பர்கள் நம்மை சுற்றி இருந்தால் நம் வாழ்வு சற்று இலகுவாக்கிவிடும். 
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
(உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
அன்பறாத சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுகு மாயின், அது கிளைத்தலறாத ஆக்கமாகிய பலவற்றையுந் தரும்.

மு.வரதராசனார் உரை
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

குறள் 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள
[பொருட்பால், அரசியல்,சுற்றந்தழால்]

பொருள்
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்ற - அல்லாத, அல்லாமல்

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பழைமை தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு.

பாராட்டுதல் - புகழ்தல்; அன்புகாட்டுதல்; பெருமிதம்உரைத்தல்; கொண்டாடுதல்; பலகாலம்சொல்லுதல்; விரித்துரைத்தல்; மனத்தில்வைத்தல்.

சுற்றத்தார் - உறவினர்; இனத்தார்; துணைவர்; பரிவாரம்

கண்ணே - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி

உள - உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

முழுப்பொருள்
ஒருவன் தன செல்வம் அனைத்தையும் இழந்து, வளம் குன்றி,பற்றற்ற நிலையில் உள்ள பொழுதும், அவனை விட்டு விலகி விடாமல், அவனிடம் கொண்ட பழைய உறவை பாராட்டி கொண்டாடி மகிழ்வது அவனது சுற்றத்தார் இடத்தில் உள்ளது என உரைக்கிறார் வள்ளுவர். அரசியல் இயலில் இக்குறளை வைத்துள்ளதனால், ஒரு அரசனோ அரசோ, எந்நிலையிலும் விலகாமல் பழைய நட்பு பெருமை பாராட்டும் வகையில் உள்ள சுற்றத்தாரை கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கருதலாம்.
  
மேலும்:
நன்றி: அசோக் 
ஔவையாரின் மூதுரையில், சுற்றத்தைப் பற்றி கூறும்போது, அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போன்றவர்கள் அல்லர் உண்மையான சுற்றம் என்பார். அந்த முழுப்பாடலும், அதனுடைய விளக்கமும்.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.
நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.
நல்ல சுற்றம் எத்தகையது என்று சொல்லும் ஔவை, மற்றொன்றையும் சுற்றம் பற்றி கூறுவது கவனிக்கத் தக்கது.
“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி “
சுற்றமும் பல நேரங்களில் உடனிருந்து கொல்லும் வியாதிபோன்றதாகையால், அவரிடத்தும் கவனமும் எச்சரிக்கையும் தேவையென்று உணர்த்துகிற பாடலும் மூதுரைப் பாடல்தான்.
ஒப்புமை
1) “காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்” (நாலடி.113)

2) அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால் மற்ற்வர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமர மாய மருந்து (பழமொழி 53)

3) முன்னின்னா ராயினும் மூடும் இடர்வந்தால்
பின்னின்னா ராகிப் பிரியார் ஒருகுடியார் (பழமொழி 66)
பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன.
(சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம்.  இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

அளவளா வில்லாதான் வாழ்க்கை


குறள் 523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
அளவளா - அளவளாவுதல் - கலந்துபேசுதல்

இல்லாதான் - இல்லாதவன், வறியவன்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

குளம் - kuḷam   n. prob. கொள்-. cf. kūla. [T.kolanu, K. koḷa, M. kuḷam.] 1. Tank, pond,reservoir; தடாகம் (பிங்.) 2. Lake; ஏரி குளக்கீழ் விளைந்த . . . வெண்ணெல் (புறநா. 33, 5). 3.  
அளவளாவல் - கலந்து பேசி மகிழ்தல் 

குளவளாக் - குளப் பரப்பு 

குலாவுதல் - நட்பாடுதல்; அளவளாவுதல்; உலாவுதல்; விளங்குதல்; மகிழ்தல்; நிலைபெருதல்; கொண்டாடுதல்; வளைதல்; வளைத்தல்; வயப்படுத்துதல்.

கோடு - வளைவு; நடுநிலைநீங்குகை; யானையின்தந்தம்; விலங்குகளின்கொம்பு; ஊதுகொம்பு; நீர்வீசுங்கொம்பு; மரக்கொம்பு; யாழ்த்தண்டு; 'கெ', 'கே'முதலிவற்றின்தலைப்பிலுள்ளகொம்புக்குறியீடு; பிறைமதி; சங்கு; குலை; மயிர்முடி; மலையுச்சி; மலை; மேட்டுநிலம்; வரி; ஆட்டம்முதலியவற்றிற்குவகுத்தஇடம்; நீர்க்கரை; குளம்; காலவட்டம்; வரம்பு; ஆடைக்கரை; முனை; பக்கம்; அரணிருக்கை; கொடுமை; நீதிமன்றம்.

இன்றி - இல்லாமல், இன்மை

கோடின்றி - கரை இன்றி 

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

நிறைதல் - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

நிறைந்து - நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

முழுப்பொருள்
கூடி பேசி மகிழ்ந்து அளவளாவ சொந்த பந்தங்கள் இல்லாதவனுடைய வாழ்க்கையானது, கரை இல்லாமல், நீர் மட்டும் நிரம்ப பெற்ற குளத்தைப் போன்றது. அதாவது, கரை இல்லாத குளம் எவ்வாறு சீக்கிரம் வற்றி போய் விடுமோ, அது போன்று, ஒருவன்(அரசன்) எவ்வளவு வளங்கள் நிரம்ப பெற்றாலும், நல்லது, கேட்டது, பகிர்ந்து அளவளாவி மகிழ சொந்த பந்தங்கள் இல்லாத பொழுது அவ்வளங்கள் யாவும் விரைவில் குன்றி விடும் என உரைக்கிறார் வள்ளுவர். 

சுற்றத்துடன் கூடிப்பழகாதவன் வாழ்க்கையானது கரையில்லாத குளம்போன்றது. நீர் நிறைய நிறைய உடைத்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்கிறார் வள்ளுவர். ’வனம்சேர்ந்தாலும் இனம் சேர்’ என பழமொழியும் சொல்கிறது.

==============================

அன்புள்ள ஜெயமோகன் சார்,

என் சிறு வயது முதலே, என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விசயம் உறவினர்களைப் பற்றி. என்னுடைய பெரியப்பா 1950 களில் கல்லூரிப் படிப்பை முடித்து, சிறந்த மாணவருக்கான விருதும், நல்ல பழக்க வழக்கங்களுக்காக சொந்தங்களின் மத்தியில் மரியாதையுடனும் வாழ்ந்து வந்தார். குடும்பத்தில் மூத்த மகன், அவருக்கு பின் நான்கு தம்பிகள் ஒரு தங்கை. நல்ல செல்வாக்கான குடும்பம் தான். இவர்கள் அனைவரையுமே ஒரு தந்தையின் நிலையில் தான் வளர்த்து வந்திருந்திருக்கிறார். அவரின் அம்மாவைப் பற்றி ஒரு சொந்தக்காரர் தவறாக சொல்லிவிட்டார் என்ற காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இத்தனைக்கும் அந்த சொந்தக்காரர் எங்களின் பாட்டியின் உதவியால் தான் வாழ்க்கையே நடத்தி வந்தார். அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து, வீடு, நிலம் வாங்கி கொடுத்து வாழ வைத்தார் என் பாட்டி. இதைப் போன்ற நிறைய உதவிகளை நிறைய உறவினர்களுக்கு செய்துள்ளார். அப்படி உதவி பெற்று வாழ்ந்தவர்கள், ஏன் பாட்டியைப் பற்றியே இப்படி ஒரு அவதூறையும் சொல்ல வேண்டும்?

அந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பெரியப்பாவின் மேல் முதலில் எனக்கு மிகுந்த அனுதாபம் இருந்தது. ஆனால் நான் வளர வளர அவரின் மேல் கோபம் தான் வருகிறது. யாரோ ஒருவர் வார்த்தைக்காக உயிரை விடும் அளவுக்கா அவரின் மனம் பண்பட்டு இருந்தது? அப்படி பேசியவர்கள் திரும்ப உதவி கேட்கும்போது அதை செய்யாமல் அவர்களை ஒதுக்கி இருக்கலாமே? ஆனால் உறவினர்கள் என்பவர்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள். நாம் ஏதாவது கஷ்டத்தில் இருக்கும் போது உதவுவதில்லை நம்மை மேலும் பேசி பேசி கஷ்டத்துக்கு ஆளாக்குபவர்களாகவே இருக்கிறார்கள். அதே ஆட்கள் நாம் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போது நம்மிடம் பேசிக்கொண்டு இருப்பதையே பெருமையாக நினைப்பதாகவும், நம்மிடம் இருந்து எந்தெந்த வகையில் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்கள்.

சுருக்கமாக என் கேள்வி இது தான், நம்முடைய கஷ்டத்தில் பங்கெடுத்து நமக்கு கை கொடுத்து உதவுபவர்கள் தானே உறவினர்களாக இருக்க முடியும்? நம்முடைய நிலைமையை இன்னமும் மோசமாக்கும் உறவினர்கள் இரத்த சொந்தமாகவே இருந்தாலும் ஒதுக்கி வைப்பதில் என்ன தவறு? ஆனாலும் எதுக்கென்னாலும் கூடப் பொறந்த வங்க வேணும் என்று பேசித் திரிவதில் என்ன பயன் இருக்கிறது?

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

***

அன்புள்ள மனோபாரதி,

இந்தக் கேள்வியை உரையாடல்களில் பலர் கேட்பதுண்டு. குறிப்பாக இளைஞர்கள். ஒரு நண்பர் தன் வாழ்க்கையின் கதையைச் சொன்னார். ”கஷ்டங்களின்போது உறவினர்களால் பேணப்பட்டதாகச் சொல்லும் எவருமே இல்லை. உறவினர்கள் கைவிட்டனர், ஏளனமும் செய்தனர், சில நல்லமனிதர்களின் உதவியால்தான் நான் மேலே வந்தேன் என்று சொல்லும் வாழ்க்கைக் குறிப்புகளையே கண்டிருக்கிறோம். அப்படியென்றால் உறவுகள் எதற்காக?”

“பந்துக்கள் சத்ருக்கள்” என ஒரு மலையாளச் சொல்லாட்சி உண்டு. உறவுகளே முதல் எதிரிகள். அப்படியென்றால் உறவுகளை ஏன் பேணவேண்டும்? உதறிவிடுவதல்லவா உளநலனுக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் நல்லது?

ஆனால் மறுபக்கம் குறள் போன்ற தொல்நூல்கள் உறவுகளை பேணவேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசுகின்றன. சுற்றந்தழால், உறவை பேணுதல் என ஓர் அதிகாரமே உள்ளது.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்துடன் கூடிப்பழகாதவன் வாழ்க்கையானது கரையில்லாத குளம்போன்றது. நீர் நிறைய நிறைய உடைத்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்கிறார் வள்ளுவர். ’வனம்சேர்ந்தாலும் இனம் சேர்’ என பழமொழியும் சொல்கிறது.

இதைப்போன்ற எந்த கேள்வியையும் வரலாற்றில் வைத்தே புரிந்துகொள்ளவேண்டும். நான் பழங்குடிச் சமூகங்களைக் கண்டிருக்கிறேன். அங்கே குருதியுறவு என்பது மிக ஆழமானது. அவர்கள் எவரும் தனியர்கள் அல்ல, ஒரே திரள். முன்பு ஒரு காணிக்காரரிடம் நீ யார் என்றால் காணி என்று பதில்சொல்வாரே ஒழிய அவருக்கான பெயரைச் சொல்லமாட்டார்.

இந்தியத் தேர்தல்முறையை பற்றி காந்திக்குப்பின் இந்தியா நூலில் எழுதும் ராமச்சந்திர குகா ஒன்று சொல்கிறார். 1952ல் முதல் பொதுத் தேர்தலின்போதுதான் இந்தியாவின் பழங்குடிகளுக்கு வாக்குரிமை வந்தது. அப்போதுதான் அவர்களை தனிமனிதர்களாக பார்க்கும் பார்வை அவர்களிடம் அறிமுகமாகியது. அவர்களில் பலருக்குப் பெயர்களே இல்லை. தங்களை குடிப்பெயராலேயே அறிமுகம் செய்துகொண்டனர். தேர்தலதிகாரிகளே அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்.

அது மானுடன் என்னும் உயிரின் இயற்கை. இது மந்தை விலங்கு. திரளாக வாழ்வது. தனிமையில் வாழ முடியாதது. குடி என அவர்கள் சொல்லும் அந்த திரளடையாளமே அவர்களின் அடையாளம். குடிகள் திரண்டு சாதிகளும் ஊர்களும் சமூகங்களும் சிற்றரசுகளும் நாடுகளும் ஆயின. ஆனால் அடிப்படையில் குடியே இருந்தது. குமரிமாவட்டக் கல்வெட்டுகளைப் பற்றி எழுதும் அ.கா.பெருமாள் இங்கே முதன்மையாகக் குடியடையாளத்தாலேயெ பெரும்பாலானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பலசமயம் பெயர்கள் இல்லை, குடிப்பெயர் மட்டுமே உள்ளது.

இன்று உறவுகள் என நாம் சொல்வதன் அடித்தளம் அந்த குடிமரபில் இருக்கிறது. உறவுகளை ஒட்டி நாம் அடையும் எல்லா உணர்ச்சிகளும் அந்த பழங்குடி வாழ்க்கையில் உருவானவை. மூத்தார் வணக்கம், தந்தையர் வணக்கம், அன்னைவர் வணக்கம், உடன்பிறந்தார் பற்று என அனைத்தும் அப்போதே உருவாகிவிட்டன. அவை அத்தனை தொன்மையானவை, ஆகவே அவை எளிதில் கடக்கக்கூடியன அல்ல.

பழங்குடி உறவுமுறைகள், அவற்றின் குடியடையாளங்கள் பின்னர் நிலவுடைமைச் சமூக வாழ்க்கையிலும் நீடித்தன. அவை அன்றைய மக்களை திரளாக நின்று போராடி வாழ உதவின. குடிகளாகவே நம் சமூகம் செயல்பட்டிருக்கிறது. போர்களில், பஞ்சங்களில், இடப்பெயர்வுகளில் அன்றைய மக்கள் திரளாகவே இயங்கியிருக்கிறார்கள். தனித்தனியாக அவர்கள் ஏதும் செய்திருக்க முடியாது. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலை படியுங்கள், குடிகளாகவே மக்கள் புதியநிலம் கண்டு புது வாழ்கையை உருவாக்கிக் கொள்வதைக் காணலாம்

நிலவுடைமைச் சமூகத்தில் கூட தனிமனிதர்கள் என்னும் எண்ணமே பெரும்பாலும் இல்லை. நம் அன்னையரை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ‘தங்களுக்குரிய’ ஒரு வாழ்க்கையை எண்ணியே பார்த்திருக்க மாட்டார்கள். அக்காலத்தில் ‘நான்’ என நினைத்தவர்கள் ஆன்மிகமாக வெளியேறிச் சென்றார்கள். அன்றைய மக்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் தந்தையர் சொல்கேட்டு வாழ்ந்தனர். தங்கள் மைந்தர்களுக்காக முதுமையில் வாழ்ந்தனர்.

தனிமனிதன் என நாம் நினைக்கும் இந்த எண்ணங்களெல்லாம் இருநூறாண்டுகளுக்குள் உருவாகி வந்தவை. நவீன முதலாளித்துவச் சமூகத்தின் உருவாக்கங்கள். நூறாண்டுகளுக்கு முன்புகூட என் குடியில் தனிச்சொத்து என்னும் எண்ணமே இல்லை. சொத்து முழுக்க முழுக்க குடும்பத்துக்குரியது. ‘குடும்பசொத்து’ என்னும் சொல்லாட்சி இன்றும் ஆவணங்களிலுள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு வீடு, ஒரு நிலம் என்பதெல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. என் இளமையில் ‘தன் சொத்து என ஒருவன் நினைத்தானென்றால் அவன் பகவதி கோபத்துக்கு ஆளாவான்’ என்று சொல்லி சீறிய பல முதியவர்களைக் கண்டிருக்கிறேன்.

நவீன முதலாளித்துவம் தனிமனிதனை கட்டமைத்தது. அவன் ஓர் உழைக்கும் அலகு. ஆகவே அவன் ஓர் நுகர்வு அலகும்கூட. அவன் ஈட்டும் செல்வம் அவனுக்குரியது. தனிச்சொத்துரிமையே முதலாளித்துவச் சமூகத்தின் அடிப்படை. மேலும் மேலும் சொத்துசேர்க்க ஒவ்வொரு தனிமனிதனும் கடுமையாக உழைத்தால்தான் முதலாளித்துவம் இயங்க முடியும்.

என் நினைவிலிருந்தே சொல்கிறேன். என் இளமையில் பெரும்பாலானவர்களுக்கு சொத்துசேர்க்கும் எண்ணமே இல்லை. வாழ்வதுதான் முக்கியம். அவர்கள் சேர்த்த சொத்தை அவர்களே வைத்துக் கொண்டதுமில்லை. குடும்பத்தின் உரிமையாகவே அவை இருந்தன. காலம் மாறிவிட்டதை உணரா மனநிலை அது. அவர்கள் பின்னாளில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். வறிய குடும்பத்தில் பிறந்து, இருபதாண்டுக்காலம் துபாயில் வேலைசெய்து சேர்த்த செல்வத்தை குடும்பத்துக்கு அனுப்பிய என் நண்பரை சந்தித்தேன். அவர் அப்பா குடும்பப்பேரில் சொத்துக்களை வாங்கினார். ஆனால் பின்னர் அவர் தம்பிதங்கைகள் அதில் சமபங்கு கேட்டு அவரை நீதிமன்றத்துக்கு இழுத்தனர்.

நூறாண்டுகளுக்கு முன்பு மெல்ல மெல்ல துளிக்குடும்பங்கள் உருவாகி வந்தன. அவை தனிமனிதன் என்னும் கருத்தின் அடுத்தபடி. எங்கள் குடும்பத்தில் முதல் துளிக்குடும்பம் என் அப்பா உருவாக்கிக் கொண்டது. அன்று அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் கூட்டுக்குடும்பம் வேண்டாம், தனிக்குடும்பமே அடுத்தகட்டம் என்னும் தெளிவு அவருக்கு இருந்தது.

இவ்வாறு அடுத்த காலகட்டம் வந்தபோது உறவுகள் பற்றிய எண்ணங்கள் மாறின. ஒவ்வொருவரும் தனியாக உழைக்க, தனியாக சேர்க்க, தனியாக வாழ முயல்கிறார்கள். ஆகவே ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு போட்டியாக ஆகிவிடுகிறார்கள். பழங்குடிச் சமூகங்களில் ஒருவர் இன்னொருவருக்கு போட்டி அல்ல. பழைய சமூகங்களில்கூட அதன் உறுப்பினர் நடுவே இத்தகைய போட்டி இல்லை. போட்டியாளர்கள் நடுவே நல்லுறவு இருக்க முடியாது. சுரண்டல், தோற்கடிக்கும் முனைப்பு ஆகியவையே இருக்கும். வென்றால் மிதப்பும் தோற்றவனை இளக்காரம் செய்யும் மனநிலையும் உருவாகும். தான் ஈட்டியது தனக்கே என்னும் மனநிலை உருவாகும்.

ஒருமுறை தமிழறிஞர் ம.ரா.பொ.குருசாமியிடம் பேசும்போது சொன்னார். ‘தனக்கு மிஞ்சியே தானம்’ என்னும் பழமொழியைப் போன்ற சிந்தனை எந்த பழையநூலிலும் இல்லை. அது பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகி வந்த பழமொழி என்று. மூதாதையர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர் ஆகியோருக்கு செலவழித்த பின்னரே தனக்காகச் செலவழிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ”அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்னும் மனநிலை உருவாகி வந்ததை நாமே நம் வாழ்க்கையின் ஐம்பதாண்டுகளை நினைவுகூர்ந்தால் காணமுடியும்.

ஆகவே உறவுகள் இன்று இப்படி இருப்பது அவற்றின் பழைய இயல்பு திரிந்தமையால்தான். உறவுகளைப் பற்றிய நம் உணர்ச்சிநிலைகளும் சரி, சடங்குநெறிகளும் சரி, மிகத்தொன்மையானவை. பழங்குடி வாழ்க்கையில் உருவாகி நிலவுடைமை வாழ்க்கையில் நிலைகொண்டவை. ஆனால் இன்று உறவுகள் தனிமனிதர்களாகி, போட்டியாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். ஆகவே நாம் உறவுகளை கையாளும்போது நம் உணர்வுகள் தொடர்ந்து யதார்த்தத்தை சந்தித்து புண்படுகின்றன, ஏமாற்றம் அடைகின்றன. விளைவாகப் பூசல்கள் உருவாகின்றன. காழ்ப்புகளும் கசப்புகளும் எஞ்சுகின்றன. உங்கள் பெரியப்பா பழங்கால மனநிலையில் புதிய காலகட்டத்தில் வாழ்ந்தவர். அவர்மேல் கசப்பு கொள்ளவேண்டியதில்லை. அவருக்கு இன்றைய சூழல் புரியவில்லை, அவ்வளவுதான். அவர் அனுதாபத்துக்குரியவர். அத்தகைய பலர் இன்றும் உள்ளனர்.

ஒரு நவீனச் சமூகத்தில் குருதியுறவுகளுக்குப் பெரிய இடமில்லை. நாம் பழங்காலம் போல குருதியுறவுகளுடன் சேர்ந்து வாழ்வதில்லை. பலரைச் சந்திப்பதே இல்லை. நம் ரசனையும் மனநிலையும் வளர வளர பெரிதும் மாறிவிடுகின்றன. ஆகவே உறவினர் நமக்கு அன்னியர்களாக, ஒவ்வாதவர்களாகத் தெரிகின்றனர். இன்று நவீன வாழ்க்கைச்சூழலில் நவீன உறவுகள் உருவாகின்றன. சமானமான உள்ளம் கொண்டவர்களுடன் நாம் கொள்ளும் உறவுகள் அவை. அவையே நமக்கு உகந்தவையாக உள்ளன.

வருங்காலத்தில் அவையே மெய்யான உறவுகளாக இருக்கும். ஐரோப்பிய சமூகங்களில் அத்தகைய உறவுகளே முதன்மையானவையாக உள்ளன. ஒரே வகையான வாழ்க்கைமுறையும் உலகநோக்கும் கொண்டவர்கள் சிறிய உறவுக்குழுமங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். சேர்ந்து வாழ்வதும் காணக்கிடைக்கிறது. அங்கே குருதியுறவுகள் மெல்லமெல்ல மறைந்தே வருகின்றன.

இங்கும் அவ்வாறு நவீன உறவுகளை உருவாக்கிக் கொள்ளவேண்டியது இன்றியமையாதது. அவையே நமக்கு இனியவை என்பதுடன் நம்முடைய தேவைகளுக்கு உடனிருப்பவையும் ஆகும். அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்

ஆனால் நாம் இன்னமும்கூட பாதி நிலவுடைமைச் சமூகத்தில்தான் வாழ்கிறோம். ஆகவே இன்றும்கூட நாம் குருதியுறவுகளில் இருந்து எளிதில் விலகிவிடமுடியாது. இந்தியாவின் ‘பெருங்குடும்ப’ அமைப்பு நமக்கு மிகப்பெரிய பொருளியல் பாதுகாப்பை அமைக்கும் ஒரு சமூகக்கட்டுமானம். நம்மில் பலரை மூத்த அண்ணன்கள் படிக்க வைத்திருப்பார்கள். நம் குடும்பத்துப் பெண்கள் மூத்தவர்களால்தான் மணவாழ்க்கையை அமைக்க முடிகிறது. குடும்பத்தினரின் உதவி இல்லையேல் இங்கே பலர் பொருளியல் அனாதைகளாக ஆகிவிடுவார்கள்.

இங்கே தனிமனிதர்களுக்கு அரசு எந்த பாதுகாப்பையும் அளிப்பதில்லை. எந்த பொருளியலுதவியும் கிடைப்பதில்லை. அவர்கள் குடும்பத்தை நம்பியே உள்ளனர். ஆகவே இந்தப்பெருங்குடும்ப அமைப்பும் அதன் மனநிலைகளும் இன்னும் சில காலம் நீடித்தாகவேண்டும். தம்பிதங்கைகளை படிக்கவைப்பது, மணம்புரிந்து வைப்பது ஆகியவை மூத்தவர்களின் கடமைகளாகவே நீடிக்கவேண்டும். சித்தப்பா பெரியப்பா தாய்மாமன் உறவுகள் நீடித்தாகவேண்டும். அந்த உறவுகள் இல்லாமலானால் பலகோடிப்பேர் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.

ஆனால் அவை சென்றகாலத்தில் இருந்த அதே உணர்வுகளுடன் இனிமேலும் நீடிக்க முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஓர் அண்ணா இன்று தம்பிகளை படிக்க வைக்கவேண்டும். அது அவர் கடமை. அதை தவிர்க்கக்கூடாது. ஆனால் அந்த தம்பிகள் பழங்காலத் தம்பிகளைப் போல அண்ணனுக்கு அடிபணிந்தவர்களாக, தங்கள் சம்பாத்தியத்தையும் அண்ணனையும் பிரித்துப் பார்க்காதவர்களாக இருக்க மாட்டார்கள், இருக்க முடியாது என்பதையும் உணர்ந்தாகவேண்டும். அந்த தம்பிகள் இன்றைய முதலாளித்துவச் சூழல் உருவாக்கிய தனிமனிதர்கள், தனிப் பொருளியல் அலகுகள். அவர்கள் தங்கள் சொத்துக்கள் மேல் குறியாக இருப்பதும், அண்ணனுக்கு பொருளியல் போட்டியாளர்களாக இருப்பதும்தான் இயல்பானது.

அந்தப்புரிதல் இருந்தால் கசப்புகளை தவிர்க்கலாம். அது பழையகால மரபின்படி செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டும். அதே சமயம் பழையகால வழக்கப்படி திரும்ப எதையும் எதிர்பார்க்கக் கூடாது. ஒட்டிக் கொண்டிருக்கக்கூடாது. பிறரை ஆதிக்கம் செலுத்தவும் வழிநடத்தவும் முயலக்கூடாது. பழையகால ‘மரியாதைகளை’ எதிர்பார்க்கக் கூடாது. இப்படி கடமைகளில் நிலவுடைமை ஒழுக்கமும் அன்றாட வாழ்க்கையில் முதலாளித்துவ ஒழுக்கமும் கடைப்பிடிக்கப்படுமென்றால் சிக்கலே இல்லை. ஏனென்றால் உண்மையில் நம் வாழ்க்கையின் ஒரு முனை நிலவுடைமை சமூக மனநிலையிலும் இன்னொரு முனை சமகால முதலாளித்துவ மனநிலையிலும் உள்ளது. அந்த முரண்பாடே கசப்புக்கு ஆதாரம்.

கடைசியாக இன்னொன்று. குருதியுறவுகளில் ஓர் உறுதிப்பாடு உண்டு. என் அண்ணனை நான் எந்நிலையிலும் அண்ணன் இல்லை என சொல்லிவிடமுடியாது. பிரியலாம், பிரிந்தாலும் அண்ணனே. பல்வேறு சடங்குகள் நம் குருதியுறவுகளை இணைக்கின்றன. ஒரு திருமணத்தில் சடங்குகளை தாய்மாமனே செய்யவேண்டும். ஆனால் நவீன உறவுகளில் இந்த உறுதிப்பாடு, மாறாத அம்சம் இல்லை. அதாவது நம்மை மீறிய அம்சம் இல்லை. ஆகவே எல்லாம் சிறப்பாக இருந்தால் உறவைத் தொடர்வோம், இல்லையென்றால் பிரியவேண்டியதுதான் என்னும் மனநிலையிலேயே நாம் நம் நவீன உறவுகளை அமைத்துக் கொள்கிறோம். அப்படி அமைக்கப்படும் எந்த உறவும் நீடிக்காது. அது மானுட உள்ளத்தின் இயல்பு

ஏன்? ஓர் உறவில் எங்கோ வெளியேறும் வழியையும் கணக்கிட்டு வைத்துக்கொண்டு நுழைவோம் என்றால் எல்லா எதிர்மறைத் தருணத்திலும் அதிலிருந்து வெளியேறிவிடலாமா என்னும் எண்ணம்தான் முதலில் உருவாகும். ஆயிரம் முறை அவ்வெண்ணம் நம்மால் தவிர்க்கப்படலாம். ஒருமுறை அது நிகழ்ந்தே தீரும். இது மணவுறவுகளுக்கும் பொருந்தும். ஆகவேதான் மணவுறவுகளையும் மானுடனை மீறிய தெய்வங்களின் ஆணை என்றும், பிறவிபிறவியாக வரும் தொடர்பு என்றும் பழங்காலத்தில் சொல்லி நிறுவினார்கள். இன்று திருமணம் ஓரு சட்டபூர்வ ஏற்பாடு மட்டுமே என்னும் மனநிலை உருவாகியிருப்பதனால் எப்போது வேண்டுமென்றாலும் பிரியலாமென்னும் எண்ணம் முதலிலேயே உருவாகிவிடுகிறது. இயல்பாக அது பிரிவு நோக்கி இட்டுச்செல்கிறது.

எல்லா நவீன உறவுகளிலும் நாம் அவ்வுறவை ஒருபோதும் இழப்பதில்லை, என்ன நிகழ்ந்தாலும் சரி என்னும் ஓர் உறுதிப்பாட்டை கொள்ளவேண்டும். நம் குருதியுறவு என்றால் அப்படி ஒரு சிறு பூசலுக்கே தொடர்பை நிறுத்திக்கொள்வோமா என்னும் எண்ணம் இருந்தால் பல உறவுகளை தொடரமுடியும். நீடிக்கும் உறவுகளே உண்மையான உறவுகள்.

ஜெ

==============================
பரிமேலழகர் உரை
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை, குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று -குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும்.
(சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர்.'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கலக்கப் படுவாரோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும். இது சுற்றந் தழுவாக்கால் செல்வங் காக்கப்படாதென்றது. இத்துணையும் சுற்றத்தாரெல்லாரோடும் ஒழுகுந் திறங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,
குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

நன்றி: அம்மன் தரிசனம் வலை தளத்தில்...

சுற்றத்தாருடன் மனம்கலந்து பேசி மகிழ்வதே அளவளாவுதல் எனப்படும். அப்படி மனம் கலந்து பேசிப் பழகாதவர் வாழ்க்கை, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்திருப்பதைப் போன்றதுதான் என்கிறது குறள்.
கரையில்லாத குளத்தில் நீர் சீக்கிரம் வற்றிவிடும். உறவுகளைப் பேணாதவன் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிவிடும். சிலபேர் எப்போதுமே முட்செடி போல இருப்பர். சிடுமூஞ்சிகள் என்று அவர்களுக்குப் பெயர். இன்னும் சிலபேர், உறவுக்காரர்களைக் கண்டால் உயிரில்லாத சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு தலையை அசைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அவர்களுக்குத் துன்பம் வந்தால் யாரும் வருந்தவும் மாட்டார்கள். அதுமட்டுமன்று அவர்களின் வீழ்ச்சியை விரும்பவும் செய்வார்கள்.
உறவுகளிடம் கொஞ்சம் சிரித்துப் பேசினால் என்ன குறைந்துவிடும்? கொஞ்சம் சிரித்துப் பேசினால் கடன் கேட்டு விடுவார்கள் என்று சிலருக்குப் பயம். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டால் ஒதுங்கிப் போய்விடுவார்கள் என்ற எண்ணம். அதற்கு வள்ளுவர் சொல்லுகிறார்.