Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பண்புடைமை. Show all posts
Showing posts with label பண்புடைமை. Show all posts

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

 

குறள் 1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இலான் - இல்லாதவன்

பெற்ற -   பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெருஞ் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.-

நன் - நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

பால் - குழவி, குட்டிமுதலியவற்றைஊட்டத்தாய்முலையினின்றுசுரக்கும்வெண்மையானநீர்மப்பொருள்; பிணத்தைஅடக்கம்பண்ணினமறுநாள்அவ்விடத்திற்பாலும்நவதானியமும்சேர்த்துத்தெளிக்கும்சடங்கு; மரம்முதலியவற்றிலிருந்துவடியும்நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மைமுதலியவற்றிலிருந்துகசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மைஎன்றஇருவகைப்பாகுபாடு; அகத்திணைபுறத்திணைஎன்றபாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.

கலம் - உண்கலம்; பாண்டம்; குப்பி; கப்பல்; இரேவதி; அணிகலன்; யாழ்; கலப்பை; ஆயுதம்; ஓலைப்பாத்திரம்; ஒருமுகத்தலளவை; பந்தி; வில்லங்கம்.

தீமையால் - தீமை - கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன.

திரிந்து - திரிதல் - tiri-   4 v. [T. tirugu, K. tiri, M.tirikka.] intr. 1. To walk about, wander,go here and there; அலைதல் வண்டாய்த்திரிதருங் காலத்து (நாலடி, 284). 2. To turn, whirl,revolve, as the heavenly bodies; சுழலுதல் வலந்திரியாப் பொங்கி (பு. வெ 9, 12). 3. To be twisted,convolved; திருகுறுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி(கலித். 15). 4. To move; சலித்தல் நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55-6).5. To proceed; போதல் (பிங்.) 6. To return;திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான்(கம்பரா. அங்கத. 10). 7. To change, vary;வேறுபடுதல். நாஅல்வேத நெறிதிரியினும் (புறநா.2). 8. To be substituted, as a letter byanother; எழுத்து மாறுதல் தோன்ற றிரிதல் கெடுதல்(நன். 154). 9. To perish; கெடுதல் (திவா.) 10.To change in quality; to become sour, as milk பால் தன்மைகெடுதல். 11. To be confused;மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பரிபா. 3, 54).--tr. To abandon, leave; கைவிடுதல் இனந்திரியேறுபோல (சீவக. 2720). 

அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது, ஓர்உவமஉருபு; ஒருசாரியை

திரிந்தற்று - திரிந்து பயனற்று போவது போல, பயனற்றதாகி விடும்

முழுப்பொருள்
பண்பில்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம் யாருக்கும் பயனின்றி கெட்டுப்போகும். எப்படித்தெரியுமா? நல்ல ஆவின் பால் ஒரு கெட்டபாத்திரத்தில் போட்டுவைத்தால் திரிந்து கெட்டுவிடும். திரிந்தப்பால் யாருக்கும் பயனில்லை. இது பாலின் குற்றம் அல்ல. பாத்திரத்தின் தன்மையாகும். அதுப்போல் அது செல்வத்தின் குற்றம் அல்ல, பண்பில்லாதவரின் குற்றம். நல்லவையும் கெடும் தன்மைப்பெற்ற ஒன்று எவ்வளவு கேடானது? மிக இழிவானதாகும். அதுப்போல் பண்பில்லாதவரும் மிக இழிவானவர்.

மேலும், பண்பில்லாதவரிடம் செல்வம் இருப்பதனால் அவர் பெரிய ஆளாகவிட மட்டார். அவரிடம் கொஞ்ச நாள் தான் அச்செல்வம் இருக்கும். சிறிதுகாலம் கழித்து அழிந்துவிடும். பாலினை ஒரு கெட்டப்பாத்திரத்தில் போட்ட உடனே திரிந்துவிடாது. சிறிது நேரம் கழித்து தான் திரியும். அதுப்போல் பண்பில்லாதவரிடம் செல்வமும் சிறிது காலம் கழித்து அழிந்துவிடும்.  

உதாரணமாக பண்பில்லாதவர்கள் அவர்களது பிள்ளைகளை கெட்டுப்போக அவர்களிடம் உள்ள செல்வமும் சூழ்நிலையும் எவ்வளவு ஏதுவாக இருக்கிறது என்பதை பல வீடுகளில் உறவுகளில் காணலாம். அதுவே பண்போடு இருப்பவர்களிடம் செல்வம் இல்லையென்றாலும் சரி செல்வம் இருந்தாலும் சரி, அவர்கள் சமநிலை பேணி தவறான வழியில் செல்லமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை
 
பரிமேலழகர் உரை
பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும். ('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்ல ஆன்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும்.

மு.வரதராசனார் உரை
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

Thirukkural - Management - Ethical Behavior
Valluvar uses another simile, in Kural 1000, to emphasize the importance of making money through proper means. Money generated by a dishonest person or someone who makes money by any means, by hook or crook, is similar to fresh milk kept in an unclean container.

The ill got wealth becomes unusable soon similar to the milk that is kept in an unclean vessel. 
Pure milk in an impure container becomes impure.

A boor's great wealth is milk gone sour 
In a can unscrubbed.

English Meaning - As I taught a kid - Rajesh
Valluvar underlines the need of character, the need of earning wealth through ethical means. He says that many earnt by dishonest people or money earnt through unethical means is like fresh good milk kept in an unclean vessel. The milk would get spoiled in the unclean vessel either immediately or very soon making it not usable for any purpose. 

For e.g., we can see that a money earnt by a dishonest people is a breeding ground for mistakes and the people around that person gets spoiled very soon. Nowadays, if a person or an organization is found to have earnt money through dishonest means, then their money is not used for any philanthropic purposes or even for a development purpose (for e.g., building temples). 

Questions that I ask to the kid
What happens to the money earnt through dishonest means or by dishonest people?

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

 

குறள் 997
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அரம் - இரும்பைத்தேய்க்கப்பயன்படும்கருவி; விரைவு வண்டி பாதலம் தோல்

போலும் -   pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

கூர்மை - ஆயுதங்களின்கூர்; நுட்பம்; சிறப்பு; கல்லுப்பு; வெடியுப்பு.
கூர்மையரேனும் - கூர்மையான அறிவு உடையவராக இருப்பினும்

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

போல்வர் - போன்றவர்

மரம் போல்வர் – மரக்கட்டை போன்று ஓர் உயிர்ப்பும் இல்லாதவர்

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இல்லாதவர் - இல் - இல்லை, வறுமை

முழுப்பொருள்
இரும்பையும் தேய்த்து அறுக்கக்கூடும் அரம் போன்ற கூர்மையான அறிவு படைத்தவராக இருப்பினும் (அதாவது எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வு காணும் கூர்மையான புத்தி உள்ளவராக இருப்பினும்) அவருக்கு மக்களுடன் இணங்கும் பண்பு இயல்பாக இல்லையென்றால் அவர் ஒரு மரம் (மரக்கலம்) போன்றவராவர். 

பண்பில்லாதவர்களை மரத்திற்கு ஒப்பாக ஏன் திருவள்ளுவர் கூறுகிறார்?
1. இங்கே மரம் என்றால் உயிரற்ற மரக்கலம் என்ற பொருளை கொள்ளவேண்டும். ஆதலால் பண்பல்லாதவர் உயிர் அற்றவருக்கு சமம். பண்பு உயிருக்கு சமம் என்றும் கூறலாம்.

2.  இங்கே அறிவு கூர்மையான பண்பில்லாதவனை மரத்திற்கு ஒப்பாக கூறினார் என்றால்: மரம் தாவரங்களுள் எல்லாம் மிகப்பெரிய தாவரமாகும். அறிவும் அதுப்போல் பெரிதாக வளர்ந்த ஒன்று. ஆனால் மரத்தினால் பறவைகள் போன்றோ மிருகங்கள் போன்றோ கூட்டமாக குடும்பமாக செல்லாது. மரம் தனித்து நிற்கும் அங்கேயே தோன்றி அங்கேயே அழியும். அதுப்போல் பண்பில்லாதவர்களும் இவ்வுலகலில் தனித்துவிடப்பட்டு ஒருநாள் மாய்வர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர். (அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது, ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட் பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.

மணக்குடவர் உரை
நன்மக்கட்கேயுரிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மை போலுங் கூர்மையுடையரே யாயினும், ஓரறிவிற்றாய மரத்தினை யொப்பர்.

மு.வரதராசனார் உரை
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

Thirukkural - Management - Relationship
Kural 997 is to highlight the importance of relationship with others. Even if a person is sharp like a saw in his thinking, knowledge, and skills, he is like a dead wood, if he does not have the qualities required to have relationships, understanding, empathy, compassion, and consideration.

Their minds may be sharp as files, but the boorish
Behave like trees.

English Meaning - As I taught a kid - Rajesh
An sharp hacksaw can cut trees and even iron materials. Like a hacksaw, one can be sharp and intelligent. But if one is lacking the capability to interact with people, humility/modesty, compassion then that person is like a dead wooden log that is not capable of producing anything useful and that wooden stock would eventually decay. A wooden log cannot even a cool shade like tree. No birds will come and chirp on a wooden log 

Questions that I ask to the kid
What would you choose over sharpness of an hacksaw? Why?

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

 

குறள் 998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நண்பு - அன்பு; உறவு; நட்பு.

ஆற்றார் - செய்யாது இருப்பவர்; இல்லாதவர் 

ஆகி -  ஆகுதல் - ஆதல்.

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

இல  - இல் - இல்லை, வறுமை

செய்வார்க்கும் - செயலை செய்பவர் / நடத்துபவர்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

ஆற்றாராதல் - இல்லாமல் இருத்தல்

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
பிறர் நம்மிடம் அன்பல்லாதவராக இருப்பினும் நட்பும் உறவும் பாராட்டாதவராக இருப்பினும் நன்மைகளும் செய்யாது தீயவை செய்தவராக இருப்பினும் மகிழ்ச்சிதராதவராக இருப்பினும் நம்மிடம் மலிவாக நடந்துக்கொண்டிருந்தாலும் அவரிடம் விரோதம் பாராட்டாமல் பண்புடையவராக இருத்தல் வேண்டும் மாறாக பண்பில்லாதவராக இருந்தால் அது நமக்கு கீழ்மையே ஆகும். 

எங்கோ கேட்ட ஞாபகம்,  உனக்கு ஒருவன் தீயது செய்கிறானா? அல்லது விரோதம் பாராட்டுகிறானா? அல்லது சிறுமையானவற்றை செய்கிறானா? அவனுக்கு பெரிய மனதுடன் நல்லது செய்து காண்பி. அதுவே சிறந்து என்று. உதாரணமாக, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு பேட்டியில் (அவரைப்பற்றிய ஆவணப்படம் The Writer Who Extended The Boundaries - எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - D.Jayakanthan @1:15:48) ஒன்றில்) சொன்னது இது, கர்நாடக்காவில் தமிழ் படிக்க கூடாது என்றால் தமிழ்நாட்டில் கன்னடம் படிக்கலாம் என்று சொல்லுக என்கிறார். அது தான் வழி. தாராளமாக நாமிருந்தால் தாராளம் என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். நாகரீகத்தை நாம் தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அது நமது பொறுப்பு. They are immature. தெரியலயா உங்களுக்கு? இதற்கு ஆராய்ச்சி வேண்டுமா? அல்லது அவன் ஒத்துக்கொள்ள வேண்டுமா? நாம் தான் உணர வேண்டும். நீ(நாம்) உலக மனிதன் என்பது பெருமை அல்ல. நமது பெருமை என்ன? புலம் சார்ந்தவர்கள் நாம். இந்த புலம் என்பது பூமி. இதைத்தான் பாரதி கூறினார் “வையத் தலைமை கொள்” என்று. இந்தியா அதனால் தான் கூறுகிறது நாங்கள் என்றும் அலேக்ஸாண்டார் ஆகமாட்டோம் என்று. 

என்பதையும் இங்கு நினைவில் கொள்க. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.).

மணக்குடவர் உரை
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.

மு.வரதராசனார் உரை
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.

Thirukkural - Management - Relationship
To be good to someone just because he is good to you is reactive behavior. Anyone will be good to the other person in that situation as that is the minimum quality expected of a human being. To be good to someone who is good to you does not need any effort. It is basic courtesy also. However, to be good, courteous, and polite even to someone who is discourteous to us is needed  for sustained relationships and that is possible only when we give importance to relationship, says Kural 998.

It is base to be discourteous
Even to one's enemies.

We are cheaply mean, if we are mean to someone who is mean to us. There is no defense against that behavior. It is said revenge is a wild justice. We are not in the wild or in a jungle. We are human beings living in the presence and company of other human beings. Effective relationships demand personal initiatives to connect  and stay with others.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

குறள் 996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

பட்டு - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உலகம் -  உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.; atu   atu அது it, that, that thing  

இன்றேல் - இல்லை என்றால்

மண் -  நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

புக்கு - pukku   n. Paper-tree; பிராய். (பிங்.); pirāy   n. Paper-tree, s. tr., Streblusasper; மரவகை.
பிராயச்சித்தசமுச்சயம் pirāyaccitta-camuccayam, n. A Tamil work on pirāyaccit-tam, 17th C.; பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிராயச்சித்தங்களைக்கூறும் தமிழ் நூல்.

புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்

மாய்வது - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள்
நற்பண்புகளை உடையோர் இவ்வுலகில் தோன்றி இருப்பதால் தான் இவ்வுலகமும் இவ்வுலக மக்களும் வாழ்கின்றனர். பண்புடையோர் இல்லையென்றால் இவ்வுலகத்தில் உள்ள மக்கள் அழிந்து மண்ணுக்கு இரையாகி மடிந்து இருப்பார்கள். ஆதலால் இவ்வுலகம் நிலைக்க காரணமாக இருக்க வேண்டுமா அல்லது அழிய காரணமாக வேண்டுமா என்பதை முடிவெடுத்து நாம் பண்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அவரவர் கையிலே. இக்குறளை நன்கு அவதானித்து விட்டு முடிவெடுத்தால் நன்று. 

இதனால் தான் என்னவோ யுகபுருஷர்களான இராமன், கிருஷ்ணன் ஆகியோர் நற்பண்புகளுக்கு உதாரணமாக திகழுகிறார்கள். அதுவே இராவணன், கம்சன் போன்றோர் அழிவுக்கு உதாரணமாக இருந்திருக்கிறார்கள். 

கீழ் காணும் புறநானூற்றுப் பாடலில் (புறம்: 182) இளம் பெரும்வழுதி என்னும் புலவர் இக்கருத்தை இவ்வாறு கூறுகிறார்:

உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர், 
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத் 
தமியர் உண்டலும் இலரே. முனிவிலர் 
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழியெனின் 
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; 
அன்ன மாட்சி அனைய ராகித், 
தமக்கென முயலா நோன்தாள், 
பிறர்க்கென முயலுநர் உண்மையானே (புறநா.182)

இப்பாடலின் பொருள்: தேவர் உலகத்தில் வாழ்பவர்கள் இந்திரர்கள். இவர்கள் உண்ணும் உணவு அமிழ்தம். இந்த அமிழ்தத்தை உண்ணுவதாலேயே இவர்களுக்குச் சாவு இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள். எந்தச் சூழலிலும் சினம் கொள்ளமாட்டார்கள். பிறருக்கு நன்மை செய்வார்கள். பழியான ஒன்றைச் செய்வதற்கு உலகமே பரிசாகக் கிடைத்தாலும் பழியான செயல்களைச் செய்ய மாட்டார்கள். இவ்வாறு பிறருக்காக வாழும் பொதுநலம் படைத்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது. பண்புடையாரைக் கொண்டே இவ்வுலகம் வாழ்கிறது என்று சங்க இலக்கியப் பாடலும் வலியுறுத்துகிறது.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை” 

என்ற ஒளவையாரின் “மூதுரைப்” பாடல் வரிகளின் உள்ளுரைக் கருத்தும் இதேயாம். இக்குறள் நம்பிக்கையை இழக்காமல், ஒருவர் பண்புடையாராக இருப்பினும் மழையாவது பொழியும், உயிர்கள் தழைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மழையின்றி, மன்னுயிர் ஏது? மன்னுயிரின்றி இவ்வுலகம்தான் நிலை பெறுதல் எங்கனம்.?


“ஓய்ந்துளண் வீரன் என்னின் உலகமோ ரேழும் ஏழும்
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமே தெய்வம் என்னாம்
வீய்ந்துறும் எண்க ணான்முன் னுயிரெலாம் வெருவல் அன்னை
ஆய்ந்தவை யுள்ள போதே அவருளர் அறமும் உண்டால் (கம்ப.பிராட்டிகளங்காண் 26)
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம். ('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர்.மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது: ஆண்டுப் படுதலில்லையாயின் அது மண்ணின்கட்புக்கு மாய்ந்து போவதாம்.

மு.வரதராசனார் உரை
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

Thirukkural - Management - Relationship
The world has been revolving around because of the presence of people who are polite, courteous, supportive, and encouraging. There are workshops, talks, seminars, and conferences on the importance of and practice of ‘Compassion.' The world needs compassionate people. The world would have disappeared by now but for the presence of compassionate people, confirms Kural 996. People need people to progress. Therefore, relationships sustain this world.

The world goes on because of good men
Else it will turn to dust.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

குறள் 994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நயனொடு - நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

புரிந்த - புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

உடையார் -  உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

பாராட்டும் - பாராட்டு  - புகழ்ச்சி; அன்புசெய்தல்; விரித்துரைக்கை; பகட்டுச்செயல்; கொண்டாடுதல்.

பாராட்டுதல் - புகழ்தல்; அன்புகாட்டுதல்; பெருமிதம்உரைத்தல்; கொண்டாடுதல்; பலகாலம்சொல்லுதல்; விரித்துரைத்தல்; மனத்தில்வைத்தல்.

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
நீதியையும் அறத்தையும் மிக விரும்பிப் பிறர்க்கு பயனுள்ளவற்றை செய்யும் பண்பினை உடையவரை இவ்வுலகம் என்றும் பாராட்டும். 

உதாரணமாக சமூக ஆர்வலர்களை /சேவகர்களை இங்கே கூறலாம். ஒரு பக்கம் நீதியையும் அறத்தையும் போற்றுவார்கள். மறுபக்கம் களத்தில் இறங்கி எளியோர்க்கு உதவுவர். 

எனக்கு தெரிந்தே நண்பர்கள் சிலர் நீதியையும் அறத்தையும் போற்றுவதுமட்டும் அல்லாது பலருக்கு கல்வி, உணவு, பொருளுதவி ஆகிய தளங்களில் அன்றாடம் உதவுகின்றனர். இவர்கள் பெரும் செல்வந்தர்கள் அல்ல. நேரம் இல்லை பணம் இல்லை குடும்ப வேலை என்றெல்லாம் நொண்டி சாக்கு சொல்வதில்லை. எல்லோருக்கும் 24 மணிநேரம் தான். இவர்கள் உணவு போன்ற உதவிகளை தனியாகவும் கல்வி போன்ற தளங்களில் ஒரு குழுவாக பலருடன் ஒருங்கிணைந்து உதவுகிறார்கள். அந்த பண்பே இவர்களை போற்றுதலுக்கு உரியவராய் ஆக்குகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், அதனைப் 'பாராட்டும்' என்றார்.).

மணக்குடவர் உரை
நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்.

மு.வரதராசனார் உரை
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

சாலமன் பாப்பையா உரை
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

குறள் 993
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.

ஒத்தல் - நடு; பொருத்தல்; ஒத்துதல்; தகுதியாதல்; ஒற்றுமைப்படுதல்; கேள்வியால்தெளிந்தவற்றில்மனம்ஊன்றிநிற்கை

மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

அன்றால் - அல்ல

வெறுக்கை - அருவருப்பு; வெறுப்பு; மிகுதி; செல்வம்; பொன்; வாழ்வின்ஆதாரமாயுள்ளது; கையுறை; கனவு.

தக்க -தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு.
தகு - taku   II. & IV. v. i. be fit, suitable, proper, decent or convenient, appertain, ஏல்.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

ஒத்தல் - நடு; பொருத்தல்; ஒத்துதல்; தகுதியாதல்; ஒற்றுமைப்படுதல்; கேள்வியால்தெளிந்தவற்றில்மனம்ஊன்றிநிற்கை.

ஒப்பது - ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

முழுப்பொருள்
வெறுத்தக்க என்ற சொல் ஓரளவுக்கு குழப்புவது உண்மைதான். இதற்கு தொல்காப்பிய சூத்திரமாகன, “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” என்பதற்கு இளம்பூரணம் எழுதிய உரை துணைகோளாக இருக்கிறது. புறநானூற்றுப்பாடல் 53ல், “வெறுத்த கேள்வி, விளங்கு புகழ் கபிலன்” என்று இளங்கீரனார் பாடுவதைப் பொருள் செய்கையில், “வெறுத்த” என்ற சொல்லுக்குச் “செறிந்த” என்று இளம்பூரணர் தொல்காப்பியத்தைச் சுட்டி பொருள் செய்துள்ளார்.

மனிதர்களும் விலங்குகளில் ஒன்று தான். ஆனால் மனிதன் விலங்குகளில் இருந்து தன்னை வேறுபடுத்தி தன்னை ஒரு படி உயர்வாக கருதுகிறான். ஒவ்வொரு விலங்குக்கும் ஒருவகை உருவ ஒற்றுமை இருக்கிறது அதன் அடிப்படையில் யானை புலி சிங்கம் என நாம் பலவாரு விலங்குகளை வரையறை செய்கிறோம். அதேபோல மனிதர்களுடைய உறுப்புகளின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை மனிதர்கள் என்று கூறிக்கொள்கிறோம்.

ஆனால் இப்படி உறுப்புகளின் தோற்ற ஒற்றுமையால் விலங்குகளில் இருந்து மனிதர்கள் வேறுபட்டவர்கள் அல்லது மனிதர்கள் ஆகா மாட்டார்கள். மனிதர்கள் (விலங்குகளில் இருந்து மாறுபட்டு) மனிதர்கள் ஆவது செல்வமாக கருதப்படும் நற்பண்புகளை தன் தகுதியாக/தன்மையாக கொண்டு ஒழுகினால் தான். நற்பண்புகளல்லாதவர் மற்றொரு விலங்கு காட்டுமிராண்டி அல்லது மிருகம் என்றும் பண்பல்லாதவர்கள் இவ்வுலகில்  அழைக்கப்படுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல். (வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.) .

மணக்குடவர் உரை
செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடொப்பாகாமையின் அது பொருந்துவதன்று; இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல்.

மு.வரதராசனார் உரை
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

சாலமன் பாப்பையா உரை
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்

குறள் 992
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

ஆன்ற - மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்

குடிப்பிறத்தல் - குடும்பத்தில் பிறக்க வேண்டும் ; குடும்பத்தில் உற்பத்தியாக வேண்டும். 

இவ்விரண்டும் - இவை இரண்டும் 

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்பு வழக்கு தகுதி வழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

முழுப்பொருள்
பிற எல்லா உயிர்களிடத்தே அன்பு செலுத்தும் குணம், மாட்சிமைப்பொருந்திய உயர்ந்த குடியிலே பிறந்து வளர்தல் ஆகிய இரண்டும் உயர்பண்பு வளர்வதற்கான அடித்தளமாக அமையும். 

சக உயிர்களுடனும் மனிதர்களுடநும் அன்புசெலுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பிறரின் துன்பத்திற்கு வருந்துவது அவ்வளவு எளிதும் அல்ல.  "வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்" என்று வள்ளலார் கூறியது அதன்படி நடந்துகொள்வது அவ்வளவு எளிதும் அல்ல. (Compassion and  Empathy  are very important and necessary) உயர்ந்த பண்புகளை பெற்ற குடும்பத்தில் பிறப்பது நமது கையில் இல்லை. அது முன்வினை பயன் எனலாம். ஆனால் நமது பிள்ளைகள் பண்புடன் வளரவேண்டும் என்றால் நாம் எப்படி நடந்துகொள்கின்றோம் என்பதில் கவனம் வேண்டும் என்பதை உணர்ந்து நடந்தால் போதும். அதுமட்டுமின்றி குடி என்றால் வாழ்விடம். நாம் நல்ல குடியில் பிறந்தாலும் நமது வாழ்விடம் அதாவது சூழல் சரியில்லை என்றால் நமது குணங்களும் நமது பிள்ளைகள் குணங்களும் சூழலினால் தாக்கம் பெறலாம். ஆதலால் சூழல் சரியில்லை என்றால் அதனை மாற்றவும்.  நாம் உயர்ந்தகுடியில் பிறக்கவில்லையென்றாலும் நமது சூழலை மாற்றிக்கொள்ளும் ஆற்றலிருந்தால் அதனை நல்ல சூழலுக்கு மாற்றிக்கொள்வதும் சிறந்ததே.  (சூழல் பொருளாதாரத்தினால் முடிவு செய்ய வேண்டாம். அன்பு பண்பு மற்றும் குணங்களின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்)

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
குறள் 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

பரிமேலழகர் உரை
அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி. (அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறர்மேலன்புடையனாதலும் உலகத்தோடமைந்த குடியின்கட் பிறத்தலுமாகிய இவ்விரண்டும் ஒருவனுக்குப் பண்புடைமை யென்று உலகத்தார் சொல்லும் நன்னெறி.

மு.வரதராசனார் உரை
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை
எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
How to choose a messenger/dipolomat/mediator (who carries and communicates messages between two people)? A messenger should having the following qualities 1) He should have love and affection for the humans in general and in particular to the group of people he is representing 2) He should come from a good background (meaning possing good qualities, no doubtful activities in his histroy) 3) He should be able to gather information from different people in his group, from experts and convey the important things precisely by prioritising them appropriately (based on the due weightage) to the King

Questions that I ask to the kid
How to choose a messenger/mediator? 

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப

குறள் 991
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் 
பண்புடைமை என்னும் வழக்கு
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எண் - எண்ணிக்கை; கணக்கிடுதல்; எண்ணம்; ஆலோசனை; அறிவு; மனம்; கவலை; மதிப்பு; இலக்கம்; கணக்கு; சோதிடநூல்; இலக்கியம்; வரையறை; தருக்கம்; மாற்று; மந்திரம்; அம்போதரங்கம்; எளிமை; வலி; எள்.

பதம் - பக்குவம்; உணவு, சோறு; அவிழ்; தண்ணீர்; ஈரம்; கள்; அறுகம்புல்; இளம்புல்; இனிமை; இன்பம்; அழகு; ஏற்றசமயம்; தகுதி; பொழுது; நாழிகை; கூர்மை; அடையாளம்; அளவை; பொருள்; காவல்; கொக்கு; முயற்சி; மாற்றுரு; செய்யுளடிநாலிலொன்று; பூரட்டாதிநாள்; மொழி; காண்க:பதபாடம்; இடம்; பதவி; தெய்வபதவி; வழி; தரம்; கால்; வரிசை; ஒளி; இசைப்பாட்டுவகை.

பதத்தால் - 

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

உடைமை - உடையனாகும்uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

முழுப்பொருள்
நல்ல பண்பை உடையவர்களிடம் (மனத்தன்மை) இருக்கும் முக்கியமான குணம் என்னவென்றால் அது எளிமையாகும். எவரொருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், மற்றவர்கள் (எவராயினும்) தன்னை வந்து எளிதில் அணுகக்கூடிய அளவில் நடந்துக்கொண்டு அவருடன் இயல்பாக பேசி அவருக்கு இணக்கமாக இருக்கிறாரோ அவரே எளிமையானவர்.

மேலும்: அஷோக் உரை

‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா” என்கிறார் தியாகராஜர். அரசனுக்கரசனாக தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்” ராமன் ஒரு கனவு. ஓர் இலட்சியம்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது , பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல் ;' பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல் ' (கலித் . நெய்தல் . 16) என்றார் பிறரும் . அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும் .]

யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.).

மணக்குடவர் உரை
யாவர் மாட்டு மெளிய செவ்வியராதலால் அரிதாய பண்புடைமையென்னும் நன்னெறியினை யெய்துதல் எளிதென்று சொல்லுவர் நூலோர்.

மு.வரதராசனார் உரை
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

Thirukkural - Management - Relationship
When a person is polite in his approach, pleasant to speak to, affable, courteous, and easily approachable by others, he can definitely achieve a righteous path. In addition, all the above mentioned qualities are necessary qualities to achieve effective interpersonal relationships. Therefore, there is a relationship between one's ability to build relationships and the ability to lead a righteous Me, supports Kural 991.

Accessibility, they say, is the easy may 
To be courteous to all.

English Meaning - As I taught a kid - Rajesh
Who is a good human being? Despite any amount of reputation, fame, money etc., if a person (ensures that he/she )can be easily approached by anyone irrespective of age, reputation, hierarchy, caste, religion, wealth etc. Only a person with such humility can be considered a good human being. Also, approachability is one aspect at the same time, making the other person comfortable, going down to their level, breaking the ice are also important. Because sometimes, it is important to break the aura.

Questions that I ask to the kid
Who is a good human being? Why?
Why should one be easily approachable? 
Why easy approachability important? What does it mean?

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி

குறள் 995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு..
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நகையுள்ளும் நகை -  சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

இன்னாது - தீது; துன்பு

இகழ்ச்சி - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு

பகையுள்ளும் - பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி

பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிவார்  - அறிந்தார் - கற்றவர்கள்

மாட்டு- அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல் முடிவு கொள்ளும் முறை; அடி; சொல்.

முழுப்பொருள்
பகைவராக இருந்தாலும் கூட ஒருவரை விளையாட்டிற்காக கூட அல்லது ஒரு சில நிமிடங்களுக்கான சிரிப்பிற்காக கேளிகை செய்ய கூடாது. ஏனெனில் விளையாட்டானாலும் சிறு நேரத்திற்கு ஆயினும் அவமதிப்பும் இகழ்ச்சியும் பிறருடைய மனதை புன்படுத்தும். ஆதலால் பண்புள்ளவர் பகைவரைக்கூட இகழமாட்டார். அப்படி என்றால் யாரையும் நாம் விளையாட்டிற்கு கூட இகழ கூடாது.

ஒப்புமை
”நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்” (பதிற்று. 70:12)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன. ('பாடறிவார்' எனவே , அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாது -விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் பழித்தல் அவருக்குத் துன்பந்தருவதாம்; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆதலாற் பாடறிந்தொழுகுவாரிடத்திற் பகைமையுள்ள போதும் இனிய பண்புகளே உண்டாவன.

பாடறிந்தொழுகுவார் பிறருக்குத் துன்பந்தருவதை விலக்குவராதலின், பகைவருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து. உம்மைகள் இழிவு சிறப்பு.

மணக்குடவர் உரை
தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது: ஆகலாற் பிறர் பாடறிந் தொழுகுவார்மாட்டுப் பகைமையுள் வழியும் அஃதுளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.

மு.வரதராசனார் உரை
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.

English Meaning - As I taught a kid - Rajesh
Even playfully one should not hurt others by means of a joke or deliberate shrewd mincing of words as it can mentally affect them. Hence, a person who knows how to handle others and a situation will not even playfully hurt even the enemies. Mental hurt can adversely affect the person for e.g., 1) stalling his or her performance and work 2) triggering revenge etc. 

This kural doesn't mean one should criticize others. When it comes to work or personal development, criticization is essential for progress. However, 1) the discussion is about improvement(criticization) has to be debriefed upfront, 2) confirmation has to be received that the other person is listening to the feedback given, 3) the criticization has to be constructive not downgrading the confidence.

Questions that I ask to the kid
Is it fine to playfully hurt others? Why?
Can I criticize others playfully or playfully give a feedback to others? Why?

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு

குறள் 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள்.
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
நகல் - சிரிக்கை (சிரிப்பு), மகிழ்ச்சி (தம்முட் குழீஇ நகலி னினிதாயின்(நாலடி, 137)), நட்பு (நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)) ; பரிகாசம், ஏளனம்; படி; 

வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

வல்லர் - வலிமை; habit of feasting or fasting for days at a time

நகல்வல்லர் - பல மக்களுடன்/மனிதர்களுடன் நட்புறவாடிக் கூடி மகிழும் பண்பு / தன்மை உடையவர்

அல்லார்க்கு - அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) 

மாயிரு  - ஏகமாயிரு-த்தல் -> ஒன்றாயிருத்தல்; மிகுதியாய்இருத்தல்.
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

பகலும் - பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

பாற்படுதல் - ஒழுங்குபடுதல்; நன் முறையில் நடத்தல். (பாற்பட்டார் கூறும் பயமொழி(இனி. நாற். 7).)

பாற்பட்டன்று - நன் முறையில் நடக்காமல்

இருள் -  இரு-மை, அந்தகாரம், கறுப்பு,  மயக்கம்; அறியாமை; துனபம்; நரகவிசேடம்; பிறப்பு; குற்றம்; மரகதக்குற்றம்; எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம்; யானை; இருவேல்; இருள்மரம்.

முழுப்பொருள்
ஞானம், பணம் முதலியவற்றை மிகுதியாக பெற்றவராக ஒருவர் இருந்தாலும் பிறருடன் நட்பாய் சிரித்து மகிழ்ந்து நகையாடி பகடி செய்து வாழும் பண்பு இல்லாதவராய் இருப்பின் அவர் பகலிலே இருளில் மூழ்கியிருப்பதற்கு ஒப்பாகும்.

நாஞ்சில் நாடன் உரை
இரு எனும் சொல்லுக்கே பெரிய என்றும், கரிய என்றும் பொருள் சொல்கிறார்கள். இருள், இருட்டு, இருண்ட எனும் சொற்கள் ‘இரு’ எனும் சொல்லின் பிறப்புக்கள் ஆகலாம். பண்புடைமை அதிகாரத்துக் குறள், ‘மாயிரு ஞாலம்’ என்கிறது. மாபெரும் உலகம் என்ற பொருளில்.

‘நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று இருள்’


என்பது முழுப்பாடல். எல்லோரிடமும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழத் தெரியாதவர்களுக்கு, இந்த மாபெரும் உலகமானது பட்டப் பகலிலும் நட்ட நடு இரவாகவே இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். பெரியாழ்வார்,

பரிமேலழகர் உரை
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். 

விளக்கம் 
(எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பில்லார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நகல்வல்லர் அல்லார்க்கு -பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மா இரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகும்.

ஒருவரோடுங் கலந்தறியப் பெறாத பண்பிலிகட்கு உலகியல் முற்றும் தெரியாதென்பது கருத்து. பட்டன்று என்பது உடன்பாட்டுச் சொல்லாதலின் , ' பாழ் பட்டன்றிருள் ' என்று பாடமோதி, ' இருள் நீங்கிற்றன்று ' என்றுரைப்பது பொருள்கெடாவிடினும் பொருந்தாது. 'மாயிரு' மீமிசைச் சொல்.

மு.வரதராசனார் உரை
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

மேலும் (நன்றி: அந்தமிழ்)
புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.

சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை
என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.

Thirukkural - Management - Managing Stress - Laughter far Stress Reduction
Valluvar, through Kural 999, uses an analogy to enforce the importance of laughter. The world is never dark during a bright sunny day. For those who cannot laugh, do not laugh, and do not join others in their laughter this big bright world is dark even during the day. The world here may refer to their inner world.

This world is dark even at noon 
To those who cannot laugh.

If you do not laugh, your inner world will become dark. Laugh a lot to brighten your inner world. Laughter is also called inner jogging. Jog, in addition to jogging for physical fitness, for mental fitness.