Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பயனில சொல்லாமை. Show all posts
Showing posts with label பயனில சொல்லாமை. Show all posts

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

குறள் 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

தீர்ந்த -  தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.
தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை

பொச்சாந்தும் - பொச்சா-த்தல் - poccā-   12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67).

சொல்லார் - சொல்லமாட்டார்கள் 

மருள் -  மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு

தீர்ந்த -  தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.
தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அறு - aṟu   II. v. i. break as a rope does be cut asunder; அறுக்கப்படு; 2. be decided, be ended, தீர்க்கப்படு., aṟu   IV. v. i. cease, end, தீரு; 2. vanish, become extinct, இல்லாமல் போ, aṟu   VI. v. t. cut off, part asunder, வெட்டு; 2. kill by cutting the throat; 3. reap, அரி; 4. root out; 5. distribute, பகிர், 6. tease, worry, வருத்து; v. i. become a widow.

அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர்க்கு - அவருக்கு

முழுப்பொருள்
மயக்கம் போக்கி /அழித்து அழுக்கு குற்றம் தீமை ஆகியவற்றை அறுத்து மெய்/உண்மை தரிசனத்தை அடைந்தவர் அறிவுடையோர். அத்தகைய அறிவுடையோர் ஒருபொழுதும் மறந்தும் கூட பொருளற்ற சொற்களை பயனற்ற சொற்களை அறமற்ற சொற்களை சொல்லமாட்டார்கள். 

ஆதலால் பயனற்ற சொற்களை பேசுவோர் அறிவுடையோர் அல்லர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”......................மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு” (குறள் 352)

பரிமேலழகர் உரை
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது). 

மணக்குடவர் உரை
பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

மு.வரதராசனார் உரை
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அரும் - அருமை - அபூர்வம், மேன்மை, வருத்தம், இன்மை,

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

ஆயும் - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

அறிவினார் - அறிவு உடையவர்கள்

சொல்லார் - சொல்லமாட்டார்கள் 

பெரும் - பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை

பயன்  - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல்லாத - இல்லை, வறுமை

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.    

முழுப்பொருள்
மேன்மையைத் தரக்கூடியச் சொற்களை அரிதானப் பயனை தரக்கூடிய சொற்களை நுணுகி அசைப்போட்டு ஆராய்வோர் அறிவுடையோர்கள். அத்தகைய அறிவுடையோர் பெரிய பயன்களை விளைவிக்கும் சொற்களையே பேசுவார்கள். சிறிய சராசரியான பயனை விளைவிக்கும் சொற்களைக்கூட பேசமாட்டார்கள். சிறிய பயனை விளைவிக்கும் சொற்களையே பேசமாட்டார்கள் பேசக்கூடாது என்றால் அவர்கள் பயனற்ற சொற்களை பேசவே கூடாது பேசவும் மாட்டார்கள். 

மேலும், ”அரும்பயன் ஆயும் அறிவினார்” - அதாவது அறிவினார் அரும்பயன் தரக்கூடியவற்றை ஆய்வர் என்றே கூறப்பட்டுள்ளது. அதவாது அரும்பயன் தரக்கூடியவற்றை தனது மனதில் சிந்திப்பர், அதையே தியானித்து செயல்படுத்தி வெற்றிக்கண்டு பயனை அறுவடை செய்வர். ஆதலால் அவர்கள் பேசினால் அரும்பயன் தரக்கூடியவற்றையே பேசுவர். அத்தகையோர் பெரும்பயன் அல்லாதவற்றை ஒரு போதும் சொல்லமாட்டார்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால் அவர்களுடைய ஆக்க சக்தியை ஆன்ம சக்தியை அவர்கள் சேமித்து வைத்துக்கொள்ள இது உதவும். பெரிய செயல்கள் நம்மை கைவிடாது. சிறிய செயல்கள் நம்மை கைவிடும். அதுபோலவே சொற்களும். பெரும் பயன் தரும் சொற்களை கண்டடைந்தால் அது நமக்கு நன்மையை  தரும். அதுவே சிறியபயன் தரும் சொற்களையும் பயனற்ற சொற்களையும் பேசிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையை சதா ஓடிக்கொண்டு தொலைப்பதுப்போல தொலைத்துவிடுவோம். 

"குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்" என்ற குறளுடன் இக்குறளைத் தொடர்புக் கொண்டு பார்த்தால் பெரியோர்கள் பெரும் பயன் தரும் சொற்களைப் பேசுவார்கள் ஆனால் சிறியோர் பேசும் சிறிய பயன் தரும் அல்லது பயன் தராத சொற்களை தவிர வேறு ஏதையும் பேசமாட்டார்கள்.  ஒரு வேளை பேசினாலும் செயல்படுத்தமாட்டார்கள்

சமீபத்தில் பாவண்ணன் எழுதிய ”பேச்சு கூட எவ்வளவு போதை தரக்கூடியது என்பதை அன்று நான் புரிந்துக்கொண்டேன்” என்ற ஒரு வரியை வாசித்தேன். அவ்வார்த்தை என்னிடம் ஒரு சிறு அசைவை ஏற்படுத்தியது. எவ்வளவு உண்மை. நானே பல நூறு என்ன சில ஆயிர மணி நேரங்கள் போனில் பேசி வீண் செய்து இருக்கிறேன் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் இங்கு. நண்பர்களுடன் வீணான பல அரட்டைகளை என் இருபதுகளில் செய்து இருக்கிறேன். ஒரு தடவை 2008இல், என் நண்பரின் அண்ணனிடம் உரையாடலில் அவர் வருடத்திற்கு ஒரு தடவை தான் ரூபாய் மூவாயிரத்துக்கு தனது போனை ரீசார்ஜ் செய்வார் என்று கூறினார். ஆனால் அதில் ஐநூறு ரூபாய்க்கு கூட பேச மாட்டேன் என்றார். நான் அதிசயமாக, ஏன்? என்று அவரிடம் கேட்டேன். இருக்கு என்பதற்காக பேசுவதா? அவசியமில்லை. நேரமுமில்லை. நண்பர்களுக்கு 5-6 மாதங்களுக்கு ஒரு தடவை பேசினால் போதாதா என்று சொன்னார். சரி, நீ எவ்வளவு ரீசார்ஜ் செய்வாய் என்று கேட்டார். நான் சொன்னேன் 300 ரூபாய் மாதம் என்றேன். எவ்ளோ பேசுவ? என்று வினவினார். 300ரூபாயும் தீர்த்துவிடுவேன். நான் வெட்கும்படியாக ஏளனமாக என்னைப் பார்த்து சிரித்தார். அவர் ஏன் ஒரு நல்ல மருத்துவராக வளர்ந்து இருக்கிறார் என்று அப்பொழுது புரிந்துக்கொண்டேன். ஏனெனில் அவர் தனது ஆத்மசக்தியை செயலிலும் கற்றலிலும் பெற்றார். வீண் பேச்சுப் பேசி தன் நேரத்தையும் ஆத்மசக்தியையும் வீண் செய்யவில்லை.

மேலும், ஜெயமோகனின் வான்கீழ் சிறுகதையில் இவ்வரிகளை படிக்கும் பொழுதும் இக்குறள் எனக்கு நினைவிற்கு வந்தது


உதாரணம் 
குழந்தை பரதனோடு துஷ்யந்தன் அரண்மனை வந்தார் சகுந்தலை. ஏதும் அறியாதவன் போல துஷ்யந்தன் கீழ்வரும் வினாக்களைக் கேட்டான்:

” பெண்ணே நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பையன் யார்? இங்கு ஏன் வந்தாய்?”

சகுந்தலை கூறினாள், “” மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு!”

அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில்.

இடைச்செருகல்:
செவிக்கு நாம் கொடுப்பது செல்வம் என்று நினைத்து நாம் செவிக்கு செல்வத்தை கொடுத்தால் நாம் எவ்வளவு மேன்மை அடைய முடியும் என்பதை உணரமுடியும். ஆதலால் நாம் கேட்கும் நிகழ்ச்சிகள், காணொளிகள், youtube காணொளிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கேட்போம். 

கேட்போர்க்கு ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்று கூறியதால் தான் பேசுவோர்/சொல்வோர்க்கு ‘குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் ’ என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். 

மேலும், மேடை என்பது ஏதோ ஒருவகையில் அறிவை (செல்வத்தை) கொடுக்கும் இடம் ஏனெனில் மற்றவர் செவிகளை நம்மிடம் ஒரு 30-60 நிமிடங்கள் கொடுக்கின்றனர். அதனை உணர்ந்து மேடையில் இருப்போர் பேசவேண்டும். மேடைகளை நகைச்சுவை மன்றம்போல், whatsapp பல்கலைகழக ஒலிபெருக்கிகள் போல் ஆக்கிவிட கூடாது. 


மேலும்: அஷோக் உரை

ஒரு கவிதை
நான் சொற்களை விதைப்பவன் அல்லன்
மேலும் விளைவிப்பவனும் அல்லன்
கனவான்களே
எனக்கு சொற்களை செரைக்க மட்டுமே தெரியும்
-- கவிஞர் சாமான்யன் (கவிதைத் தொகுப்பு: மயிர் வெட்டி)


பரிமேலழகர் உரை
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

மு.வரதராசனார் உரை
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

English Meaning - As I taught a kid - Rajesh
Wise and knowledgable people will  will always think about stuffs that will yield great valuable results that will benefit the society. Such persons will never utter or communicate words that doesn't yield results. That means they will never indulge in trivial talks, insignificant talks, gossips, meaningless debates etc. It is because they conserve their energy for greater things and also not to get distracted in silly things. Mouth is one of sense, apart from mindless eating, mindless futile speaking also should be controlled

Questions that I ask to the kid
what does knowledgble people think about ? (think about great useful things) and what they don't speak? (Trivial things, gossip)?
What does speaking trivial / gossip take away from you ? (energy. focus away from great things. it is a distraction.)

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

குறள் 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

இல  - இல்லை , இல்லாதவற்றை

சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லுக - நாம் எதை பேச வேண்டும் என்றால் ; சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சான்றோர் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லை , இல்லாதவற்றை

சொல்லாமை - சொல்லாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
சான்றோன்: ஒருவனின் உயர்வை பல நிலைகளில் கூறலாம். வரிசையாக சொன்னால் மனிதன், கற்றவன், அறிஞன், புலவர், கவிஞன், சான்றோன் என்று கூறலாம். சான்றோர் எனப்படுவது உயர்ந்தபட்ச அளவுகோலாகும். 

சான்றோன் எனப்படுபவர் மிக உயர்ந்த இடத்தில வைக்கப்பட்டு இருக்கும் நபர். அவர் பல தகுதி நிலைகளை கடந்தே அந்நிலையை அடைந்தார். சான்றோர் மேன்மையின் உருவகமாவே பார்க்கப்படுவார். அத்தகையவரின் நாவில் இருந்து நயம் அற்ற சொற்கள் அதாவது மேன்மையற்ற சொற்கள், இனிமையற்ற சொற்கள், அன்பு அல்லாத சொற்கள், நீதி அற்ற சொற்களை பேசமாட்டார். அப்படி பேசினால் அவர் சான்றோர் அல்ல. 

ஆயினும் (அரிதான ஒரு சந்தர்ப்பத்தில்) சான்றோர் நயம் அல்லாத சொற்களை பேசினாலும் பேசாலும்/பேசக்கூடும் ஆனால் பயனற்ற சொற்களை சான்றோர்கள் பேசாது இருப்பது நன்று. நன்மை பயக்கும். 

அப்படியெனில் சான்றோர் நயம் அற்ற சொற்களை பேசலாமா? பேசக்கூடாது என்பதே பொதுவான விதி. பயனற்ற சொற்களை நயமற்ற சொற்களைவிடவும்  கீழான ஒன்று என்பதை அழுத்திச்சொல்லவே திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சான்றோரும் சினம் கொள்ள அரிதாக வாய்ப்பு உண்டு. அப்படி சினம் கொண்ட நேரங்களில் நயம் இல்லாத சொற்களை பேசக்கூடும். ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும் பயனற்ற சொற்களை சான்றோர்கள் பேசக்கூடாது. (அது தேவையற்ற பிழையான முன்னுதாரணமாய் ஆகம்).

சான்றோர் பயனற்ற சொற்களை பேசக்கூடாது. பயனற்ற சொற்களை பேசுவோர் சான்றோர் ஆக முடியாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.).

மணக்குடவர் உரை
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது

மு.வரதராசனார் உரை
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

குறள் 196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பாராட்டுவானை - பாராட்டு - புகழ்ச்சி; அன்புசெய்தல்; விரித்துரைக்கை; பகட்டுச்செயல்; கொண்டாடுதல்.

மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன்.

எனல் - என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

மக்கட் - மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

பதடி - பதர்; உமி; பயனின்மை; வில்.

எனல் - என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

முழுப்பொருள்
பதடி:
நெற்பயிர்களில் சில மணிகளில் நெல் போன்று பயிர் இருக்கும் ஆனால் உள்ளே அரிசி இருக்காது. உள்ளே அதிகம் அரிசியை வைத்திருக்கும் கதிர் வளைந்து குனிந்து நிற்கும். உள்ளே ஒன்றும் இல்லாத பதடி நிமிர்ந்து நிற்கும். கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இதுவே வித்தியாசம். நெற்கதிரை வெட்டும் பொழுது அரிசி உள்ள கதிர்களை வெட்டிவிட்டு, பதர்களை புறம் தள்ளுவார்கள். நெற்பயிரோடு பிறக்கின்ற பதரை நீக்கிவிட்டு நெல்லை மட்டும்தான் நாம் கொள்கிறோம். நெல் அறுவடைக்குப் பிறகு, பதரடித்தல் என்று சொல்லுவார்கள்.

அதுப்போல மனிதர்களுக்குள்ளேயும் நற்பயிர்களும் உண்டு பதர்களும் உண்டு. அளவுக்கு அதிகமாக தேவையில்லாத விஷயத்தை, ஒருவருக்கும் அறம் பொருள் இன்பம் என்று பயன் இல்லாதவற்றை ஒருவன் பேசினால் அவனை பதர்/பதடி என்கிறார் திருவள்ளுவர். ஆதலால் பயனில்லாது பேசுவோரை மனிதன் என்று மக்கள் அழைக்க கூறாதே பதடி என்றே சொல் என்று உத்தரவிடுகிறார் திருருவள்ளுவர். மனிதர்கள் போல் நிற்கும் ஒரு போலி (பொய்).

ஒரு முழுமையான நெல் விதை விதைத்தால் முளைக்கும். ஆனால், பகடி என்பது மண்ணில் பொட்டால் மக்கி அழியும். நினைவில் கொள்க.


 
பதடி / பதர்
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

எப்பயனும் விளைவிக்காத சொற்களைத் தூக்கிக் கொண்டாடித் திரிகிறவனை, மனிதன் என்று மதிக்காதே; மனிதப் பயிரில் மணியாக உருப்பெறாத பதர் என்று ஒதுக்கு. பார தீரமான நமது அரசியல்காரர்களை, வீரப் பிரதாபக் கோஷங்கள் போடும் எழுத்துக்காரர்களை நாம் என்னென்பது?

Thirukkural - Management - Communication - Meaningful Speech
If a person appreciates one whose words and speeches are meaningless, do not call that person a human being.  That person is useless as he appreciates something useless. He is similar to chaff among grains as that is of no use to anybody, derides Kural 196.

Call him not a man but chat
Who indulges in empty speech.

English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar says that the one who speaks vain words (that doesn't benefit anyone) should not be called man/women/human and he/she should be called/considered as chaff/husk/scum. Because, a chaff doesn't have any grain it and it is useless. It is not consumed rather it is removed and deposited on the ground as it can only decay and cannot germinate. 

Questions that I ask to the kid
Who is considered a chaff/ husk / scum? Why?
How do we consider a person speaking vain words?

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

குறள் 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
சீர்மை - சிறப்பு; புகழ்; கனம்; அளவிற்படுகை; வழவழப்பு; காண்க:சீமை; நன்னடை.

சிறப்பொடு - சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

நீங்கும் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லை ; இல்லாதவற்றை

நீர்மை - நீரின்தன்மை; தன்மை; சிறந்தகுணம்; எளிமை; அழகு; ஒளி; நிலைமை; ஒப்புரவு.

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

சொலின்சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
ஒருவர் கற்றறிந்தவர்கள் முன்பு சான்றோர்கள் முன்பு பயனற்றவற்றை பேசினால் அவருடைய குணத்தினால் ஈன்ற புகழும் அவர் ஈன்றப் பெருமையையும் மதிப்பும் அங்கு நீங்கிவிடும். ஆதலால் பலர் கூடியிருக்கும் அவையிலேப் பயனல்லாதவற்றைப் பேசக்கூடாது.

ஏனெனில் இவர் பெரியோர் (சான்றோர்) என்று நினைத்தோமே ஆனால் இவரோ இப்படிப்பட்ட பயனல்லாதவற்றை பேசுகிறாரே என்று உலகம் பேசும். ஆதலால் அங்கே அவர் புகழ் அழிந்துவிடும்.

உண்மையை பேசுவதால் ஒரு பெருமை வரும். பொய்ப்பேசாமல் இருப்பதால் ஒரு பெருமை வரும். புறம்பேசாமல் இருப்பதால் ஒரு பெருமை உண்டு. ஆனால் பயனல்லாதவற்றைப் பேசினால் பெருமை நீங்கிவிடும். ஆதலால் பயனல்லாதவற்றைப் பேசாமல் நம்மிடம் சிறிதாயினும் பெரிதாயினும் இருக்கும் புகழையும் பெருமையும் காத்துக்கொள்ளவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”சிறப்பும் சீரும் இன்றி” (அகநா 369:22)

பரிமேலழகர் உரை
பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.).

மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.

மு.வரதராசனார் உரை
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

குறள் 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

சாரா - பொருந்தாத

நன்மையின் - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்.

நீக்கும் - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

சாராப் - பொருந்தாத

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பல்லார்  - பலர்

அகத்து - உள்ளம் - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
நயன் சாரா சொற்கள் என்றால் நீதி இல்லாத சொற்கள், நயம்  (மேன்மை) இல்லாத மலிவான சொற்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.  பயன் சாரா சொற்கள் என்றால் நற்பலன் இல்லாத சொற்கள் என்று பொருள். பண்பில்லா சொற்கள் என்றால் அழகில்லாத முறையில்லாத இயல்பில்லாத சொற்கள் என்று பொருள்.

நீதி இல்லாத, நயம் இல்லாத, பயன் தராத, அழகில்லா முறையில்லா பண்பில்லா சொற்களை பலர் கூடி இருக்கும் அவையில் பேசினால் அது அவருடைய புகழை கெடுக்கும். அது வரையில் அவர் ஈன்ற நன்மைகளை அகற்றிவிடும்.

பொதுவாக வீட்டில் சொல்லுவார்கள் நல்ல பெயர் வாங்குவது மிக கடினம் பல நாட்கள் ஆகும். ஆனால் கெட்டப் பெயர் வாங்க ஒரு நொடி ஒரு கணம் ஒரு நிகழ்வு போதும். ஒரு தடவை கெட்டப் பெயர் வாங்கினால் அதற்கு முன் வாங்கிய நற்பெயர் எல்லாம் நீங்கி விடும். இது நயன் சாராமால் பயன் சாராமல் பண்பில்லாமல் பேசுவதற்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

மு.வரதராசனார் உரை
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

பயனில பல்லார்முன் சொல்லல்

குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லாதவற்றை

பல்லார் - pallār   pron. பல்¹. Many persons; பலர் பல்லா ரகத்து (குறள், 194).  

முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல். 

சொல்லல் - சொல்வது; கூறுவது

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

இல - இல்லாதவற்றை

நட்டார் - நண்பர்; உறவினர்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

செய்தலின் - செய்வது; செய்தலை காட்டிலும்

தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு.

முழுபொருள்
நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் துன்பம் தருபவற்றை (இன்பம் அல்லாதவற்றை) செய்வது கேடு, தீயது. அது நமக்கு துன்பத்தை தரும். அதனை காட்டிலும் தீயது பலர் (பல அறிவுடையோர்) கூடியுள்ள ஒரு இடத்தில் முன் நின்று பிறருக்கு பயன் அற்ற சொற்களை கூறுவது, பயன் அற்ற செய்திகளை பேசுவது, சம்பந்தமில்லாத வற்றை பேசுவது. இத்தகையது அவர்களுக்கு மட்டும் தீது அல்ல. நமது ஆற்றலையும் நேரத்தையும் நாம் வீண் அடித்துக்கொண்டு இருக்கிறோம். ஆதலால் நமக்கும் தீதாகும்.

ஏனெனில் பலர்கூடி இருந்தால் அங்கே உள்ள ஆற்றல் மிக அதிகம். அதைப்போன்ற ஒரு நிகழ்வை ஒருங்கினைப்பது கடினமாகும். அவ்வாற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். அதனை பயன் இல்லாமல் சிதைப்பது நன்மையை தவறவிட செய்வதனால் வரும் பாவம்/ துன்பம் ஆகும்.

ஏன் நண்பர்களையும் உறவினர்களையும் இங்கே திருவள்ளுவர் கூறவேண்டும்? ஏனெனில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இழைத்த தீங்கை சரி செய்ய மன்றாடியாவது மறுவாய்ப்பை நம்மால் பெற முடியும். அவர்களும் ஒருவர் அல்லது ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் ஒரு சபையில் அல்லது ஒரு தளத்தில் பலர் இருப்பார்கள். அவர்களுடைய நேரத்தை நம்மால் திருப்பித் தரமுடியாது. ஒரு பத்து அல்லது இருபது பேரிடம் சென்று சரி செய்வதே பெரும்பாடாக இருக்கும். அதற்குமேல் இருந்தால் அது முடியாது என்றே சொல்லலாம். மேலும் சரிசெய்வது செய்த தவறை நியாயப்படுத்தாது.

இது ஃபஸ்புக் / முகநூல் (Facebook) போன்ற தளங்களில் மக்கள் வெட்டி அரட்டை அடித்து கூச்சல் போடுவதும் அடங்கும் என்பதே எனது கருத்தாகும்.



மேலும்: அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.

மு.வரதராசனார் உரை
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

பலர் கூடி இருக்கும் அவையில், அல்லது பல்லோரும் வாசிக்கும் பருவ இதழில், வலைத்தளத்தில், முகநூலில் யாருக்கும் எவ்விதப் பயனும் தராத சொற்களைப் பேசுதல் என்பது, நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்களுக்குத் தகாதன செய்வதை விடவும் தீமையானது.

English Meaning - As I taught a kid - Rajesh
It is more harmful to speak vain /useless words in front of many people, than to do contemptible deeds to your friends and family. Because it is difficult to organize large people. Hence, if we are mindless about the precious time in front of large gathering and waste it, then it will result in a very bad reputation and we will not get another chance to talk in front of large gatherings. It might reduce our other opportunities for growth as well. 

Doing contemptible deeds to family and friends is certainly wrong but at least for the sake of relationship one can yield their forgiveness once. But large gatherings will not easily forgive us for our vain speech. 

Questions that I ask to the kid
Why is vain speech in front of others more harmful than bad deeds to friends?

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
பல்லார் - pallār   pron. பல்¹. Many persons; பலர்
முனியப் - முன் + இய
முன் - முன்பு
இய - இயைவு - iyaivu   n. இயை¹-. Union, joining together; சேர்க்கை, இணக்கம்; பொருத்தம் 
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
இல - இல் - இல்லை
சொல்லுவான் - பேசுவான்
எல்லாரும் - கூட்டத்தில் கூடியுள்ள எல்லோராலும்
எள்ளல் - இகழ்தல்; நிந்தித்தல்; இழிவாகப்பேசல்; தள்ளல்; சிரித்தல்.
எள்ளப்படும் - சிரிப்புக்குள்ளாகி இகழப்படுவான்

முழுப்பொருள்
ஓர் இடத்தில் ஒருவருக்கு-இருவருக்கு மேல் கூடும் பொழுது அது பெரும்பாலாக ஒரு நிகழ்விற்காக இருக்கும். பலர் கூடும் இடங்களில் பலருடைய நேரம் அடங்கி உள்ளது. இருவர் மட்டும் சந்தித்து ஒரு மணி நேரம் (அல்லது ஒரு நாழிகை) பேசினால் அங்கே இரு மனித மணி நேரங்கள் செல்வாகிறது. அதுவே 20 பேர் கூடினால் ஒரு மணி நேரத்தில் 20 மணி நேரங்கள் செல்வாகும். எத்தனை பெருஞ்செல்வம் அந்த மணித்துளிகள்! அத்தகைய கூட்டு நேரத்தை மிகவும் விவேகமாக செலவிட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

பலர் கூடி இருக்கும் இடத்தில் தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களை ஒருவன் சொல்வான் என்றால் அத்தகையவன் கூட்டத்தில் கூடிய எல்லோராலும் நகைப்புக்குள்ளாகி இகழப்படுவான்.

ஒப்புமை
பயனில மொழிவாயோ (கலி.69:11)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.)

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை
பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

மு.வரதராசனார் உரை
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

Thirukkural - Management - Communication - Meaningful Speech
The message in Kural 191 provides additional knowledge to the view expressed in Kural 196. A person who speaks unwanted, meaningless, and out of place words will be laughed at, criticized, and looked down by learned people. People who give importance to meaningful words or speeches will despise the person who appreciates meaningless conversations.

To disgust people with empty words 
Is to be despised  by all.

சொல்லுக சொல்லிற் பயனுடைய

குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சொல்லுக - நாம் எதை பேச வேண்டும் என்றால்
சொல்லில் - நாம் பேசக்கூடிய சொற்களில், பேசக்கூடிய செய்திகளில்
பயன் உடைய - மற்றவருக்கு பயன் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும்
சொல்லற்க - நாம் எதை பேசக் கூடாது என்றால்
சொல்லில் - நாம் பேசக்கூடிய சொற்களில், செய்திகளில்
பயன் இலாச்  - மற்றவருக்கு பயன் தராத
சொல் - சொற்களை, செய்திகளை

முழுப்பொருள்
இவ்வுலகில் மனிதர்கள் எவ்வளவோ பேசுகிறார்கள். பேசுவதற்கு எவ்வளவோ ஆற்றல் செலவு ஆகிறது. அவ்வாற்றல் உற்பத்தியாக மனிதன் எவ்வளவோ உழைக்கிறான். பேசும் பொழுது நமது நேரமும் செலவாகிறது. மற்றவர் நேரமும் ஆற்றலும் செலவாகிறது. ஆதலால் நாம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேச வேண்டும்.

நாம் பேசக்கூடிய சொற்கள் மற்றவருக்கு பயன் தருகிறதா என்று யோசித்து பேச வேண்டும். பயன் தரக்கூடிய செய்திகளை மட்டுமே பேச வேண்டும். பயன் தராத வற்றை பேசக்கூடாது என்கிறார் திருவள்ளுவர்.

இங்கே பயன் என்பது அறம், பொருள், இன்பம் என்று ஏதாவது ஒருவகையில் ஆவது இருத்தல் வேண்டும். அது மட்டும் இன்றி திருவள்ளுவர் வாக்கியம் என்று கூறி இருக்கலாம். ஆனால் அவரோ சொல் என்கிறார். ஆதலால் பயன் தராத ஒரு சொல்லை கூட நாம் பேசக்கூடாது.

சுருக்கமாக கூறினால், சொன்னால் பயனுள்ள சொற்களை சொல். பயன் இல்லாத சொற்களை சொல்லாதே. 

பலர் “பேச வேண்டும்” என்பதற்காகவே பேசுகிறார்கள். “பேச வேண்டி இருந்தால் மட்டுமே பேச வேண்டும்” எப்படி ஒரு செயலைச் செய்வதற்கு முன்னால் ஏன்? எதற்கு? போன்ற கேள்விகளைக் கேட்டோமோ அதே போலப் பேசுவதற்கும் சில கேள்விகள் இருக்கின்றன.

வேறு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் பேசுவதற்கு முன்னால் சில வடிகட்டிகளை (Filter) நாம் உபயோகப்படுத்த வேண்டும். அந்த வடிகட்டிகளைத் தாண்டி வந்தால் மட்டுமே பேச வேண்டும். 
1) முதல் வடிகட்டி, பேசித்தான் ஆக வேண்டுமா? இல்லை அமைதியாக இருந்துவிடலாம என்ற கேள்வி.
 நாம் பேசிப் பிரச்சினையைப் பெரிதாக்குவதை விடக் கொஞ்சம் அமைதியாக இருந்து, பிரச்சினையைச் சற்றே தூரத்திலிருந்து கவனித்தோமேயானால் நமக்கு நல்ல தீர்வுகள் புலப்படும்.

2) பேசித்தான் ஆக வேண்டுமென்றால் அடுத்த வடிகட்டி – இதனால் யாருக்கும் கெடுதல் விளையுமா? என்று பார்க்க வேண்டும்.
எதிர்மறையான பேச்சுகளால் தேவையற்ற விளைவுகள் ஏற்படுக்கூடும். மற்றவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் பேச்சுகளைப் பேசக் கூடாது. நன்மை விளைவிப்பதையே பேச வேண்டும்.

3) அடுத்த வடி கட்டி. நாம் பேச வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
நாம் சுருக்கமாகப் பேசப் பேச நாம் பேசுவதை எல்லோரும் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பிப்பார்கள். நாம் எதைச் சொல்ல நினைக்கிறோமோ அது அவர்களை மிகச் சரியாகச் சென்றடையும்.

The 3-Minute Rule by - Brant Pinvidic என்றொரு புத்தகம் உண்டு. அது Sales/விற்பனை  பற்றித்தான் என்றாலும் அது பொதுவாகவே நம்முடைய பேச்சிற்கும் பொருந்தும். To create a persuasive pitch that fits into the 3-minute time frame, it needs to consist of about 25 sentences that anser the following questions: What is it? How does it work? Are you sure? (give reason to believe)? And can you do it? (show proof) To maximize the impact of your pitche, you then need to make sure it has an opening, a callback, an "all is lost" moment, a hook and an edge.

 மேலும்: அஷோக் உரை.

பரிமேலழகர் உரை
சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சொல்லின் பயன் உடைய சொல்லுக - ஏதேனு மொன்றைச் சொல்லின் பயனுள்ள சொற்களையே சொல்லுக; சொல்லில் பயனிலாச் சொல் சொல்லற்க - சொற்களிற் பயனில்லாதவற்றைச் சொல்லாதிருக்க.

ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று. ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது 'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.

மணக்குடவர் உரை
சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது

சாலமன் பாப்பையா உரை
சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா

பொருள்: சொல்லின் பயன் உடைய சொல்லுக - (ஒருவன்) பேசின் பயனுடைய சொற்களைச் சொல்லுக; சொல்லில் பயன் இல்லா(த) சொல் சொல்லற்க - சொற்களுள் பயன் இல்லாத சொற்களைச் சொல்லற்க.

அகலம்: இல்லாத என்பது ஈறும் லகர வொற்றும் கெட்டு நின்றது.

கருத்து: பயனில சொல்லற்க; பயனுடைய சொல்லுக.

Thirukkural - Management - Communication - Meaningful Speech
Kural 200 adds value to the practice of choosing the right words. This command by Valluvar highlights the importance of diction. Speak words that have relevance and meaning. Never use words that do not have any relevance and meaning and fail to create the desired impact. Be a wordsmith that means using minimum words to communicate effectively.

Remember, every word you speak, speaks of you. Hence, it is said, speech is silver and silence is 
golden.

Whatever you speak must be useful. If what you say does not have any value, meaning, or purpose, do not say such a thing is the sagacity from Kural 200.

Speak words which are useful, 
Never those that are vain.

If what you speak does not add value to the conversations or discussions, avoid speaking to make your silence more meaningful.


English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar says Speak, such that what you speak is worthy; speak not if what you speak is not worthy. Also note that Thiruvalluvar doesn't even say a sentence. He says word. That means every word should be worthy. Don't speak even one word that is not worthy.  In this world, in this life, humans speak a lot. For speaking so much energy is spent. To earn the energy man works for it. While speaking we spend out time too. Listeners time is also taken away. We can't earn the time back. Hence, it is important to consider what one speaks. Does our speech is worthy or not matters. 

Questions that I ask to the kid
What should we speak and what we should not speak? Why?

நயனிலன் என்பது சொல்லும்

குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை.
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.
நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

-> ஒழுக்கம் (பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் (திருக்குறள்))
-> நன்மை, சிறப்பு, நயம் (பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது (திருக்குறள்)

இலன் - இல்லாதவன்

நயனிலன் - நயன் இல்லாத; நளினம் இல்லாதல் ஒழுக்கம் இல்லாத; முறை இல்லாத; அறம் இல்லாத ஒருவன்.

என்பது - eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )  
என்பது - என்று என்பதை.

சொல்லும் - சொல்லுதல் பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லும் - சுட்டிக்காட்டும் / எடுத்துக் காட்டும் / காட்டிக் கொடுத்து விடும்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

பயனில - பயன் இல்லாத / உதவாத (கருத்து / பொருள் / பேச்சு) பற்றி.

பாரித்து பாரி-த்தல் - pāri-   11 v. cf. sphāri. intr.1. To spread, expand; to abound; பரவுதல்.இவணலம் பாரித்திட்ட விந்நகர் (சீவக. 706). 2. Tobe bulky, huge; பருத்தல். Colloq. 3. To increase; மிகுதியாதல். தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து (பெரியபு. இளையான். 9). 4. Toarise, appear, come into being; தோன்றுதல்.பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442).5. To prepare; ஆயத்தப்படுதல். பாயிய வெழுந்தவேங்கை பாரிக்குமளவில் (சூளா. துற. 19).--tr. 1.To foster; வளர்த்தல். பண்பின்மை பாரிக்கு நோய்(குறள், 851). 2. To cause to appear; தோன்றச்செய்தல். 3. To cause to be obtained;அமைத்துக்கொடுத்தல். பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால் (அரிசமய. பத்திசா. 98). 4. Tomake, form, construct, create, constitute; உண்டாக்குதல். (W.) 5. To fill up, complete;நிறைத்தல். பாரித்துள்ள இப்பண்டமும் (திருவிளை.குண்டோ. 16). 6. To wear, as ornaments; அணிதல். கைவளை பாரித்தார் (இராமநா. பால. 21). 7.To worship with flowers; அருச்சித்தல். தடமலரெட

உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

பயனில உரைக்கும் - வீணலப்பு (வெட்டிப் பேச்சே)

உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை

முழுப்பொருள்
கருத்துக்கள் எதுவும் இல்லாத நன்மை விளைவிக்காத, பயன் இல்லாத, உதவாத, களர் நிலைப் பொருளை பற்றி விரிவாக விரித்துரைக்கும் வீணரின் வீணலப்பு (வெட்டிப் பேச்சே) காட்டி கொடுத்துவிடும் அவர் எத்தகையவர் அவரின் போக்கு எத்தகையவை என்று.

அத்தகைய வீணன் அவர் உணர்வினில் ஒழுக்கமில்லாத, முறையில்லாத, அறமில்லாத, நளினமில்லாத ஒருவன் என்று. அத்தகையவன் அறத்தை, ஒழுக்கத்தை பேணித் தரத்தோடு வாழ்வைத் வாழ்வும் தகுதியோடு இல்லாதவர்.

அதுமட்டும் இன்றி அத்தகைய வீணின் பேசுபவருடைய முழு அறிவின்மையும், பேதமையும் வெளிபடும்.

ஒருவர் பேசுவது மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அது வீண் பேச்சு தான். அது மற்றவருக்கு நேரம் விடயம் தான்.

ஒளவையார் இதையே ஒரு சில வார்த்தைகளில் சொல்லுக்கு ஆத்திச்சூடியில் இலக்கணம் வகுத்துள்ளார்.

ஆத்திச்சூடி உரை
மிகைபடச் சொல்லேல் உரையாடும் போது எதையும் மிகைப்படுத்திக் கூறாதே 
சித்திரம் பேசேல் பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே 
ஞயம்பட உரை  பிறர் மகிழும்படி பேசு
வல்லமை பேசேல் உன்னுடைய திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது. 
வஞ்சகம் பேசேல்  கபடச் சொற்களை பேசாதே
கண்டொன்று சொல்லேல்  கண்ணாற் கண்டதற்கு மாறாக சொல்லாதே
நொய்ய உரையேல் இழிவான மொழிகளைப் பேசாதே 
பிழைபடச் சொல்லேல் குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
மொழிவது அற மொழி சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல் 
வெட்டெனப் பேசேல் யாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது. 
அழகு அலாதன செய்யேல் இழிவான செயல்களை செய்யாதே 

மேலும்: நன்றி அவனிவன் பக்கங்கள் அஷோக்

மேலும்: நன்றி (Moving Moon)
கருத்தென ஏதும் இல்லாக்
.. களர்நிலைப் பொருளை ஒட்டி
விரித்துரை செய்யும் அந்த
.. வீணரின் வெட்டிப் பேச்சே
உரைத்திடும் அவர்தம் போக்கை,
.. உணர்வினில் அறத்தைப் பேணித்
தரத்தொடு வாழ்வைத் தாங்கும்
.. தகுதியோ டில்லார் என்றே

மேலும்
எளிமையா சொன்னாத்தான் நன்னாச் சொல்லறதா அர்த்தம். பாக்கியெல்லாம் வெறும் சொல் விரயம்தான்.

ஒப்புமை
”பாரித்தேன் தரும நுண்ணூல்” (சீவக.214)

உதாரணம்
(நன்றி: அம்மன் தரிசனம்)
பயனில்லாதவற்றை ஒருவன் பேசிக் கொண்டிருந்தால் அப்பேச்சு அவன் இங்கிதமற்றவன் என்பதையே சொல்லும் என்கிறார் அவர்.

ஒரு பொதுக்கூட்டம். அதற்கு தலைமை தாங்குபவர் மிகவும் முக்கியமான நபர். அங்கும் இங்கும் விமானத்தில் அலைந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபர்.

அவருடைய தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பலர் பேசினார்கள். அதில் ஒருவர் கடுகளவு விஷயத்தைக் கடலளவாக விரித்துப் பேசிக்கொண்டே இருந்தார். தலைமை தாங்கும் நபருக்கு சீக்கிரம் மேடையை விட்டு இறங்கி விமானத்தைச் சரியான நேரத்தில் அடைய வேண்டிய அவசரம். அந்த அவசரத்தின் அவஸ்தை புரியாமல், பேசுகிறவர் தன் வித்தகத்தைக் காட்டுவதாக நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.

சிரிக்கும்போது முகத்தில் பல் ஒளி விடுவது மாதிரி, வீட்டில் ஒளிவிடும் விளக்கிற்கு பல்பு என்று பெயர் வைத்தான் தமிழன் என்ற ரீதியில் அவருடைய சொல் ஆராய்ச்சி வேறு... நீண்டு கொண்டிருந்தது.

தலைமைப் பொறுப்பை ஏற்றவருக்கு முகம் சிவந்துவிட்டது. எப்படியோ தப்பினால் போதும் என்று இடையிலேயே ஓடிவிட்டார்.

மறுநாள் விழா ஏற்பாட்டாளருக்கு அவர் தொலைபேசியில் பேசிச் சொன்ன செய்தி இதுதான்:

“என்னய்யா இது? அந்த ஆளைப் புலவர் என்று சொல்லுகிறீர்கள். அவருக்கு உடனிருப்பவர்களின் உணர்வும், சபை நாகரிகமும் கூடப் புலப்படவில்லையே! அந்த ஆள் என்னை மேடையில் வைத்துக்கொண்டே ஒரு மணி நேரம் பேசிவிட்டான். ‘நான் ஒரு முட்டாள்’ என்பதை இவ்வளவு விரிவாகப் பேசிய முதல் ஆள் அந்த நபர்தான்” என்றார்.

நயம் என்ற சொல்லுக்கு வேதசாஸ்திரம் என்ற ஒரு பொருளும் உண்டு.

பயனற்ற பேச்சைப் பேசும் போது இவன் சாஸ்திரமறியாதவன் என்பதும் புலப்படும் என்ற கருத்து இக்குறளில் உள்ளது. நயம் என்பதற்கு மேன்மை என்ற பொருளும் உண்டு. வீண்பேச்சு பேசுகிறவன் மேன்மையற்றவன்தான். அவனை ‘நயனிலன்’ என்பது பொருத்தம்தானே!

வ.உ.சிதம்பரனார் உ ரை
பொருள்: பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன இல்லாத சொற்களை விரித்துப் பேசும் பேச்சு, நயன் இலன் என்பது சொல்லும் - (அவ்வாறு பேசுவோன்) நன்மை இல்லாதவன் என்பதைக் கூறும்.

கருத்து: பயனில சொல்லுவான் நல்லவன் அல்லன் என்று கருதப்படுவான்.

பரிமேலழகர் உரை
பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே; நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன்' என்பதனை உரைக்கும்.

விளக்கம்
(உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.) 

மணக்குடவர் உரை
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.

மு.வ உரை
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

நன்றி: அகராதி.com உரை
several kinds of உரை, or modes of explanation are given by Tamil Gram marians. The author of காரிகை has given four, viz.: 1. கருத்துரை, the main sentiment or scope of the text explained, also called தாற்பரியவுரை. 2. பதவுரை, verbal explana tion, or interpretation, word by word, or clause by clause, also called கண்ணழிவுரை. 3. பொழிப்புரை, the substance of the text omitting rhetorical ornament, and ad juncts, or a free rendering of the text without interruption, also called பொழிப்புத் திரட்டுரை and பிண்டவுரை. --Note. The latter is the same as பதவுரை would be without the words of the text interspersed. 4. விரித்துரை, explanation at large, comment or exposition with proofs, illustrations, &c., also called அலகவுரை and விரியுரை; any of the preceding three, or any other kind of explanation may be included in this last. 

According to நன்னூல், உரை is divided into tow general classes, viz.: காண்டிகையுரை and விருத்தியுரை. 1. காண்டிகையுரை, brief exposition, or explanation of the text embracing five sub-divisions. (a) கருத்துரை, the scope of the text. (b) பதப்பொருள், verbal rendering being either as பதவுரை or as the scope and definition of பொழிப்புரை, given above, (c) உதாரணம், example for illustration. (d) வினா, anticipating objections, (lit.) proposing questions. (e) விடை, answering such objec tions or questions as may possibly occur. 2. விருத்தியுரை, copious or complete explana tion embracing fourteen sub-divisions. 1. பாடம், giving the text or verse to be ex plained with different readings and choice exposition. 2. கருத்துரை, the general scope, or import of the text, as in காண்டிகை. 3. சொல்வகை, giving the parts of speech, or showing the grammatical connection when necessary to clear away obscurities. 4. சொ ற்பொருள், giving equivalent, literal words, or clauses as பதப்பொருள், in காண்டிகை, verb al renderings, &c. 5. தொகுத்துரை, a free rendering of the text as பொழிப்புரை, above. 6. உதாரணம், illustration by examples, as above. 7. வினா, anticipating objections, or raising questions as before. 8. விடை, an swering such objections or giving reasons in support of the statements in the text. 9. விசேடம், special explanation, particular remarks. 1. விரிவு, supplying ellipses as of cases or otherwise. 11. அதிகாரம், determin ing the meaning of doubtful terms by refer ence to the subjects under discussion, as be longing to such a head, &c., or according to another exposition pointing out the be ginning and ending of the discussion of the different subjects respectively, the opinions of different commentators. 12. துணிவு, de ciding the meaning of terms concerning which there may be diversity of opinion. 13. பயன், inference, applications or recapi tulation to show what is to be learnt by the text. 14. ஆசிரியவசனம், quotations, or textuary proofs from other authors. (p.)