Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label பிரிவாற்றாமை. Show all posts
Showing posts with label பிரிவாற்றாமை. Show all posts

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்


குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

ஆற்றிஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அல்லல் - துன்பம்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

நீக்கி - நீக்குதல் -ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வார் -  வாழ்கிறார்

பலர் - அநேகர்; சபை.
 
முழுப்பொருள்
இவ்வுலகில் மனித வாழ்வில் காதல் என்பது ஒரு அத்தியாயமே. அறம் பொருள் இன்பம்/காமம் ஆகியவற்றை சமநிலையில் பேணுவது அவசியம். ஆதலால் காதலிலேயே ஒருவர் தங்கிவிட முடியாது. குறிப்பாக தலைவன் ஆற்ற பல தர்மங்கள்/கடமைகள் இருக்கின்றன. தனது கடமையை ஆற்றினால்தான் பொருள் ஈட்ட முடியும். பொருள் இல்லையேல் இன்பத்தை இழக்க நேரிடும். ஆனால் பொருள் ஈட்ட வெளியூர்களுக்கு செல்ல நேரிடும். அத்தகைய காலங்களில் தலைவன் தலைவியை பிரிந்து செல்வதை தவிர்க்க முடியாது. 

தலைவனின் பிரிவால் தலைவி துன்பத்தில் உழன்று இருக்கிறாள் போலும். ஆதலால் தோழி கூறுவதாக இப்படி இருக்கக்கூடும் ”தலைவன் தலைவியை விட்டு வேலைநிமித்தமாக பிரியப்போகிறேன் என்று தலைவி கேட்க நேரிடுவது கொடுமையானது தான். ஆனால் அக்கடுமையான பிரிவை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டோர் இருக்கின்றனர். பிரிவுடன் நின்றுவிடுமா அத்துன்பம்? தென்றல், மாலைப்பொழுது, நிலா, இரவு, இசை என்று பலவற்றின் மூலமாக நினைவுகள் நம் மனதை குத்தி குத்தி பசலைநோயினை தரும். ஆனால் துன்பமான காமநோயினை கடந்தோரும் இருக்கின்றனர். ஆதலால் கொடுமையான பிரிவை ஏற்றுக்கொண்டு துன்பமான காதல்நோயினை கடந்து உயிர்வாழும் பலர் இவ்வுலகில் இருக்கின்றனர் என்பதில் நினைவில்கொள் என் தோழியே (தலைவியே). ஆனால் நீயோ (தலைவி) பிரிவை ஆற்றமுடியாத அளவிற்கு உன் தலைவனை நேசிக்கிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் நீ துன்பத்தில் உழன்றுக்கொண்டு இருக்கிறாய் என்பதையும் மனதில்கொள். மற்றவர்ப்போல் பிரிவு என்னும் இத்துன்பத்தில் இருந்து வெளியே வா. அதுவே உன்னை உயிர்வாழச்செயும். தலைவன் திரும்பி வரும் பொழுது நீ உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா?

மேலும் அஷோக் உரை 

ஒப்புமை
”ஓராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே” (குறுந் 38:5-6)

பரிமேலழகர் உரை
(தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை, என்ற தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்றது ஒக்கும்,) அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும்மகளிர் உலகத்துப் பலர். (பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக்கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரியதொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந் தேயத்து அவர்க்கு யாது நிகழும'? என்றும் 'வருந்துணையும் யாம்ஆற்றியிருக்குமாறு என்'? என்றும், 'அவ்வளவுதான் எஞ்ஞான்றும் வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காம வேதனையும், புறத்து 'யாழிசை,மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா 'மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்துஉயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப்பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணரநின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும்இறந்து படுவல்' என்பது கருத்து.)

மணக்குடவர் உரை
பொறத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் பலர். அல்லல்நோய்- காமவேதனை. பிரிவாற்றுதல்- புணர்ச்சியின்மையைப் பொறுத்தல்.

மு.வரதராசனார் உரை
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு, (பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

சாலமன் பாப்பையா உரை
சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

 

குறள் 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
தொடின் - தொடுதல் - தீண்டுதல்; தோண்டுதல்; பிடித்தல்; பிழிதல்; தொடங்குதல்; உண்ணல்; ஆணையிடுதல்; செலுத்துதல்; வாச்சியம்வாசித்தல்; அடித்தல்; செருப்பணிதல்.

சுடின் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

அல்லது - தீவினை; தவிர

காம - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

காமநோய் - s. Love-sickness, மதன நோய்.

போல - ஓர்உவமவுருபு,  1. like, similar (post. + acc.) 2. as (if) (post. + conditional; post. + pt. n.) [3. inf., stem of போல் `resemble'] 

விடின் விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

சுடல் - சுடரிலிருந்துவிழும்எண்ணெய்த்துளி; திரியின்எரிந்தமுனைமுடிச்சு.

சுடல்சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

ஆற்றுமோ - ஆற்றுதல் -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

முழுப்பொருள்
தீயினை அணுகினால் அது மிகவும் சுடும். அதே தீயைவிட்டு விலகினால் தீயின் வெட்பத்தை நம்மால் அனுபவிக்க முடியாது. அதனால் தான் அகலாது அணுகாது தீக்காய வேண்டும் என்பதை நாம் அறிவோம் (மன்னர் சேர்ந்தொழுகதலிலும் பார்த்தோம்).

தீயினை தொட்டால் தான் நம்மை சுடும். தீ நம்மீது படும் பொழுது அது சுடும். பின்பு ஆறிவிடும். ஆனால் என் தலைவர் மீதுள்ள காதலினால் வந்த இக்காமநோய் ஆனது அவர் என்னை விட்டு விலகினாலும் சுடுகிறது. அவர் பிரிவால் நான் துன்படுவேன் (துன்படுகிறேன்) என்று தலைவி கூறுகிறாள். ஆதலால் காதலர் பிரிவு தீயினை விட கொடியது என்று கூறுகிறாள். 

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
(1)

பழம்பாடல் ஒன்று அழகாக இதைக் கூறும்.

“நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து 
தீரத் தீரும்
சாரனாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல்லாதே”

மற்றொரு நாலடியார் (90) பாடல் வரி, 
“நீருட் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி 
ஒளிப்பினும் காமம் சுடும்” என்கிறது.

“அகலினும் அகலா தாகி
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே” (குறுந் 257:5-6)

“கவவிற் கமைந்த காமக் கனலி
அவவுறு நெஞ்சத் தகல்விடத் தழற்ற” (பெருங் 2:18:8:9)

“நின் பிரிவினும் சுடு மோபெருங் காடென்றாள்’ (கம்ப.நகர்நீங்கு 226)

(2)
”கந்தர வந்த காம ஒள்எரி” (குறுந் 305:1)
“காமக் கனலெரி கொளீஇ யாமும்” (பெருங் 1.33:203)
“மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால்” (கம்ப.சூர்ப்பணகை 72)

பரிமேலழகர் உரை
(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)

மணக்குடவர் உரை
தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

சாலமன் பாப்பையா உரை
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?.

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

 

குறள் 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
இன்னாது -  தீது; துன்பு

இனன் - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர்

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

அதனினும் - அதனை விட

இன்னாது -  தீது; துன்பு

இனியார்ப் - உள்ளத்துக்கு இனியவரான காதலர்

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

முழுப்பொருள்
இனன் என்ற சொல்லுக்கு இரு பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்
1. இனன் - உறவினன்
தலைவி கூறுகிறாள், எனது உறவினன் / தலைவன் இல்லாத ஊரிலே வாழ்வது மிக கொடுமை (ஏனெனில் இவ்வூரில் உள்ள நாங்கள் பழகிய இடங்கள் அவரது நினைவுகளை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும். இவ்வூராரும் அவரைப்பற்றிக் கேட்பர்). ஆனால் அதைவிட கொடுமையானது என் தலைவனை பிரிந்தது இருப்பது ஆகும். 

2. இனன் - சூரியன்
தலைவி கூறுகிறாள், சூரியன் இல்லாத ஊர் இருளில் மூழ்கிப்போகும். அங்கே உயிர்வாழ்தல் கொடுமையாகி விடும். ஆதலால் சூரியன் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பத்தை தரும். ஆனால் அதைவிட கொடுமையானது என் தலைவனை பிரிந்தது இருப்பது ஆகும். 

சூரியன் இல்லாத ஊர் என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் தலைவன் இல்லாத ஊர்களில் பல வாழ்கின்றனர். அதில் விழாக்கள், மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆதலால் துன்பம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் சூரியன் இல்லாத இடம் மிக துன்பமானது என்பதை யாராலும் உணர முடியும். குறிப்பாக, குளிர்காலங்களில் சூரியன் குறைவாக இருக்கும் ஊர்களில் மக்களிடம் சற்று மன அழுத்தம் இருக்கும். அவர்கள் கோடைகாலத்தை கொண்டாடுவர். ஆதலால், சூரியன் இல்லாத ஊர் துன்பமானது என்றே திருவள்ளுவர் கூறியிருக்கவேண்டும். ஆனால் அதைவிட கொடுமையானது தலைவனின் பிரிவு என்று கூறுகிறாள்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)

மணக்குடவர் உரை
தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

குறள் 1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
துறைவன் - நெய்தல்நிலத்தலைவன்

துறந்தமை - துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.

தூற்றுதல் - சிதறுதல்; தூசுபோகத்தானியங்களைத்தூவுதல்; புழுதிமுதலியவற்றைஇறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

தூற்றாகொல் - ஊரரியச் உரத்துச் சொல்லாதோ?

முன்கை - muṉ-kai   n. id. +. [K. mun-gai.] 1. Forearm; முன்னங்கை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157). 2. Hand; கைத்தலம். முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

இறை - உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்; 

இறை - (வி)இறைத்துவிடு; தூவு எறி, வீசு தங்கு

இறவு - சாவு; முடிவு நீக்கம் மிகுதி இறால்மீன்; தேன்கூடு வீட்டிறப்பு எல்லை

வளை - சுற்றிடம்; சங்கு; கைவளை; சக்கரப்படை; துளை; எலிமுதலியவற்றின்பொந்து; நீண்டமரத்துண்டு; தூதுவளைஎன்னும்கொடிவகை; சிறியஉத்திரம்.

இறவா நின்ற வளை – தங்காது கழலுமோ என்ற அச்சுறுத்துகிற வளையணிகள்?

முழுப்பொருள்
நெய்தல் நிலத்தில் இருக்கும் தலைவி நினைக்கிறாள் "நெய்தல் நிலத்தில் பிறந்த என் அன்பிற்குரிய தலைவன் என்னை விட்டு பிரிந்து போக போகிறான் என்பதை அவர் என் தோள்களை தழுவும் பொழுதோ அல்லது என்னுடன் கூடும் பொழுதோ நான் தான் உணர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நான்  தான் காதல் மயக்கத்தில் அதை உணரவில்லை. ஆனால் என் முன்னங்கை மணிக்கட்டில் நீங்காது கழலும்/இருக்கும் வளையல்கள் வரப்போகும் பிரிவை உணர்ந்து என்னிடம் கூறி இருக்க வேண்டாமா?. அது சரி வளையல்கள் எப்படி பேசும்? அவை கழன்று விழுந்தோ அல்லதுயோ ஒன்றுடன் ஒன்று உரசி உடைந்தோ உணர்த்தியிருக்கலாம் அல்லவா?" 

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”நோகோ யானே நெகிழ்ந்தன வளையே” (நற் 26:1)

“கோடீ ரிலங்குவளை ஞெகிழ” (குறுந் 11:1)

“இறையிறந், திலங்குவளை நெகிழச் சாஅய்” (குறுந் 50:3-4)

“இறைவளை நெகிழ்த்த எவ்வ நோய்”(குறுந் 289:2)

“துறைநணி ஊரனை உள்ளிஎன்
இறையே ரெல்வளை நெகிழ்போ டும்மே” (ஐங்குறு 20:4-5)

“அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி - இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை நெந்நின்ற வாறு” (முத்தொள்ளாயிரம்)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்¬யாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)

மணக்குடவர் உரை
இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.

மு.வ உரை
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

குறள் 1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
ஓம்பின் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

அமைந்தார் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

ஓம்பல் - ஓம்பு - பாதுகாத்தல், பேணுதல், காத்தல்,

மற்று - ஓர்அசைநிலை;மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். 

நீங்கின் -  நீங்குதல்  - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்

அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

ஆல் - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.

புணர்வு - puṇarvu   n. id. 1. Combination; சேர்க்கை. 2. Coition; கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378). 3. Connection, joining; இசைப்பு. (சூடா.) 4. Body;உடல். (பிங்.)

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள், என் உயிரை பாதுக்காக்க இருக்கும் என் தலைவன் என்னை பிரியாது என்னையும் என் காதலையும் பேணவேண்டும். அவ்வாறு இல்லாமல் என்னை பிரிந்தால் என்னுடன் தலைவன் மீண்டும் சேர்வதோ கூடுவதோ கடினமாகிவிடும் (அரிது). ஏனெனில் பிரிவு தரும் துன்பத்தால் என் உயிர் என்னை விட்டு நீங்கிவிடும் என்கிறாள் தலைவி.

அமைதல் என்றால் உடன்படுதல் என்றும் பொருள். ஆதலால் காதலில் வயப்படும் தலைவன் தலைவியை பாதுக்காக்க உடன்படுகிறான் என்று பொருள் கொள்ளவேண்டும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)

மணக்குடவர் உரை
காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

குறள் 1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
அளித்து - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் 

அஞ்சு - அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால்
அல் Base of the appellative verb that negatives the attributes of a thing; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி  

அல் al   part. id. 1. Neg. verb-ending:(a) imp. sing.; எதிர்மறையேவல் ஒருமை விகுதி  

என்றவர் - என்று கூறியவர் 

நீப்பின்நீப்பு - துறவு; பிரிவு

தெளித்த  - தெளித்தல் - தெளிவித்தல்; வெளிப்படுத்துதல்; துப்புரவாக்கல்; ஊடலுணர்த்துதல்; விதைத்தல்; கொழித்தல்; புடைத்தல்; சாறுவடித்தல்; நிச்சயித்தல்; சூளுறுதல்; தூவுதல்; நீக்குதல்; உருக்கிஓடவைத்தல்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

தேறினர் - tēṟiṉar   n. id. Tested or triedfriends; ஆராய்ந்துகொண்ட நண்பர். தேறினர்த்தேறலாமையும் (பாரத. சூது 72).  

தேற்றுதல் - தெளிவித்தல்; தெளிந்தறிதல்; சூளுறுதல்; ஆற்றுதல்; தேறுதல்கூறுதல்; தூய்மைசெய்தல்; குணமாக்குதல்; பலமுண்டாக்குதல்; ஊக்கப்படுத்துதல்.


தேறியார்க்கு - தேறினவன் - கலைமுதலியவற்றில்தேர்ச்சிபெற்றவன்; பட்டறிவுமிக்கவன்.

உண்டோ - இருக்கிறதா ? இருக்குமோ?

தவறு - பிழை; செயல்கைகூடாமை; நெறிதவறுகை; அழுக்கு; பஞ்சம்; குறைவு


முழுப்பொருள்
தலைவி தலைவனை பிரிந்துள்ளப் பொழுது அதற்கு தான் எவ்வாறுப் பொறுப்பில்லை என்று கூறுகிறார் இக்குறளில்.

நாங்கள் பழகிய காலங்களில் எனக்கு(தலைவிக்கு) அன்பையும் காதலையும் அள்ளி அள்ளி வழங்கிய தலைவன் என்னிடம் (தலைவியிடம்) உள்ள அச்சத்தை கண்டான். என்ன அச்சம் உனக்கு என்று கேட்டான் ? ஒன்றுமில்லை இப்பொழுது என்னிடம் ஆசையாக இருக்கும் நீங்கள் பிற்காலத்தில் என்னை விட்டு பிரிந்துவிடுவீர்களா என்று எனக்கு அச்சமாக இருக்கிறது என்று தலைவி தன் கவலையைக் கூறுகிறாள்.  பேதையே கவலைப்படாதே நான் உன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று என்னிடம் தலைவியிடம் உரைத்தான் தலைவன். அச்சொற்களை (சூளுறுதல்) நம்பியே நான் அவரிடம் என்னை முழுவதுமாய் கொடுத்தேன்.

ஆனால் தலைவனோ இப்பொழுது தலைவியை விட்டு பிரிந்துள்ளான். ஆதலால் தலைவி கேட்கிறாள்: எனக்கு அன்பையும் அளித்து நான் கொண்ட நியாமான அச்சத்தையும் நீக்கி என்னைத் தேற்றியத் தலைவனின் சொல்லை நம்பினேன். அச்சொற்களை நம்பியதில் என்ன தவறு?

பிரியமாட்டேன் என்று சொன்ன தலைவனை நம்பினாயே பேதையே என்று எல்லோரும் என்னை பார்த்து மௌனமாய் நகைக்கிறார்கள்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.)

மணக்குடவர் உரை
நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.

மு.வரதராசனார் உரை
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

சாலமன் பாப்பையா உரை
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?.

அரிதரோ தேற்றம் அறிவுடையார்

குறள் 1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
அரிது -அருமை; பசுமை; கடினம் 
அருமைஅரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

அரோ - arō   . A poetic expletive, அசை ச்சொல், as கூறுவாமரோ, we will speak. (p.)  

தேற்றம் - தெளிவு; மனங்கலங்காமை; உறுதி; ஆறுதல்; செழிப்பு; சூளுறவு.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

அறிவுடையார் - அறிவு உடையவர்கள் ; ஞானம் உள்ளவர்கள் 

கண்ணும் - கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  
கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)


பிரிவு  - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

உண்மை - உள்ளது; இயல்பு உள்ளதன்மை; மெய்ம்மை நேர்மை ஊழ்

யான் - தன்மையொருமைப்பெயர்

முழுப்பொருள்
என்னை விட்டு பிரிந்தால் தாங்க மாட்டேன் என்று என்னை பற்றியும், நான் அவர்மீதுகொண்ட காதல் பற்றியும்,  மிக தெளிவாக தெரிந்த /அறிந்த (இதனை அறிந்த அறிவு படைத்தவர்) எனது காதலர் என்னை விட்டுப் பிரிய மாட்டேனென உறுதியளித்தார். ஆனால் இன்று என்னை விட்டு பிரிந்து உள்ளார் (அல்லது பிரிய நேரிட்டால்) அவர் என் மீது கொண்ட அன்பு உண்மை (அல்லது என் மீது அன்புடையவர்) என்பதை நம்புவது கடினமே என்று தலைவி நினைக்கிறாள்.

மேலும் அஷோக்உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. (அரோ: அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.)

மணக்குடவர் உரை
பிரியேனென்ற தஞ்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர்கண்ணும் ஒரோ வழிப் பிரிவு நிகழ்தலான் அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டன்புடையரெனத் தேறுந்தேற்றம் அரிதாயிருந்தது.

மு.வரதராசனார் உரை
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

சாலமன் பாப்பையா உரை
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

இன்கண் உடைத்தவர் பார்வல்

குறள் 1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
இன்கண் - iṉ-kaṇ   n. இன்¹ +. 1. Delight,pleasure; இன்பம் இன்க ணுடைத்தவர் பார்வல்(குறள், 1152). 2. Kindness, special favour; கண்ணோட்டம் இன்க ணுடைய னவன் (கலித். 37, 22).  

உடைத்து -  உடைதல், உடையது, இருக்கும்

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

பார்வல் - பார்க்கை; காவல்; பறவைக்குஞ்சு; மான்முதலியவற்றின்கன்று; காண்க:பார்வைவிலங்கு.

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்

புன்கண் - puṉ-kaṇ   n. புன்-மை +. 1.Sorrow, distress, trouble, affiction, sadness;துன்பம். (பிங்.) புள்ளுறு புன்கண் டீர்த்தோன்(சிலப். 20, 52). 2. Disease; நோய். (பிங்.) 3.Leanness, emaciation; மெலிவு. (திவா.) 4.Poverty, adversity; வறுமை. இரவலர் புன்க ணஞ்சும் (பதிற்றுப். 57, 14). 5. Loss of beauty orcharm; பொலிவழிவு. புன்கண்கொண் டினையவும்(கலித். 2). 6. Fear; அச்சம். பிரிவஞ்சும் புன்கணுடைத்தால் (குறள், 1152). 7. Meanness; இழிவு.பொய்க்கரி புகலும் புன்கணார் (கம்பரா. கிங்கர. 58).

உடைத்தால் - உடைதல் -  இருக்கும்

புணர்வு - puṇarvu   n. id. 1. Combination; சேர்க்கை. 2. Coition; கலவி. புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378). 3. Connection, joining; இசைப்பு. (சூடா.) 4. Body;உடல். (பிங்.) 

முழுப்பொருள்
என் காதலருடைய கண்கள் மிகவும் இனிமை தரக்கூடிய வலிமை வாய்ந்தது. நான் விரும்பும் கண்கள் அவை.  அவருடைய பார்வையோ மன இன்பம் தரும் எங்கள் கூடலை (புணர்வதை) உணர்த்தும் எனக்கு. அனுபவிக்கப்போகும் புணர்ச்சியின்பத்தை நினைத்து நானோ மகிழ்ச்சியில் இருப்பேன்.

ஆனால் இப்பொழுது இவரை தழுவி புணரும் பொழுது இவர் நாளை என்னைவிட்டு பிரிந்துச் செல்ல போகிறார் (வேலை அல்லது போர் நிமித்தமாகவோ) என்று நினைத்துப் பிரிவை அஞ்சி பிரிவு தரும் வேதனையை அஞ்சி என் கண்களில் துன்பம் என்னும் நோயே இருக்கிறது.

இங்கே நாம் காணவேண்டியது 1) பிரிவென்னும் நினைப்பே துன்பத்தை தருகிறது 2) காதலில் புணர்ச்சியின் போது வெளிப்படும் இன்பம் என்பது காதலின் உச்ச வெளிப்பாடாக கருதப்படுவது. அது மிகவும் அகவயமானதும் கூட. ஆனால் பிரிவு என்னும் நினைப்பு தன் அகத்தில் சென்று புணர்ச்சியிலும் வேதனை தருகிறது. பிரிவு எவ்வளவு கொடியது. 

ஒப்புமை
“பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறை” (மதுரைக் 231)
“பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு” (குறுந்.117.2)
“பார்வல் கொக்கின் பரிவேட் பஞ்சா” (பதிற்.21:27)
“பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்” (பதிற்.84:5)
“பார்வல் இருக்கைக் கவிகண் ணோக்கின்” (புறநா.3:19)
“நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த” (பெருங்.3.4:43)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது. ('பார்வல்' என்றதனால், புணர்ச்சி பெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, 'முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்' (கலித்-பாலை-3)பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதிற் குறிப்புக் காட்டிஅச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)

மணக்குடவர் உரை 
நங்காதலரை வரவு பார்த்திருக்குமது இன்பத்தை யுடைத்து; அவரைப் புணர்ந்திருக்கும் இருப்பு. பிரிவாரோ என்று அஞ்சப்படும் துன்பத்தை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்

குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
பிரிவு - பிரிகை, பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம்; இறப்பு.
உரைக்கும் - உரை - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
வன்கண்ணர் - வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை

ஆயின் -  ஆனால்
அரிது -  அரியது, அருமை; பசுமை
அவர்
நல்குதல் -  கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு],  To rejoice -> உவத்தல்
நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர்
என்னும் - என்கிற
நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.

முழுப்பொருள்
வேலை நிமித்தமாகவோ, போரின் நிமித்தமாகவோ நான் உன்னை பிரியப்போகிறேன் என்று மணந்துக்கூடிய என்னிடம் கூறக்கூடிய கொடுமையான நெஞ்சத்தினை கொண்டவர் என்றால் அருமையான அவர் தன்னுடைய தலையாய அன்பினை என் மீது வந்து செலுத்துவார் என்ற என் நம்பிக்கை எள்ளலுக்கு உண்டானது என்று தலைவி கூறுகிறாள்.

இவ்வுலகில் வேலைக்காக வேறு வேறு ஊரிகளில் வசிக்கும் கணவன் மனைவிமார்கள் எவ்வளவு கொடுமைக்காரர்கள். குடும்பத்திற்காக உழைக்கிறேன், பணம் ஈட்டுவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும், சிறிது காலம் தியாகம் செய்தால்  நல்ல காலம் பிறக்கும் என்று எண்ணித் தங்கள் இளமையை இழக்கும் இவர்கள் எல்லாம் கொடுமையானவர்கள்.

ஒரு பிரிவு என்பது உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக எவ்வளவு கொடியது என்பது பெண் எவ்வளவு சொன்னாலும் ஆண்களுக்கு புரியாது. ஒருவேளை புரிந்தால் ஆண்கள் பிரியபோகிறேன் என்று சொல்ல மாட்டார்கள்.


(திரைப்படம்: தளபதி; பாடல்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் பிரிவுணர்த்தியதைத் தெரிவித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.)

அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின்-என் காதற்பெருக்கையுங் கவவுக்கை யிறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன்நின்று தம் பிரிவை யுணர்த்தும் வன்னெஞ்சராயின்; நல்குவர் என்னும் நசை அரிது-அத்தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செய்வரென்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்.

இது தலைமகள் தன் இளமையினாலும் இல்லறத் தொடக்கநிலையினாலும், பொருளின் இன்றியமையாமையையும் ஆடவர் கடமையயும் உணராது காதலொன்றையே கருதிக்கூறிய கூற்றாகும். அருமை பெரும்பாலும் நிறைவேறாமை, செலவழுங்குவித்தல் பயன்.

மணக்குடவர் உரை
பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

சாலமன் பாப்பையா உரை
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

செல்லாமை உண்டேல் எனக்குரை

குறள் 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
வல்வரவு வாழ்வார்க் குரை.
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லாமை - பிரிந்துபோகாமை; வறுமை; வலியின்மை; செய்யவேண்டியவை; ஆற்றாமை.

உண்டேல்உள்ளது என்றால்
உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு
- To say it is. 2. [vul. adverbially.] Much, exceedingly, more, நிரம்ப. உண்டெனத்தரவேண்டும்

எனக்கு - என்னிடம்
உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை
உரை - (வி)தேய்; ஒலி சொல் பேசு

உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்

எனக்கு உரை - என்னிடம் சொல்.
- தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின்

மற்று - இல்லையென்றால்
part. 1. An expletive; ஓர்அசைநிலை. (தொல். சொல். 264.) 2. A disjunctive;வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 3. A term meaning other, another; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன்.433.)--adv. 1. Again; மறுபடியும். (W.) 2.Subsequently, afterwards; பின். 3. See மற்றப்படி.

நின் - நீங்கள் 

வல்வரவு - (பிரிந்து சென்று) விரைந்து வருவீர்கள் என்று சொல்வது என்றால்
வல் - வலிமை; திறமை; மேடு; சூதாடுகருவி; முலைக்கச்சு; விரைவு, சீக்கிரம்
வல்வரவு - வருகை

வாழ்வார்க்கு - அப்பொழுது இங்கு உயிர் வாழ்வார்களே
உரை - (அவர்களிடம்) சொல்

முழுப்பொருள்
தலைவன் வெளியூர் / வெளிநாடு வேலை நிமித்தமாக செல்கிறான். இதனை தோழி மூலமாக அறிந்துக்கொள்கிறாள் தலைவி.

தலைவன் தன்னிடம் பிரிந்து செல்ல போகிறேன் என்று அவன் வாய்த்திறக்கும் முன், தலைவி சொல்கிறாள்
நான் உன்னை பிரிந்து செல்லமாட்டேன் என்று சொல்வாதாக இருந்தால் என்னிடம் சொல். அப்படி இல்லை என்றால், வேலையை துரிதமாக முடித்து விரைந்து வந்துவிடுவேன் என்று நீ (சமாளிப்புகளை) சொல்லவாய் என்றால், நீ வந்து சேர்வாய் அல்லவா, அப்பொழுது உயிரோடு இருக்கக்கூடியவர்களிடம் சென்று சொல், என்னிடம் சொல்லாதே ஏனெனில் அது அவர்களுக்கு நல்வரவு எனக்கு வல்வரவு.

1) பிரிவு என்ற ஒன்றை தாங்க முடியாத அளவிற்கு தலைவி தலைவன் மீது பேரன்பு கொண்டு உள்ளாள் என்பதை காட்டுகிறது இக்குறள்.

2) இவன் பிரிவை மற்றவர் தாங்கிக் கொள்வர் அதாவாது தந்தை, தாய், தம்பி, தங்கை, அண்ணன், அக்கா; ஆனால் இவன் பிரிவை தலைவி தாங்க மாட்டாள் என்று கூறி தலைவியின் அன்பு  முற்றிலும் வேறு என்று உணர்த்துகிறது.

3) தலைவன் தனக்கானவன் என்று நினைக்கிறாள் தலைவி. அவன் தன்னைவிட்டுப் பிரியக்கூடாது என்று நினைக்கிறாள். ஆதலால் அதுமட்டுமே அவளுக்கு வேண்டும். வேறு ஏதும் அவளுக்கு வேண்டா. ஆதனால் தான் ”மற்றுநின்” என்று கூறுகிறாள் தலைவி. அதவாது வேறு எதுவாக இருந்தாலும் மற்றவர்களிடம் (பெற்றோர், சகோதர சகோதரிகள்) கூறு

4) சில பல கணவன் மார்கள், நமது வீட்டிற்க்காக, நமது நலனிற்காக, நமது குழந்தையின் நலனிற்காக, பொருள் ஈட்டத்தான் செல்கிறேன், ஒரே வாரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்வார்கள். அது மட்டும் இன்றி, இந்த அலுவலுகத்தில் நான் தான் செல்ல வேண்டும், வேறு ஆள் கிடையாது, கண்டிப்பாய் செல்லவேண்டும் என்றும் சொல்ல முனைப்பார்கள். இது ராஜாங்க செயல், கட்டளை என்ற அளவிற்கு கட்டுமானம் செய்வார்கள். உனக்கு மட்டுமா பிரிவின் துயர், எனக்கும் தான் பிரிவின் துயர் உள்ளது என்று உன்னை நான் பிம்பம் போல் பிரதிபளிப்பதாக சமாளிப்பார்கள். (ஏன் இது சமாளிப்பு என்றால் தலைவியை விட வேலை பெரிதாய் போய்யிற்று தலைவனுக்கு). அத்தகைய பொய்ப் பேச்சுகள், சமாளிப்புகள்  ஆகியவற்றை தலைவி நன்கு அறிவாள் (ஏன் என்றால், அவன் தலைவன் ஆயிற்றே). ஆதலால் தான் அவன் சமாளிப்புகளும், காரணங்களும் அடுக்கும் முன் ”செல்லாமை உண்டேல் எனக்குரை” என்று அவன் வாயை மூடிகிறாள்.

5) தோ, இங்க தான் இருக்கு ஜெர்மனி. உலக வரைப்படத்தில் கை வைத்து , தோ பார் பக்கத்துல தான் இருக்கு என்று கூறுவார்கள். போய்ட்டு ஒரே ஒரு Conference, ஒரே ஒரு porting தான், முடிச்சிட்டு அடுத்த வாரம் சீக்கிரம் வந்துறேன் அமூதே என்று தலைவன் மார்கள் சொல்வார்கள். இத்தகைய ஏமாற்று வித்தைகளை தலைவி நன்கு அறிவாள். ஆதலால் தான் வல்வரவு என்று ஒருவார்த்தையை தேர்ந்து பயன்படுத்தியுள்ளார் திருவள்ளுவர்.
(உதாரணம்: ரோஜா திரைப்படத்தில் ரிஷி (அரவிந்து சாமி), ஒரு வாரத்தில் ராஜாங்க காரியம், டீகோடு (DECODE) பண்ணிட்டு வந்துருவேனு சொல்வார் (திரைப்படத்தில் அப்படி வராது. படத்தில் இப்படி வரும்: என்ன அம்மா நீயும் அவக்கூட சேந்துட்டு-னு சொல்லுவார்). ரோஜா(மதுபாலா), இத்தகைய சமாளிப்புகளை எதிர்பார்த்துத்தான் (நான் யென் பொட்டிப் படுக்கைலான் கூட கட்டி வெச்சுட்டேன்.) மூட்டை முடிச்சுகளுடன் ஆயுத்தமாக இருப்பார்.

ரோஜா திரைப்படத்தில் வரும் அக்காட்சியின் காணொளியை காண இங்கே சொடுக்குக :) -> https://www.youtube.com/watch?v=AaEQtqMHCIE&t=334s

6) எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் வல்வரவு என்பது நல்வரவு என்ற சொல்லின் எதிர்பதமாக பார்க்கிறார். அதாவது தலைவன் திரும்பி வந்தால் அது அவளுக்கு நல்வரவு இல்லையாம். ஏனெனில் அத்தனை நாட்கள் அவள் பல மன உளைச்சலுக்கு (emotional crisis) ஆளாகிறாள். நாஞ்சில் நாடன் கூறுவதும் பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில் வல்லடி ( Violence), வன்கண் (an evil or envious eye), வன்னெஞ்சு (a cruel heart) ஆகிய சொற்களும் எதிர்மறையாகவே உள்ளன.

எதுவாயினும் (5 அல்லது 6) தலைவின் விரைந்து வந்தாலும் சரி சில காலம் பிறகு வந்தாலும் சரி, தலைவனின் பிரிவு தலைவிக்கு மன உளைச்சலை தருகிறது. ஆதலால் பிரியமாட்டேன் என்றால் என்னிடம் சொல்லு இல்லை என்றால் அதனை மற்றவர்களிடம் சொல் என்று கூறுகிறாள் தலைவி.

7) வாழ்வார்க்கு உரை என்று கூறுகிறாள் தலைவி. அதாவது வரும் பொழுது வாழ்ந்துக்கொண்டு இருப்பவரிடம் கூறு. அதாவது பெற்றோர்கள், உடன்பிறந்தோர்கள். அப்படி என்றால் தலைவி உயிர் வாழ மாட்டாளா? 
தலைவனைப் பிரிந்த மறு கணமே என்ன செய்வது என்று அறியாமல் நான் இறந்துவிடுவேன் என்று சொல்லி ‘ஒரு நிமிட பிரிவே உயிர் கொல்லும்’ என்று தலைவி கூறுகிறாள். அதனால் தான் பிரிந்தும் உயிர் வாழ வல்லார்க்கும் என்பது இங்கு உணர்ச்சியாய் காணவேண்டும்.

குருவிகளும் குரங்குகளும் இணையோடு இருக்கும். விலங்காய்ப் பிறந்த மாந்தருக்கும் அது பொருந்தும். அதுவே  இயற்கையின் பெரு விதி.

கணவனுடைய பெற்றோர்கள் உடன்பிறந்தவர்கள் இவர்களையே “வாழ்வார்கள்” என்று சொல்கிறாள் தலைவி. தலைவன்/கணவன் ஊருக்கு அனுப்பு பொருளை/பணத்தை அவர்கள் துய்த்து இன்பம் பெற்று வாழ்கிறார்கள். ஆதனால் வீட்டில் உண்ண உடுக்க எந்தக் குறையும் இல்லை. 

ஆனால், தலைவி வாழவில்லை என்கிறாள். பெற்றோர்கள் பொருளை துய்த்து அனுபவிக்கலாம். ஆனால் அவள் மட்டுமே துய்த்து இன்பம் பெற முடிகிற ஒன்று அவள் இணையிடம் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. அது செய்பொருளன்று. இயற்கையின் விதி. அதை அவளால் எப்படி மாற்ற முடியும்.
 
இது போதாதென்று அவன் பேசிச் சென்ற சொற்கள், அவன் மெய்த்தீண்டல், அவன் கைப்பிடிக்குள் அடங்கிய கொல்லேறு (காளை) (ஏறுதழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் திருமணம்) என; பார்க்கும், எண்ணும் பொருளனைத்தும் உள்ளத்தை நலிவடையச் செய்யும். அதனால்தான் அவள் வாழவிலை என்கிறாள். காமத்தை எத்தனை ஒப்புரவாக வள்ளுவர் சொல்கிறார் என்பதை காணலாம். 

காமம் அத்தனை கொடியதா என்ன?
என்று நமக்குள் கேள்வி வரலாம். ஆனால் இயற்கை பெரியது. அந்த இயற்கையைப் பொருள் தேடலின் பொருட்டு மறுதலிப்பதை வள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண்கள் கூடச் சொல்லத் தயங்குவதை, உள்ளத்தில் வைத்துக் கொண்டு உளுத்துப் போவதை ஒரு பெண்ணின் வாய்மொழியாய் மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்திருக்கிறார் திருவள்ளுவர். 

பிரிந்துசென்ற கணவனோடு பேச்சுத் தொடர்பு இல்லாத காலம் அது. அவனது சொற்களும் நினைவுகளும் மட்டுமே இருந்த நிலையில், உள்ள வேட்கை நாள்படக் குறைந்துவிடக் கூடும். உடல் வேட்கையை வெற்றிக்கொள்ள அது உதவவும் கூடும். 

இன்றோ, தொடுதிரைக் கணினிகள் (laptops), கையடக்கத் திறன் பேசிகள்(mobile), நேருக்கு நேர் காணொளி உரையாடல்கள் (video calls), வரவேற்பறையில் நாளெல்லாம் ஒளிரும் தொலைக்காட்சி, இணையம் என்று உள்ள வேட்கையை மறக்கடிக்க முடியாத சூழல். தொடுதிரையில் துணையின் கண்ணீரைக் காணலாம். துடைத்துவிட முடியாது. உலகத்தை முழுவதும் இணைக்கிற இணையத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. கைப்பேசியைத் தொட்டுப் பேசலாம். கையைத் தொட்டுப் பேசமுடியாது. வள்ளுவர்காலத்தைய பெண்களைவிட இக்காலப் பெண்களுக்கு இந்த இன்னல்கள் ஏராளம்.

பொருள் கட்டாயம் தான். ஆனால் வாழ்க்கை அதைவிடக் கட்டாயமானது. பொருள் தேடச் சொல்லும்போது துணையோடு செல்வதற்கான ஏற்பாடுகள் இருந்தால் வாழ்வு சிறக்கும். 

பெண்களை, அவர்களின் உள்ளத்தை, உணர்வை மதிப்போம்.

ஒப்புமை
”வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல் நற் கறிந்தனை சென்மே” (நற்  19:8-9)

“வாழா ளாதல் சூழா தோயே”  (நற்  183:11)

“வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே” (குறுந்தோகை 32:6)

“..........................................................செல்வீர்
வருவீ ராகுதல் உரையின் ....................
................................ இருக்கிற் போர்க்கே” (அகநா 387: 2-20)

குறட் கருத்து காமத்துப் பால் (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலன் தான் என்ன செய்ய பொருளை ஈட்டக்
கடல் கடந்து செல்லுதற்கு ஆசை கொண்டான்
பேதையிடம் சொல்லுதற்கு சென்று நின்றான்
பேச எங்கு விட்டாள் அந்தப் பெண்ணின் நல்லாள்
ஓசைக் கடல் தாண்டி நீயும் செல்லும் போதே
உயிர் இழந்து எந்தன் உடல் வீழ்ந்து போகும்
ஆசை அது அவ்வளவு நெஞ்சுக்குள்ளே
அறிந்தால் நீ பிரிவாயா அன்பு அத்தான்

நாசம் அற்று நீ வாழ வாழ்த்துகின்றேன்
நாள் தோறும் உன்னை நினைத்தே போற்றுகின்றேன்
வாச மலர் எனை விட்டுப் பிரிவதென்றால்
வாய் திறக்க வேண்டாம் நீ சென்று விடு
ஆசையுடன் உனை அனுப்பி செல்வம் சேர்த்து
அங்கிருந்து வரும் வரையில் காத்திருக்கும்
நேசமுள்ள கல் மனத்துப் பெண்ணிருந்தால்
நீங்குவதை அவரிடத்தில் சொல்லிச் செல்லு

மேலும்: M.A.சுசிலா (Recommended)
மேலும்: தமிழ் தூது
மேலும்: (முகபுத்தகம் `நேர்மரை` தளத்தில் இருந்து)

பரிமேலழகர் உரை
'பிரிந்து கடிதின் வருவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். 

விளக்கம் 
(தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்காலமெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன். இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(பிரிந்து கடிதில் வருவேனென்ற தலைமகனுக்குத் தோழி சொல்லியது.)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை-தலைவ! நீ எம்மைவிட்டுப் பிரியாமை யுண்டாயின் அதை மட்டும் சொல்; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - இனி, நீ பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வாயாயின், அதை நீ வரும்வரை ஆற்றியிருந்து உயிர்வாழ்வார்க்குச் சொல்.

தலைமகள் நீ திரும்பி வரும்வரை ஆற்றியிருப்பவளல்லள், நீ பிரிந்த பொழுதே இறந்துவிடுவாள் என்பதாம். இதனாற் செலவழுங்குவித்தல் பயன். அஃதாவது தலைமகளை யாற்றுவித்து ஓரிரு நாள் கழித்துப் பிரியச்செய்தல். தலைமகளொடு தனக்குத் தான் அவள் என்னும் வேற்றுமையின்மையால் 'எனக்கு' என்றாள். இது இல்லறத்தில் முதன் முதல் நிகழ்ந்த பிரிவாதலால், தலைமகளின் மென்மை நோக்கி நேர்முகமாய்க் கூறானாயினன். இது தலைமகள் தோழிக்குக் கூறிய கூற்றாக வுரைப்பர் மணக்குடவ காலிங்க பரிதி பரிப் பெருமாளர். இது முன்ன விலக்கு.

மணக்குடவர் உரை
காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

சாலமன் பாப்பையா உரை
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

வல்வரவுல வல்னா விரைவுனு போட்டுக்கலாம். திருக்குறள் ஏழு சீர்ல – படிச்சுப்பார்த்தாத்தான் தெரியும் அதுக்குள்ள அவன் போற height.

கண்ணன்: நீங்க வல்வரவு பற்றி எழுதியிருந்ததை திருக்குறள் பற்றி நடந்த நீயா நானாவில நான் கோட் செய்தேன்.

நாஞ்சில் நாடன்: வல்வரவுங்கிறத நல்வரவுக்கு எதிர்ப்பதமா நான் பயன்படுத்தறேன். எல்லா உரையாசிரியனும் வல்வரவுன்னா கடிது வருதல், விரைந்து வருதல்னுதான் சொல்றான். நான் இப்படிப் பார்க்கிறேன். நீ ஆறு மாசங்கழிச்சு வரக்கூடியது வல்வரவுதான், நல்வரவு இல்ல. ஒரு பொண்ணு என்ன திராணியாப் பேசறா. ஆனா பொருள்வயிற் பிரிதல்ங்கிறது இன்னிக்கும் நடக்கத்தானே செய்யுது. துபாய்க்குப் போனா ரெண்டு வருஷத்துக்கு ஒருக்காத்தான் வீட்டுக்கு வருவான். பெரிய பொசிசன்ல இருக்கிறவன்தான் ஆறு மாசத்துக்கு ஒருதரம் வருவான். அமெரிக்கால இருக்கவன் மட்டும் என்ன வாழுதாம் – ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறைதான் வர்றான்.

நானே ஒரு கதை எழுதியிருப்பேன் (பேச்சியம்மை). ஏழு வருஷம் ஆச்சு, மகன் ஊருக்கு வந்து. அவன் பார்த்த பொண்ணுகெல்லாம் கல்யாணம் ஆகிப் பேரம்பேத்தி எடுத்தாச்சு. பேங்க்குக்கு பணம் ட்ரான்ஸ்பர் ஆயிடும். ஒரு நாள் இந்தக் கிழவி போய் பாங்க்ல சொல்லுவா, பணம் இனிமே வந்ததுன்னா திருப்பி அனுப்பிச்சிடுங்க. பாங்க் மேனேஜர், ‘அதெப்படிம்மா அனுப்பமுடியும்.’ ‘அப்ப, நாளைக்கு உம்ம நடைல ஒரு பிணம் கிடக்கும்.’ எப்படி வேணாலும் டீல் பண்ணுக்கங்கன்னு சவால் விடறா. மேனேஜர் அரண்டு போயிடறார். வாசல்ல காலைல பாங்க்க திறக்க வர்றபோது பிணம் கிடந்தா, இந்தியாவுல ஒரு நிகழ்ச்சியே அப்படி நடந்ததுகிடையாது. ‘சரிம்மா, நான் எழுதிடறேன்.’ அவளுக்குண்டான ஒரு கோபம் இருக்கு. அவ கோயில்ல விளக்கு வெளக்கி வைக்கிறா. தண்ணி எடுத்துக்கொடுக்கறா. பூப்பறிச்சுத் தர்றா.  பூசை செய்யக்கூடிவர் கேட்கிறாரு, ‘நீ செத்துப்போனா யாரு கொள்ளி வைப்பா?’ ‘பெருமாள் வைப்பாருய்யா. ஏன் நீர் போட மாட்டீரா.’  அப்ப அவளுடைய கோபம் என்ன…ஏழு வருஷம் ஆச்சு, பெத்து வளர்த்து, பால் குடுத்து, படிக்க வைச்சு, நகையை அடகு வைச்சு…இவனுக்கு ஏழு வருஷம் பெத்த அம்மையை வந்து பார்க்கணும்னு தோணலையே.  இவன் பணம் எனக்கு எதுக்கு? இது மரபுசார்ந்த ஒரு தாய்க்கு வரக்கூடிய கோபம். இந்த மாதிரி ஒரு ஸ்டோரிய நான் எழுதற போது, அனாவசியமா பரிமேலழகர கோட் பண்ண மாட்டேன். ஏன்னா எனக்குத் தெரியும், இந்த இடத்துல நான் ஒருவதிமான emotional crisisகுள்ள கொண்டுபோகப் போறேன். வாசகனை டைவர்ட் பண்ணக் கூடாது. அவனுடைய wholehearted attendance, நூறு சதம் concentration எனக்கு வேணுங்கிறபோது, நான் ஒழுங்கு மரியாதையாக் கதை சொல்லிட்டுப் போயிடுவேன். சில சமயம் ஆடிப் பார்க்கலாம்னு தோணும். ஆடியன்சைப் பொறுத்த விஷயம்தானே. நாட்டைக் குறிஞ்சி ஒரு செலக்டட் ஆடியன்ஸ்க்கு, ராம்நகர்ல, கோதண்ட ராமன் கோயில்ல, மூணேகால் மணிநேரம் பாடறார் சேஷகோபாலன். அதை கண்டிப்பா ஒரு சபாவுலையோ, ஒரு கல்யாணத்திலையோ அவர் செய்யமுடியாது.

வல்வரவு எனும் சொல்லை யோசிக்கும் பொழுதில் நல்வரம் என்னும் சொல் கண்முன் காலாட்டுகிறது. ஆனால் வல்வரவு எனும் சொல்லைக் கையாளவில்லை சங்க இலக்கியங்கள் அல்லது சொல்லடைவு திரட்டியவர் தவற விட்டிருக்கலாம். தீர்ப்புச் சொல்ல நாம் யார்? சென்னைப் பல்கலைக்கழகத்து லெக்சிக்கன், வன் வருத்தம், வல் வழக்கு, வல் வாயன், வல்விடம், வல் விரைதல், வல் வில், வல் வில்லி, வன் விலங்கு, வல் வினை முதலான சொற்களைப் பட்டியலிடுகிறது. ஆனால் அவற்றுள் வல்வரவு இல்லை.

ஆனால் திருவள்ளுவர் வல்வரவு எனும் சொல்லக் கையாள்கிறார். காமத்துப்பாலில் 250 குறள்கள், அவற்றுள் ஒன்று பிரிவாற்றமை எனும் கற்பியலின் முதல் அதிகாரத்து முதற்குறள். எண் 1151, “செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை”. பிரிந்து போய், விரைந்து திரும்புவேன் என்றுரைக்கும் தலிமகனுக்கு தோழி மறுமொழி உரைப்பதான situation தான் one line. “நீ எம்மைப் பிரியாமை உண்டு ஆயின் அதனை எனக்குச் சொல். அஃது ஒழியப் பிரிந்து போய் விரைந்து வருதல் சொல்வாயாயின் அதனை அப்பொழுது உயிர் வாழ்வார்க்குச் சொல்” என்று உரை எழுதுகிறார் பரிமேலழவர்.

எதற்காக செல்லாமல் உண்டேல் எனக்கு உரை என்று திண்மையாகக் கூறுகிறார் தோழி? அதைத் தலைவி அல்லவா சொல்ல வேண்டும் எனக்கேட்பீர்களேயாயின், உரையாசிரியர் சொல்கிறார், “நான், அவன் என்று வேற்ற்றுமை இன்மை ஆயின்” என்று. இதே கூற்றைத் தோழி இல்லாமல் தலைவி கூற்றாகக் கொள்வாரும் உண்டு. 

பரிதியார் தன் உரையில் எளிமையாகப் பொருள் சொல்கிறார். ”நாயகரே! நம்மை விட்டுப்பிரியாமல் இருப்பீராகில் எனக்குச் சொல்லும். அல்லதை, உம்மை விட்டும் பிரிந்தும் உயிர்வாழ் வல்லார்க்கும் சொல்லும் என்று”. பிரிந்தும் உயிர் வாழ வல்லார்க்கும் என்பது தான் உணர்ச்சி.

பொருள் தேடி - காதலியரை, மனைவியரைப் பிரிந்து போதல் இன்றும் நடைமுறைகள். ஆண்டுக்கு ஒருமுறையே விடுப்பில் வரும் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு எல்லைக்காவல் படையினர் இன்றும் உண்டு. இதைத் தான் “பொருள் வயிற் பிரிதல்” என்கிறார்கள் இன்றைய தலைவியற்கு வேறும் போம் வழி இல்லை. குடும்பம் போற்றி ஒழுக்கமும் காத்தல் வேண்டும். திருவள்ளுவர் பேசும் குறளின் கூற்றைச் தலைவியோ தோழியோ மொழிவதை - எம் மொழியில் சொல்வதனால் “வே! நீரு பிரிஞ்சு போகாம இங்கிணயே கெடப்பேருண்ணு உண்டுமானா அதனை எனக்கு இப்பம் சொல்லும், ஆனா பிரிஞ்சு போயி சட்டுண்ணு வந்திருவேன் சொல்லப்பட்ட காரியம் இருக்குல்லா, அதை நீரு வருவேரு வருவேருண்ணு எவளும் காத்துக் கெடப்பா பாரும், அவளுக்குச் சொல்லும், கேட்டேரா?”

இவ்வளவு தான் சங்கதி. இங்கே வல்வரவு எனும் சொல்லுக்கு பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய நான்கு பழம்பெரும் உரையாசியர்களும் கடிது வருதல், வேகமாய்த் திரும்பி வருதல் என்றே பொருள் கொள்கிறார்கள். மிகவும் பொருத்தமான பொருள்.

பிரிந்து போய்த்தான் தீருவேன், எனில், அது குறுகிய காலமோ, நெடிய காலமோ, உனது திரும்பி வருதல், என்னைப் பொருத்தவரை, நல்வரவு அல்ல வல்வரவு. அஃதெனக்குத் துனபமான, வன்மையான வரவு, ஏனெனில் நீ திரும்பி வரும்போது நானிருக்க மாட்டேன். எனவே அதை, அப்போது உன் வரவு பார்த்து காத்து வாழ்ந்து கொண்டிருக்க முடிபவருக்கு சொல், அவர்களுக்கு அது நல்வரவாக இருக்கக்கூடும். ஆனால் எனக்கு அது வல்வரவே.

சாமர்த்தியமாகப் பொருள் கொள்கிறேன் என்று அருள்கூர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தனைக்கு நான் பண்டிதன் இல்லை. யோசித்துப்பார்க்கிறேன் அவ்வளவே! அதில் தவறொன்றும் இல்லை. இது புலவர் குழந்தை “கீமாயணம்” எழுத்வது ஆகிவிடாது. எவ்வாறாயினும், காதற் பெண்டு ஒருத்தி, தனது பிரிவு ஆற்றாமையை இத்தனை கூர்மையாக, வன்மையாக, தைக்கும்படி, ஐயத்துக்கு இடமே இன்றி மொழித்து அபூர்வமான அனுபவாகப் பட்டது. இந்த குறளில் நான் காமுற்று நிற்பது “வல்வரவு” எனும் சொல்லில். 

இக்குறள் கற்புள்ள ஒரு பெண் தன் காதலனிடம் கொண்டிருக்கும் அன்பைக் காட்டும் குறள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தால் உயிர் வாழ முடியாது என்ற முதிர்ந்த அன்புள்ளவர்கள்தாம் சிறந்த காதலர்கள்; இல்லறத்திலே இன்பம் நுகர்வார்கள்; இல்லறத்தையும் நல்லறமாக இனிது நடத்துவார்கள். இக்கருத்தைக் கொண்டதே மேலே காட்டிய குறள்.

மேலே காட்டிய அறங்கள் அனைத்தும் உலகத்தார் ஒப்புக் கொள்ளும் பொது நீதிகள் எந்நாட்டினரும், எம்மதத்தினரும், எவ்வினத்தினரும், எம்மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே இவ்வறங்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய பொது நீதிகள் நிரம்பியிருப்பதனால்தான் திருக்குறள் உலகப் பொது நூல் என்று பாராட்டப்படுகின்றது; திருவள்ளுவர் உலகப் புலவர் என்று போற்றப்படுகிறார்.


நன்றி: ரிஷ்வன்
காதலனே கேள்..!
பிரியவில்லை என்பதை
நெருங்கி வந்து என்னுடன் சொல்
துரிதம் திரும்புகிறேன் என்பதை
அதுவரை உயிரோரு 
இருப்பவர் எவரோ
அவரிடம் விடைபெற்று செல்.

நன்றி: The Red Litmus
நேரடி அர்த்தம் இது தான். நீ போகமாட்டேன் என்று முடிவெடுத்தால் என்னிடம் வந்து சொல்; இல்லை, நீ திரும்பி வரும் போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டு போ. இது ‘ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்பது மாதிரியான குறள். காதலி சொல்வது மாதிரி எடுத்துக் கொள்வோம். காதலனுக்கு திடீரென்று கம்பனியில் வெளிநாட்டுக்குப் போகுமாறு சொல்கிறார்கள். அந்தச் சமயம், காதலி அவனிடம் இதைச் சொன்னால், அம்பேல் தான். இல்லையென்றால் ஸ்கைப் வைத்துச் சமாளிக்க வேண்டும்.

இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். காலேஜில் ஒரு வாரம் லீவ். பொண்ணு டேஸ்-காலர். பையன் ஹாஸ்டல். வேறு சொந்த ஊர். இவன் ஊருக்குப் போகலாம் என்று முடிவு பண்ணுகிறான். ஆனா பொண்ணுக்கு வேற plans. Hence கோபம். Same scenario as above.

இந்தக் குறளின் அழகு என்னவென்றால், அந்த ‘ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ உணர்வை சூப்பராக வெளிப்படுத்துகிறது. ‘திரும்பி வரும் போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்’ என்பது, நான் உன்னைப் பிரிந்தால் நிச்சயம் இறந்து விடுவேன் என்பதின் அழகிய subtext.

ஆனால் காதலன் எப்படியோ சமாளித்து விடுகிறான். அவளும் அவன் செல்வதற்குச் சம்மதிக்கிறாள். இன்னும் நான்கு நாட்களில் கிளம்பி விடுவான். பிரியப் போகும் துக்கம் மனதை அடைக்கும். இங்கே தான் அடுத்தக் குறள்.

பிரிவு என்பது அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை.பெற்றோர் பிள்ளைகளைப் பிரிகிறார்கள்.நட்பில் கூட பிரிவு வருகிறது.இவை இரண்டைக்காட்டிலும் மிகுந்த துயர் சேர்க்கும் பிரிவு ஒன்று உண்டு.அது காதலர்கள் பிரிவு.சங்க காலம் முதலே பொருள் தேடி ஆடவர்கள் சொந்த ஊர் விட்டு தூர நகரங்கள் செல்வதுண்டு.

அப்படியாக, நம் தலைவன் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல ஆயத்தமாகிறான்.எவ்வளவு காலம் கழித்து திரும்புவான் என்ற தகவலும் இல்லை.இந்தச் செய்தியை தலைவியிடம் சொல்ல அவன் விரைகிறான்.ஆனால் தோழி வழியாக,இந்தச் செய்தியை முன்பே அறிந்திருந்த தலைவி தலைவனை வாய்பேச விடவில்லை.
"என்னைப் பிரியப் போகிறேன் என்ற வார்த்தையைச் சொல்லத்தானா இங்கு வந்தீர்? உங்களைப் பிரிந்தால் எங்கணம் நான் வாழ்வேன்?இப்போது கூறுங்கள்,என்னைப் பிரிந்து சொல்ல மாட்டேன் என்று! அது ஒன்றே எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.இல்லை, போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீங்கள் திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அழுதுகொண்டே உரைக்கிறாள்.தலைவன் உறைந்துபோய் நிற்கிறான்.

பொருள் தேடி வந்தால் தான் பிழைக்க முடியும் என்ற ஆறுதல்வார்த்தைகளைக் கேட்கவும் தலைவி தயாராக இல்லை.அவன் பெற்றோர்,உறவினர் மற்றும் நண்பர்களால் கூட அவனது பிரிவை நினையாமல் வாழ முடியும்.தலைவியால் அது இயலாது என்றும் அப்படி பிரிந்து சென்றால், அத்துயரால் அவள் இறந்துவிடக்கூடும் என்றும் இரண்டு வரிகளில் வள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார்.