Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label வான்சிறப்பு. Show all posts
Showing posts with label வான்சிறப்பு. Show all posts

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

குறள் 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.
இன்றி - இல்லாமல்.

அமைதல்  -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமையாது - உண்டாகாது 

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

யார் - யாவர், எவர்
யார்க்கும் - எவருக்கும்

வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி.

இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.
இன்றி - இல்லாமல்.

அமைதல்  -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்

அமையாது - உண்டாகாது 

ஒழுக்கு - ஒழுகுகை; நீர்முதலியனஓடுகை, நீரோட்டம்; வரிசை; நடைமுறை; நன்னடை, ஆசாரம்.

முழுப்பொருள்
இறைவனின் கருணை வடிவே மழை. அதற்காகவே கடவுள் வாழ்த்திற்கு அடுத்து வான்சிறப்பு அதிகாரத்தை திருவள்ளுவர் இயற்றியிருக்கிறார் போலும்.
 
உலகில் தங்கம் வெள்ளி எரிவாயு எண்ணெய் கலை இலக்கியம் இல்லாவிட்டால் உயிர்வாழ்ந்துவிடலாம். ஆனால் நீர் இல்லையென்றால் உலகத்தில் மனிதன் உட்பட எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது. அத்தகைய நீரை உலகத்திற்கு மழையாக தருவது வானத்தில் உள்ள மேகங்கள். இந்த மழை பொய்த்துபோனால் உலகத்தில் வறுமை ஏற்படும். வறுமை ஏற்பட்டால் குற்றங்கள் பெருகும். குற்றங்கள் பெருகினால் அறம் குறையும் ஒழுக்கம் கெடும். ஆதலால் மழை பொய்த்தால் உயிர்கள் வாழ்வது மட்டும் இல்லாமலாகிவிடாது அறமும் ஒழுக்கமும் கெட்டுப்போகும். அறமும் ஒழுக்கமும் கேட்டால் கேடு விளையும் உலகம் அழியும்.

ஆதலால் மழை பொழிய தேவையான காரணிகளை (மரங்கள், காடுகள், கடல், ஆறு,  குலம் , ஏரி) பேண வேண்டும். 

லௌகீகமாக பார்த்தால் நீர் வளமாக தாரளமாக இருக்கும் இடங்களான ஆறுகளை ஒட்டியே பல சாம்ராஜ்யங்கள் வளர்ந்து செழித்து அமைந்துள்ளன. காவிரி நதியை ஒட்டியே பல சிறு குறு மன்னர்கள், பெரிய மன்னர்களான சோழர்கள் ஆகியோரின் சாம்ராஜ்யங்கள் உருவாகின. அதேப்போல் வடக்கில் கங்கை கரையை ஒட்டியே பல சாம்ராஜ்யங்கள் உருவாகியது. ஆதலால் ஒரு நகரமும் அதற்கு தேவையான செல்வமும் அமையவேண்டும் என்றால் அதற்கு தேவை அடிப்படை தேவை நீராகும். 

மூன்றாம் உலக யுத்தம், தண்ணீர் காரணமாகவே வரப்போகிறது’ என்கிறார்கள் உலக விஞ்ஞானிகள். காவேரி விவசாயிகள் பல்லாண்டுகள் முன்னமேயே இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

புறநானூற்றுப் புலவர் ஒருவர் ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்று சொன்ன வரியை எடுத்துச் சொல்லும் இறையன்பு, விளைச்சலுக்கு உதவுபவர்கள் மக்களுக்கு உயிரும் உடலும் தருகிறவர்கள் என்ற தமிழரின் ‘நீர் மேலாண்மை’யை எடுத்துச் சொல்கிறார்.

அரசனைச் சுற்றி (இப்போது அமைச்சர்கள்) பொதுவாக ஜால்ராக் கூட்டமே பேரொலி செய்யும். ஓர் அசல் புலவன், மன்னனுக்கு, ‘அரசே, நீயும் உன் நாடும் நிலைத்திருக்க வேண்டும் என்றால், நீர் ஆதாரத்தை உருவாக்கு’ என்கிறான். பேராசிரியர் தொ.பரமசிவம் சொல்வது நினைவுக்கு வருகிறது. ‘நெல் பயிருக்கு ஊடு பயிராக அவரை, துவரை, கீரை, காய் என்று எத்தனை பயிர் செய்து நீரைச் சேமித்தார்கள் நம் மூதாதையர்கள்’ என்பார் அவர். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும்பொசியும் வகையே, தமிழ் நீர் மேலாண்மை.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நீரின் றமையா உலகம் போல” (நற் 1:6)
“நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்” (புறநா 18:18)
“மழையின்றி மாநிலத்தார்க் கில்லை” (நான்மணி 47)

பரிமேலழகர் உரை
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.

மு.வரதராசனார் உரை
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

English Meaning - As I taught a kid - Rajesh
This world and all the organisms in the world cannot exist without water. Hence, this world cannot exist without rain from the clouds in the sky

Questions that I ask to the kid
What do the world and world organisms need to exist ?

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

குறள் 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
தானம் -இடம்; இருப்பிடம்; பதவி; கோயில்; இருக்கை; சக்தி; துறக்கம்; செய்யுட்பொருத்தத்தில்வரும்நிலைகள்; எழுத்துப்பிறக்குமிடம்; எண்ணின்தானம்; நன்கொடை; யானைமதம்; நால்வகைஉபாயத்துள்ஒன்றாகியகொடை; குளித்தல்; இசைச்சுரம்; சாதகசக்கரத்திலுள்ளவீடு; ஆற்றலில்சமமாயிருக்கை; இல்லறம்; மகரவாழை.

தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

இரண்டும் -இரண்டு

தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல்.

தங்கா - நிலைபெறாத ; தங்காத ; அடங்காத 

வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை.

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

வழங்குதல் -  இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்.

வழங்காது - இயங்காது 

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
அறவழியில் ஈண்டு பிறருக்கு மனதில் இருந்து உவகையுடன் கொடுத்தாலே தானம் ஆகும். அதுப்போல ஐந்து பொறிகளை அடக்கி ஆளுதல் தவம் ஆகும். இத்தகைய தானத்தையும் தவத்தையும் உலகத்தோர் பின் பற்ற முடியாதநிலை மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டால் உண்டாகும். ஏனெனில் மழை பெய்யாவிட்டால் செல்வம் செழிக்காது. வறுமை வளரும் (குற்றங்கள் பெருகும்). வறுமை வளர்ந்தால் தானம் செய்ய முடியாது. மேலும் தவமும் செய்யமுடியாது. ஆதலால் மழை பொய்த்தால் இல்லறமும் (தானமும்) துறவறமும் (தவமும்) மிகவும் பாதிப்பு அடையும். 

உன்னதமானவர்கள் உலகத்தின் நன்மைக்கே வேண்டுவார்கள், அவர்கள் தவமும் அதற்காகவே! ‘எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே’ என்பதே சித்தர்களும் முத்தர்களும் வேண்டியது. ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஔவையார் கூறுகிறார் 
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தானமும் தவமும் தாம்செயல் அரிதே
தானமும் தவமும் தாம்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே” (ஔவையார்)

பரிமேலழகர் உரை
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).

மணக்குடவர் உரை
தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது

மு.வரதராசனார் உரை
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

சிறப்பொடு - சிறப்புடன் 

பூசனை - நாள்வழிபாடு; சிறப்பித்தல்

செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

செல்லாது - செல்லாமல் 

வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

வறக்கு - வற-த்தல் - vaṟa-   12 v. intr. [K. baṟu,bari, M. varu, Tu. vare.] 1. To dry up;காய்தல். (பிங்.) 2. See வறங்கூர்-, 1. வானம் வறக்குமேல் (குறள், 18). 3. To grow lean; to shrink;குறைந்து மெலிதல். (W.)

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

வானோர்க்கும்வானோர்- தேவர்

ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம்; இம்மை; விரைவு; புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது.

முழுப்பொருள்
கோயில்களில் தினம் தினம் பூஜைகள் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு தரம் (அல்லது சில தடவை தான்) திருவிழாக்கள் நடைபெறும். அதுபோல நம் வீட்டிலும் பொங்கல் போன்ற நன்றி செலுத்தும் பண்டிகைகளை நடத்துவோம். மேலும் மூதாதையர்களுக்கு நீத்தார் கடன் செலுத்துவோம். இவையாவும் வானோர் எனக்கருதப்படும் இறைவனுக்கும் தேவர்களுக்கும் செலுத்தப்படுவன ஆகும். ஆனால் வானில் இருந்து பொழியும் மழை பெய்யாவிட்டால் பூமி விளையாது. உணவு உற்பத்தியாகாது. வர்த்தகம் நடக்காது. செல்வம் செழிக்காது. வறட்சி ஏற்பட்டால் உணவுக்கே தட்டுப்பாடு ஏற்படும். அப்படி இருக்கையில் வானோர்க்கு நடத்தப்படும் திருவிழாக்களை நடத்த முடியாமல் போகும். 

ஆதலால் மழை மிக மிக தேவை. இன்றியமையாததாகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின்” (மணி 10:72)

“மண்ணின்மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு” (பெரிய திருஞான 562)

பரிமேலழகர் உரை
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)

மணக்குடவர் உரை
சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

மு.வரதராசனார் உரை
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

சாலமன் பாப்பையா உரை
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

குறள் 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
நெடுங் - நெடும் - நெடுமை - நீளம், உயரம், காலம்முதலியவற்றின்நீட்சி; பெருமை; அளவின்மை; ஆழம்; கொடுமை; பெண்டிர்தலைமயிர்; நெட்டெழுத்து.

கடலும் - கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

தன் - தன்னுடைய

நீர்மை - நீரின்தன்மை; தன்மை; சிறந்தகுணம்; எளிமை; அழகு; ஒளி; நிலைமை; ஒப்புரவு.

குன்றும் - குன்றுதல் - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.

தடிந்து - தடிதல் - வெட்டுதல்; அழித்தல்; குறைத்தல்.

எழிலி - மேகம்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காது - கொடுக்காது ; விரும்பாது ; தாமதிக்காது; வளர்க்காது அருள் செய்யாது 

ஆகிவிடின்  - ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

முழுப்பொருள்
கடல் தண்ணீரால் ஆனது. அக்கடலுக்கு நீர் ஆறுகள் மூலமாக வந்து சேருகிறது. ஆறுகளுக்கு நீர் காடுகளில் மரங்கள் தேக்கிவைக்கும் நீரில் இருந்து வரும். அது மழையில் இருந்து வரும். அது மேகத்தில் இருந்து வரும். 

"தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்"

மேகம் கடலில் இருந்து தண்ணீரை ஆவியாக பெற்றுக்கொள்ளும் அல்லது (water  spout) மேகம் முகர்ந்து(அள்ளும்) எடுத்துக்கொள்ளும். அப்படி நடக்காவிட்டால் மழை கிடைக்காது. 


water spout

உலகில் மூன்றில் ஒரு பாகமான நீண்ட கடலானது கூட வற்றிப்போய் விடும் மழை பெய்யாவிட்டால். ஆதலால் மழை இன்றியமையாது. மழை இல்லாவிட்டால் செடி கொடிகள் காய்கறிகள் விளைவிக்க முடியாது. பசும்புல் கூட முளைக்காது. மழை இல்லாவிட்டால் விலங்குகள் கூட உயிர் வாழ முடியாது. கடல் குன்றி வற்றிப்போனால் கடல் நீரின் செறிவு (concentration) அதிகமாகி  கடல் உயிரினங்களும் அழிந்துபோகும். ஆதலால் மனிதனுக்கு உணவு கிடைக்காது. ஆதலால் கடல் மழை பெய்யவில்லையென்றால் இங்கே உயிர்கள் வாழமுடியாது. உலகத்தை உயிர்ப்புடன் வைக்க மழை இன்றியமையாததாகும். 

”நெடுங்கடலும்” என்ற மிகப்பெரும் சொல்லாட்சியோடு தொடங்குகிறது குறள். கடல் என்றாலே பெரிது தான். ஆனால்  இயற்கையின் பெருண்மையை அடிக்கோடிட “நெடுங்கடல்” என்று கூறுகிறார் திருவள்ளுவர். மேலும் “உம்” என்ற விகுதியை வேறு சேர்த்துவிடுகிறார். பெரிய கடல்தானே அதிலே கொஞ்சம் குப்பையைப் போட்டால் என்ன ஆகப்போகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு அன்றே விடை கூறியுள்ளார் வள்ளுவர். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் தன்மை வேறுபடும் வாய்ப்புகள் உண்டு.

“தன்னீர்மை” எனும் அடுத்த சொல் இன்னும் வியப்பளிக்கும். இன்றைய அறிவியல் செய்தியென நாம் நினைக்கும் ஒன்று பற்றிய, அன்றைய அறிவின் வெளிப்பாடு இந்தச் சொல். பொதுவாக நீர்மங்களின் அமில, காரத் தன்மையை இன்று pH என்று அளவிடுகிறோம். நல்ல நீரின் pH 7 என எடுத்துக்கொள்ளப்பட்டு மற்றைய நீர்மங்களின் pH அளவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அதன்படி கடல் நீரின் pH மதிப்பு 7.4 முதல் 8.3 வரை இருக்கும். இது அதிகமானால் கடலுக்கு ஆபத்து. அதாவது கடல் வாழ் உயிர்களின் வாழ்கை பாதிப்புக்கு உள்ளாகி அழிந்து மடியும். இந்த மாறுபாடுகள் நிகழ்வது கடலில் ஆறுகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும் உப்பு மற்றும் தனிமங்களால் தான். 

அதுமட்டுமா இவ்வளவு உப்புச் சுவைக்குக் காரணம்?
இலை. வேறு இரண்டு காரணங்கள் கடலில் நிகழ்கின்றன. கடலுக்கு அடியில் உள்ளப் புவி மேலோட்டிலிருக்கும் வெடிப்புகள் வழியாக உள்ளே சொல்லும் கடல் நீர் அங்கே சூடாகி அங்குள்ள தனிமங்களைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் வெந்நீர் ஊற்றுகள் வழியாக மீண்டும் கடலில் சேருகிறது. இது மட்டுமல்ல கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெளியிடும் சூடான பாறைகளின் வேதிப்பொருட்களும் கடலில் கலக்கின்றன. மேலும் காற்றின் வழியாகவும் நிலத்திலிருந்து துகழ்கள் கடலில் சேருகின்றன.

இப்படிச் சேரும் உப்புகள் எங்கே செல்கின்றன?? கடல் எப்படி சீராக இருக்கிறது?

பல வகை உப்புகள் கடல் வாழ் உயிரிகளால் உறிஞ்சப்படுகின்றன. காட்டாக, பவழ பாலிப்புகள், மெல்லுட்டலிகள், ஓட்டுடலிகள் ஆகியவை உப்பிலுள்ள கால்சியத்தை உட்கொள்கின்றன; இதை உபயோகித்து தங்கள் ஓடுகளையும் எலும்புக்கூடுகளையும் அவை உருவாக்குகின்றன. இதுப்போலவே மற்றைய உயிர்களும் உப்புகளை எடுத்துக் கொள்கின்றன. இப்படியே ஒரு சுழற்சி நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆறுகள் நன்னீரைக் கொண்டு க்டலில் சேர்க்காவிட்டால் உப்புத்தன்மை அதிகமாகிவிடும். இதுப்போலவே அமிலத்தன்மையும். நாம் வளர்ச்சி என்ற பெயரில் வெளியிடும் கரியமில வளி கடலில் அமிலத்தன்மையை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது புவிமேலாட்டு நகர்வுகளை வேகப்படுத்தக் கூடும் என்று இன்றைய அறிவியலாளர்கள் எண்ணுகிறார்கள். இந்நிலையில் வள்ளுவர் காலத்தைவிட இப்பொழுது ஆறுகள் கடலில் கலக்கவேண்டியது இருமடங்கு கட்டாயமாகிறது.

அமிலமா, காரமா என்று ஐயப்பாடு இல்லை வள்ளுவருக்கு. அவர் “தன்னீர்மை” என்றே குறிக்கிறார். நீர்மைத்தன்மை “குன்றும்” என்கிறார். 

எப்பொழுது?

“தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்”

எழிலி என்றால் மேகம். தடித்து என்பதற்குத் திரளுதல், மின்னல் என இரு பொருட்களையும் சொல்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி. எனில் திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் என்று பொருளாகிறது. “நல்குதல்” எனில் பெருங்கொடை. “தடிந்தெழிலி” யால் தான் கடலில் நீர் கொண்டு சேர்க்கும் பெருங்கொடையாகிய பெருமழையைத் தரமுடியும். சிறு மேகங்கள் பொழிந்தால் நிலத்தோடு மழை நின்றுவிடும். நிலத்தின் உப்புகளைக் கடலில் சேர்க்க இயலாது போகும். “தடிந்தெழிலி தான் நல்குவது” வள்ளுவர் சொல் ஆளுமைக்கு இன்னொரு சான்று.

பெருமை பெய்து ஆறுகள் வழியாக உப்பும் நீரும் கடலில் கலக்காவிடில் கடலில் நீர்மை குன்றிவிடும். 

”அடர்த்தி” அல்ல ”நீர்மை” குறையும் என்கிறார். “நீர்மை” குறைந்தால் “அடர்வு” அதிகமாகும். உயிர்கள் வாழ்வு சிக்கலாகும். இது நீரியல் சுழற்சி பற்றி அறிந்திருந்த அறிவு மரபின் தொடர் வெளிப்பாடே. உலகின் உயிர் சுழற்சிக்குக் கடல் முக்கியப் பங்காற்றுகிறது. கடலுக்கு மழை நீரையும் உப்பையும் கொண்டு சேர்க்கிற பொறுப்பு ஆறுகளுக்கு இருக்கிறது. 

போய்வா மகளே. கடலில் கலந்து, மழையென், குடகில் பிறந்து மறுபடி வா. நிலத்திலும் கடலிலும் அடுத்தத் தலைமுறை காத்திருக்கிறது உனக்காக.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வேட்டம்பொய் யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது” (நற் 38:1-2)

“நிறையுறும் பௌவம் குறைபட முகந்துகொண்டு....
கொண்மூ.... பொழிந்தென” (குறிஞ்சி 47-53)

“நீண்டொலி யழுவங் குறைபட முகந்துகொண்
டீண்டுசெலற் கொண்மூ வேண்டுவயிற் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூல்முதிர்பு
உருமுரறு கருவியொடு பெயல்கட னிறுத்து” (புறநா 161:1-4)

பரிமேலழகர் உரை
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.

மு.வரதராசனார் உரை
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

சாலமன் பாப்பையா உரை
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

குறள் 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
விசும்பின் - விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு.

துளி  - திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல்.

வீழின்  - வீழ்தல் -  ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

அல்லால் - மற்றபட்டி, இல்லாமல்

மற்று  - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஆங்கே - அங்கே

பசும்புல்  - பச்சைப்புல்; விளைபயிர்.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

காண்பு - காட்சி, காணுதல்.

அரிது - aritu   s. Difficulty, unattainable ness, rareness, preciousness, அருமை.

முழுப்பொருள்
வானத்தில் இருந்து மேகங்களின் துளிகள் மழையாக பூமியின் நிலத்தில் விழாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலத்தில் பசும்புல்கள் கூட முளைக்காது. ஆதலால் நாம் அவற்றை நிலத்தின் மேல் பார்ப்பது அரிதாகிவிடும். பசும்புல்லிற்கு தேவையான தண்ணீர் சிறிதளவு தான் வேண்டும். அது நிலத்தின் மேற்பரப்பில் ஒரு சில அங்குலம் இருந்தால் கூட போதும். அப்படிப்பட்ட பசும்புல்லிற்கு தேவையான நீரே கிடைக்கவில்லையென்றால் நிலத்தடி நீரினை நம்பியுள்ள மரங்கள் செடிகள் எல்லாம் எப்படி உயிர்வாழும்? குளங்களிலும் ஆறுகளிலும் எப்படி தண்ணீர் நிரம்பும். அதனை நம்பியுள்ள விலங்குகள் எப்படி தண்ணீர் பருகும் ? 

இந்த பசும்புல்களும் செடிகளும் மரங்களும் நீர்நிலைகளும் இல்லையென்றால் விலங்குகள் எப்படி நிழலார வாழும், உணவு உட்கொள்ளும்? பறவைகள் மரத்தில் காய்க்கும் பழங்களையம் விலங்குகளின் ஊனையும் நம்புகின்றன. அவை எப்படி உயிர்வாழும்? செடிகளையும் விலங்குகளின் மாமிசத்தையும் உணவுக்காக நம்பும் மனிதர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள் ?

ஆதலால் எல்லா ஜீவராசிகளும் மழையை நம்பியே உள்ளன. மழை அரிதானால் பசும்புல் உட்பட எல்லா ஜீவராசிகளும் அரிதாகும். 

1) ”இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும். ”

2) மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்.....

3) மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ

ஒப்புமை
”பயிர் காட்டும் புயல்” (சம்பந்தர்.திருவெண்காடு 1)
“பைங்கூழ்க்கு வானே யன்ன” (பெரிய.சண்டேச 24)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறத்தாறிது கட்டுரையில் இருந்து
குலஅறம் என்பது அடுத்த கட்டத்துக்கு போகும் தருணங்களை நான் தரிசித்திருக்கிறேன். இரண்டு நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அய்யப்பண்ணன் வேளிமலை அடிவாரத்தில் விவசாயம் செய்வதற்காக போவார். சாலையிலிருந்து அங்கு போவதற்கு கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் வரை இருக்கும். தண்ணீர் தவிர அங்கு வேறு எதுவும் கிடைக்காது. தூக்கு பாத்திரத்தில் சோறோடு போவார். அங்கு வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி வேலை பார்ப்பார். சோறுதான் இருக்கிறதே, சாப்பிடலாம் என்று எண்ணி சோறு இருப்பதனாலேயே பசியை ஒத்திப்போடும் மனநிலை வரும். விவசாய வேலை அப்படிப்பட்டது முடிக்கவே தோன்றாது. சாப்பிடலாம் சாப்பிடலாம் என்று ஒத்திப்போட்டு பசி ஏறிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட கொலை வெறி பசி அடையும்வரை விட்டுவிட்டார். பசி தாங்க முடியாமல் ஆனபின் மண்வெட்டியை வைத்துவிட்டு வந்தார்.

ஒருநாய் அவருடைய தூக்குபோணியில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவர் மண்வெட்டியை காலால் மிதித்தபடி குச்சியை எடுத்தார் அடிப்பதற்கு. ஆனால் மனம் நெகிழ்ந்துவிட்டது. அவர் என்னிடம் சொன்னார். “தம்பி க்ளக் க்ளக்ன்னு சத்தம் கேட்டுது. அம்புட்டு பசி அதுக்கு. நமக்கு தெரிஞ்ச பசிதானே அதுக்கும் தெரியுது அந்த பசி சத்தத்துக்கு கண்ல தண்ணி வந்து போட்டுது பாத்துக்குங்க. சாப்டுட்டு போ மக்கான்னு சொல்லிட்டேன்”

இது தான் குல அறத்திலிருந்து அடுத்த கட்டமாக ஒரு பெரிய அறம் நோக்கி போகும் பயணம். மானுட அறம். உயிர்களைத் தழுவி விரியும் அறம் இது. இன்னொரு நிகழ்ச்சி. அதுவும் அய்யப்பண்ணன்தான். அந்த வருடம் மழை தவறிவிட்டது. அவர் சொன்னார் “எப்படி மழை பெய்யும்? மழையை நாம விக்க தானே செய்யுறோம்?” நான் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

அவர் விளக்கினார். உணவுக்காக வாழ்வுக்காக விவசாயம் பண்ணும்போது மழைக்கு நாம் நியாயம் செய்கிறோம். ஆனால் அந்த மழையைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வணிகப்பொருளாக மாற்றி ரப்பராகவோ இன்னொன்றாகவோ ஆக்கி விற்கும்போது மழையை விற்கிறோம். மழையை விற்றால் மனிதனுக்கும் மழைக்குமான ஒர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. எதன் பொருட்டு மண்ணில் விழவேண்டுமோ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறாய் நீ. விற்க ஆரம்பிக்கிறாய். அதனால் அது பெய்யாது. பெய்யவில்லை என்றால் நீ போய் தெய்வத்திடம் கேட்கக்கூடாது. இது ஒரு அறம். இப்படிப்பட்ட அறங்களால் தான் வாழ்க்கை உருவாகிவந்திருக்கிறது.

இதிலிருந்து தான் பெரிய அறங்கள் உருவாகி வந்திருக்கின்றன. சமூக அறம், தவறுகள் சரிகள் சார்ந்த அறங்கள், உருவாகி வந்துள்ளன. ஆனால் திருப்பி திருப்பி நமக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு பேரறத்தான் ஒருவன் தருமத்தின் குரலில் பேசும்போது நம் அன்றாட தர்க்க புத்திக்கு அது அபத்தமாக இருக்கிறது ஆனால் அது சரியாகவும் இருக்கும்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்தியாவின் மதக்கலவரங்கள் நடந்த காலத்தில் ஒருவன் வந்து காந்தியிடம் சொல்கிறான். ‘ “என் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் கொலை செய்துவிட்டார்கள். நான் ஐந்து இஸ்லாமியர்களைக் கொலை செய்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் கொல்வேன். நீங்கள் என்ன செய்ய முடியும்?” என்று. அப்போது காந்தி சொல்கிறார் “இன்னும் நூறு இஸ்லாமியர்களைக் கொன்றாலும் உன் தீ அடங்காது. ஒரு இஸ்லாமியக் குழந்தையை எடுத்து நீ வளர். உன் குழந்தையாக அதை நினை. அப்போது தான் உன்னுடைய தீ அடங்கும்”.

நடைமுறையில் அபத்தமான ஒரு பதில் அது. ஆனால் அதைவிட சரியான பதில் இருக்கமுடியாது. அவ்வளவுதான் அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் இக்காட்சி வருகிறது. உண்மையிலேயே அவர் அப்படிச் செய்து பிற்காலத்தில் புகழ்பெற்ற சமூக சேவகராகவும் ஞானியாகவும் அறியப்பட்டார் என்று ஒரு செய்தி உண்டு..

எப்போதும் அறத்தின் குரல் கிளம்பி வரும்போது அது சமகால பிழைப்புவாத சிந்தனைக்கும் நாம் யோசித்திருக்கும் நூற்றுக்கணக்கான அன்றாட விஷயங்களுக்கும் முரண்பாடாக தெரியும். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக வீட்டு வாசலுக்குப் பதிலாக கூரையில் ஒரு ஜன்னலைத் திறந்து விட்டதாக தோன்றும். ஏனெனில் அது மிகவும் தொன்மையானது. மிகவும் பழைமையானது. எப்போதாவது நம் புனைகதைகளில் அந்தத் தருணம் வரும்போதுதான் நமக்கு ஒரு மெய்சிலிர்ப்பு வருகிறது.

நாஞ்சில் நாடனின் ஒரு பிரபலமான கதை உண்டு. இவர் கோவையில் ஒரு பஸ்ஸில் ஏறுகிறார். அந்த பஸ் மானந்தவாடிக்கு போகிறது. அந்த பஸ் ஏறும் காட்சியே அவர் பிரமாதமாக சொல்கிறார். பஸ்ஸில் நூறு பேர்தான் போக முடியுமெனில் முந்நூறு பேர் காத்திருக்கிறார்கள். பஸ் வந்தவுடன் நானூறு பேர் ஏறிவிட்டார்கள். எப்படி ஏறினார்கள் என்று தெரியாது. முழுவதும் ஆட்கள்.

டிரைவர் வந்து உட்காரும்போதே அந்தக் கூட்டத்தை பார்த்து கடுப்பாகிவிடுகிறான். வண்டியே ஒரு பக்கம் சரிந்திருக்கிறது. அவனே ஒரு பக்கம்சரிந்து உக்கார்ந்துதான் ஓட்டுகிறான். பிறகு கெட்ட வார்த்தையாக திட்டிக் கொண்டே இருக்கிறான். சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.. எரிச்சலின் உச்சத்தில் அந்த வண்டி போய்க்கொண்டிருக்கிறது. மானந்தவாடியை தாண்டும்போது ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையை மிக மெதுவாக கடந்து போகிறது. எதையாவது சாப்பிட்டிருக்குமோ அல்லது கர்ப்பிணியோ தெரியவில்லை என்கிறார் ஆசிரியர். மிக மெதுவாக கடந்து போகிறது அது. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு தலையை வெளியே நீட்டி மலையாளத்தில் ‘ஒந்நு போ மோளே வேகம்’ என்கிறான். மகளே கொஞ்சம் வேகமாப்போ என்று.

இந்த இடத்தில் அவன் ஒரு டிரைவராக அல்லாமல் ஒரு ஆதிவாசியாக மாறி பல்லாயிரம் வருட பழமையான ஒரு பண்பாட்டுக்குள்ள போய்விடுகிறான். இந்த மாற்றத்தை இந்த தொன்மையை மாறாத ஒன்றை சுட்டிக் காட்டும்போது தான் இலக்கியப்படைப்புகள் அமரத்துவம் கொள்கின்றன.

நான் சில ஆண்டுகளுக்கு முன் நமீபியா போயிருந்தேன். என்னை டேவிட் கெம்பித்தா- என்கிற கருப்பினத்தை சேர்ந்த வழிகாட்டி இளைஞன் அழைத்துச் சென்றான். ஓர் இடத்தில் மணல்மேல் ஒரு டிசைனை பார்த்தேன். ”இது என்ன?” என்று கேட்டேன். ”இது வைட் லேடி, காட்டுகிறேன்” என்று மணலில் தோண்ட ஆரம்பித்தான். அங்கு எச்சிலால் ஆன ஒரு குழாய் போல மணலுக்குள் இறங்கிச் சென்று அங்கு ஒரு சிறிய குடுவை மாதிரி சென்று முடிந்தது. அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு சிலந்தியை எடுத்து எனக்கு காட்டினான். ”இதன் பேர்தான் வைட் லேடி. இவள் இரவில் தான் வேட்டையாடுவாள்.பகலில் உள்ள உக்காந்திருப்பாள். அழகானவள். அதனால தான் இவளுக்கு வைட் லேடி என்று பெயர்” என்று விளக்கம் சொன்னான்.

கொஞ்ச நேரத்தில் கிளம்பினோம். அவன் அதே ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி அதைப்போட்டு மண்ணை மூடினான். ”ஏன்?” என்று கேட்டேன். “இவளை வெளியே போட்டால் பத்து நிமிஷம் கூட வெயில் தாங்காது. இறந்துவிடுவாள். உள்ளே போட்டால் குளிராக இருக்கும். அங்கு தான் அவள் உயிருடன் இருக்க முடியும்” என்று சொன்னான். நான் சொன்னேன் ”நீங்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள்தானே? இதைக் கொன்றால் உங்களுக்கு என்ன?”

அவன் சொன்னான். ”அதை நான் சாப்பிட முடியும் என்றால் ஒன்றுமில்லை. வெறுமே கொன்று போட்டுவிட்டு போவதை ஒரு ஆப்பிரிக்க பழங்குடி செய்யக்கூடாது”. அதைக் கொன்று போட்டுவிட்டு போவதற்கு வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் போன்ற நாகரீக மனிதர்களால் தான் முடியும். அவர்களால் முடியாது. அவர்களுடையது பல்லாயிரம் வருடத் தொன்மைகொண்ட வேட்டைப்பண்பாடு.

நெடுங்காலமாக ஒரு பண்பாட்டிலிருந்து நாம் விலகி விலகி வந்துவிட்டோம். மீண்டும் குல அறத்திலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுதான் அறம் என்பதின் அடிப்படை. இங்கிருந்துதான் அறம் தொடர்பான எல்லா வார்த்தைகளும் வந்திருக்கிறது இங்கிருந்து தான் எல்லாமே தொடங்குகிறது. அறம் வலியுறுத்தல் என்ற பெயரில் வள்ளுவர் எழுதிய எல்லா பாடல்களையும் இன்றைய நவீன மாணவனுக்கு சொல்லி புரியவைப்பது கடினம் ஆனால் ஒரு பழங்குடியிடம் சொல்லிபுரியவைப்பது சுலபம்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

மிக சாதாரணமாக பொருள் அளிக்கும் ஒரு குறள் அது. ஆனால் விசும்பு என்பது வானம் அல்ல. பெருவெளி. ஸ்பேஸ். அது கனிந்துவிழுந்தால்தான் பசும்புல். உணவின் முதல் வடிவம் உருவாகிறது. புல் என்பது ஜடப்பொருள் உனவாகும் முதற்பரிணாமம். அன்னத்தின் கண்கண்ட வடிவம். ஆகவே தான் புல் வணக்கத்துக்குரியதாக வேதத்தில் சொல்லப்படுகிறது. ஏனெனில் நெல்லும் ஒரு வகையான புல்தான். இந்த பூமியை முழுக்கத் தழுவியிருக்கும் ஒன்று புல். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மோசமான இடத்திலிருந்தும் புல் வந்துவிடும். புல்லில் இருந்து தான் அனைத்தும் ஆரம்பிக்கிறது. ஒன்று புல்லை சாப்பிடுவோம். அல்லது புல்லை சாப்பிடுவதைச் சாப்பிடுவோம். அது முளைக்க விசும்பிலிருந்து ஓர் ஆணை வரவேண்டும். அய்யப்பண்னன் சொன்னது அதுதானே?

அறம் என்கிற வார்த்தையை தமிழில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் அது மாறிக்கொண்டு வருவதைப்பார்க்கலாம். சங்க காலத்து அறம் என்பது பொதுவாக ஒரு குடியோ ஒரு குடும்பமோ மரபுக்கடமையாகக் கொள்ளும் ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது. இல்லறம், துறவறம் என அறங்கள் இரண்டு. அதன் பிறகு பௌத்தம் வந்தது, சமணம் வந்தது. அவர்கள் அறம் என்பதை பிரபஞ்ச அறமாக மாற்றினார்கள். இங்கிருக்கும் ஒரு பசும்புல்லில் இருந்து விசும்பை திறந்து காட்டினார்கள். அதன் பின் அறம் என்பது மிகப்பெரிய வார்த்தை. அது பிரபஞ்ச நெறி.

பரிமேலழகர் உரை
விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.

மு.வரதராசனார் உரை
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சாலமன் பாப்பையா உரை
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்

குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.-

ஊம் - ūm 
s. An interjection formed from உம் lengthened, a particle indicative of attention, assent, &c.

உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி;  உம்
um   part. [K. M. um.] 1. Connective particle implying (a) simple connection, as in சேரனும் பாண்டியனும்; எண்ணும்மை (b) negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும்;எதிர்மறையும்மை; (c) speciality whether of su-periority or inferiority, as in குறவரு மருளுங்குன்றம் orயாக்கை சிறப்பும் மை (d) uncertainty, as in அவன் வெல்லினும்வெல்வான்; ஐயவும்மை (e) something understood, as in சாத்தனும் வந்தான்; எச்சவும்மை (f)universality, as in தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்;முற்றும்மை; (g) declaration of a conviction,as in ஆணுமன்று பெண்ணுமன்று when speakingof a hermaphrodite; தெரிநிலையும்மை (h) in addition to, as in பாலுமாயிற்று which signifies thatmilk is not only food, but also medicine; ஆக்கவும்மை (நன். 425.) 2. Ending of (a) 3rd pers.sing. of all genders and of the impers. pl. ofverbs of the present as well as the future tense;பலர்பாலொழிந்த படர்க்கை நிகழ்கால எதிர்கால முற்றுவிகுதி; (b) imp. pl.; ஏவற்பன்மைவிகுதி; (c) 

கெட்டார்க்குச்  - அழிந்தார், வறுமையடைந்தார், பாழானார்,

சார்வாய் - cārvāy   n. perh. சாறு +. Palmyrafruit sliced and cooked; அறுத்தவித்த பனங்காய்.(யாழ். அக.)

சார் - கூடுகை; இடம்; ஏழனுருபு; பக்கம்; அணைக்கரை; தாழ்வாரம்; ஒருமரம்; அழகு; ஒற்றன்; வகை.

சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

ஆங்கே -அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

எடுப்பதூஉம் - எடுத்தல் - நிறுத்தலளவு; எடுத்தலோசை; உயர்த்துதல்; சுமத்தல்; தூக்குதல்; நிறுத்தல்; திரட்டுதல்; உரத்துச்சொல்லுதல்; குரலெடுத்துப்பாடுதல்; மேம்படுத்திச்சொல்லுதல்; பாதுகாத்தல்; எழுப்புதல்; தொடங்கல்; ஏற்றுக்கொள்ளுதல்; எடுத்துவீசுதல்; வீடுமுதலியனகட்டல்; இடங்குறித்தல்; கைக்கொள்ளுதல்; தாங்குதல்.-

எல்லாம் - முழுதும்

மழை - மேகத்தினின்றுபொழியும்நீர்; நீருண்டமேகம்; காண்க:மழைக்கால்; நீர்; கருமை; குளிர்ச்சி; மிகுதி.

முழுப்பொருள்
இவ்வுலகிற்கு மழை இன்றியமையாதது. மழை பெய்யாமல் (பொய்த்துப்) போனால் நிலம் செழிக்காது பயிர்கள் விளையாது. அதனால் மக்கள் குடிநீருக்குக்கூட அவதிப்படுவார்கள். முக்கியமாக விவசாயத்தில் அறுவடை குறையும் அல்லது முற்றிலும் இருக்காது. ஆதலால் மக்கள் உணவுக்கு கஷ்டப்படுவர். விவசாயிகள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள். ஆதலால் மழை பொய்த்தால் மக்களின் வாழ்வு கெடும். அவ்வாறு (மழையினால்) கெட்ட மக்களுக்கு ஆறுதலாக வாழ்வை கொடுக்கவல்லதும் மழை ஒன்றே. மழையை தவிர வேறு ஏதும் இல்லை. மழை பருவத்தில் பெய்யும் பொழுது விளைச்சல் செழிப்பாக இருக்கும். அவர்களுக்கு பயிரும் கிட்டும், வரும்படியும் வரும், வாழ்வும் வளம் பெரும். அவ்வாறு மழை அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து வாழ்வை உயர்த்துகிறது.

மழை இல்லை என்றால் ஒரு கட்டத்திற்கு (அதாவது நிலத்தடி நீரின் பயன்பாட்டு அளவு வரையில்) பிறகு குடிநீர் இல்லை. குடிநீர் இல்லை என்றால் வாழ்வாதாரமே இல்லை.

ஆதலால் மழையைப்போல் பெய்யாமல் கெடுப்பதும் (வேறு) ஏதும் இல்லை. மழையைப்போல்  கொடுத்து உயர்த்துவதும் (வேறு) ஏதும் இல்லை.

பி.கு : ஆதலால் மழைப்பெய்ய சாதகமான எல்லாவற்றையும் மக்கள் செய்ய வேண்டும். மரம் வளர்க்க வேண்டும். மலைகளை போற்ற வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

பொருள்
”பெயின்நந்தி வறப்பிற்சாம் புலத்திற்குப் பெயல்போல்” (கலித் 78:19)

பரிமேலழகர் உரை
கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை. ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை. இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.

மு.வரதராசனார் உரை
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

குறள் 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
ஏரின்  - ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

உழவு - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை
uḻavu   n. உழு-. [M. uḻavu.] 1.Ploughing; உழுகை. உழந்து முழவே தலை (குறள்,1031). 2. Agriculture, husbandry; வேளாண்மை உழவின் மிக்க வூதியமில்லை.

உழாஅர்  - உழவுத் தொழிலைச் செய்யாமல் போவர்

உழவர்  - உழவுத் தொழிலைச் செய்பவர்கள்

புயல் - மேகம்; மழைபெய்கை; நீர்; கொடுங்காற்று; சுக்கிரன்.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

வாரி  - vāri   n. வா-. 1. Income, resources;வருவாய். (பிங்.) புயலென்னும் வாரி (குறள், 14).2. Produce; விளைவு. மாரிபொய்ப்பினும் வாரிகுன்றினும் (புறநா. 35). 3. Grain; தானியம். (யாழ்.அக.) 4. cf. vārya. Wealth; செல்வம். (பிங்.)
vāri   n. vāri. 1. Water; நீர்.(பிங்.) (தக்கயாகப். 67, உரை.) 2. Flood; வெள்ளம்.(பிங்.) வணிக மாக்களை யொத்ததவ் வாரியே (கம்பரா.ஆற்றுப். 7). 3. Sea; கடல். (பிங்.) (தக்கயாகப்.67, உரை.) 4. Reservoir of water; நீர்நிலை.

வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம்

குன்றிக்கால் - குறைந்து இருந்தால்

முழுப்பொருள்
புயல் என்ற சொல்லுக்கு மேகம், மழைப்பெய்கை, நீர் என்ற பொருள்கள் உள்ளன. புயலிற்கு கொடுக்காற்று என்னும் அழிவை குறிக்கும் அர்த்தம் மட்டுமே பொருள் என்று இல்லை.

ஆதலால் புயல் என்னும் மேகம், மழைப்பெய்கை இவ்வுலகத்திற்கு குறைந்தால் அதனுடைய தாக்கம் அதிகம் இருக்கும். ஏனெனில் மேகம் என்பதே மழையாக பொழிந்து நீராக மண்ணில் விழுகின்றன. இந்த மழைநீரானது மண்ணிருக்கு ஒரு வரவு. அந்த வரவு குறைந்தால் மண்ணில் ஈரம் இருக்காது, ஆதலால் ஏர்க்கூட உழ முடியாது.  

விவசாயத்தில் நாத்து நடுவதற்கு முன் மண்னை ஆயுத்தம் செய்யவேண்டும். அதற்கு ஏர் உழுவர். ஏர் ஓட்டுதலின் ஒரு கட்டத்தில் எருது (என்னும் உரம்) வயலில் சமமாக பரவ நீர் கட்டாயமாக தேவைப்படும். ஆக விவசாயத்தின் முதல் கட்டத்திலேயெ நீரின் அத்தியாவசியம் இன்றியமையாதது. 

பின்பு நாத்து நட, பயிர் விளைய நீர் இன்றியமையாதது என்பதை சொல்லதேவையில்லை. இந்த நீர் எல்லாம் மழையில் இருந்து வருபவை. ஆற்றில் இருந்து வரும் நீர்க்கூட மழையில் இருந்து காடுகளுக்குச் சென்று, காடுகளில் உள்ள மரங்களின் வேர்களில் தேங்கி, சொட்டு சொட்டாக வடிந்து, பின்பு ஆறாக உருக்கொண்டு ஓடுகின்றன.

ஆதலால் மழை இன்றியமையாதது. மழை பொழியவில்லையென்றால் உழவர்களுக்கு நீர் என்னும் வருவாய் இல்லை. நீர் இல்லை என்றால் உழவு செய்ய முடியாது. ஆக மழை மிக மிக முக்கியமான ஒன்று. 

ஆனால் மழை என்பது மேகத்தில் இருந்து வருவது. இந்த மேகமே இல்லை என்றால் மழை இல்லை. இந்த மேகம் உருவாகுவதற்கு மரங்கள் ஒரு முக்கிய காரணம். மழையாக பெய்யும் நீர் மண்ணில் விழுகின்றது. மரத்தின் இலைகளும் மழைநீரை எடுத்துக்கொண்டு மரத்திற்கு கொடுக்கும். காற்றில் இருக்கும் நீரையும் கூட எடுத்துக்கொண்டு மரத்திற்கு கொடுக்கும். மரத்தின் வேர் மண்ணில் இருந்து நீரை எடுத்து மரத்திற்கு கொடுக்கும். பின்பு மரம் இந்த நீரை காற்றில் ஈரப்பதமாக வெளியேற்றும். இது ஒரு கட்டத்தில் மேகமாக மறுபடியும் உருவெடுக்கும். இதுவே பின்பு மழை பொய்யும். இது ஒரு சுழற்சி.

[Growing trees take water from the soil and release it into the atmosphere. Tree leaves also act as interceptors, catching falling rain, which then evaporates causing rain precipitation elsewhere — a process known as evapo-transpiration]

ஆதலால் மழை குறைந்தால் உழவு செய்ய முடியாது. அதுப்போல மரங்கள் குறைந்தால் மழை குறையும் உழவும் செய்ய முடியாது. ஆக இயற்கை வளங்களை பேணிக்காபது அவசியம்.

பி.கு: வள்ளுவரே கூட “வாரி பெருக்கி” (குறள் 512) என்று வருவாய் என்னும் பொருளிலும் கூறியிருப்பது தெரிகிறது. (நன்றி: கி.வா.ஜ வின் ஆய்வுரை)








மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மழைதொழில் உதவ” (மதுரைக் 10)
“இருங்கண்ஞாலத் தீண்டுதொழில் உதவிப்” 
“பெரும்பெயல் பொழிந்த வழிநாள்” (நற் 157:1-2)
“வானமும் வேண்டா வில்லே ருழவர்” (அகநா 193:2)

பரிமேலழகர் உரை
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .

மணக்குடவர் உரை
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

குறள் 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
துப்பு  - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.
துப்பார் - உண்பவர்

துப்பார்க்குத் - உண்பவர்க்கு
துப்பு  ஆய - உணவாக
துப்பு  ஆக்கி - உணவு விளைவிக்க தேவையான பொருளாக
துப்பார்க்குத் - அவற்றை உண்பார்க்கு
துப்பு - உணவாக
ஆயதூஉம் - ஆவதும்
மழை.- வான் பெய்யும் மழை

முழுப்பொருள்
இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் உணவை உண்டே வாழ்கின்றன (சில உயிரினங்கள் உணவு உண்ணாமாலும் இருக்கலாம்).  அவ்வுணவை விளைவிக்க கூடிய மிக தேவையான பொருட்களில் ஒன்று நீர். அந்த நீர் மழையாக பொழிந்து உணவு விளைவிக்க நல்ல விளைநிலங்களை தந்து தக்க பருவத்தில் நல்ல விளைச்சலை தந்து உணவாக ஆகின்றன. மாமிச உணவாக மாறும் விலங்குகளும் நீரையும் நம்பி உயிர்வாழ்கின்றன. பின்பு உணவு உண்ணும் பொழுதும் நீரினை மனிதன் பருகுகின்றான். அந்த நீர் ஆற்றில் இருந்தோ குலத்தில் இருந்தோ ஏரியில் இருந்தோ வருகிறது. அதற்கு மூலமாக இருப்பது மழை நீர். ஆகவே குடிக்கும் நீர் உணவாகவும் ஆகிறது. ஆதலால் உண்ண உணவாகவும் விளைவிப்பதற்கு தேவையான பொருளாகவும் மழைநீர் இருக்கிறது.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” (புறநா 18:21)
“நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய” (புறநா 58:10)
“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்” (புறநா 70:9)
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே”  (புறநா 186:1)

பரிமேலழகர் உரை
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி - உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி; துப்பார்க்கு - அவற்றை உண்பவர்க்கு; துப்பாயதும் மழை - தானும் உணவாவது மழையே.

இருதிணை யறுவகை யுயிர்கட்கும் உணவு இன்றியமையாததேனும், தலைமைபற்றித் துப்பார் என உயர்திணைமேல் வைத்துக் கூறினார். முந்தின குறளில் அமிழ்தம் என ஒன்றாகக் கூறியதை, இக்குறளில் நீரும் உணவும் என இருவகையாக வகுத்தார். உணவென்றது உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவுமான நால்வகை விளைபொருட்களை, சோறுங் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் (கம்பு) முதலியன உண்பன; காய்கறிகள் தின்பன; பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன; தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. மழை உணவுப்பொருளை விளைப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று அதன் சிறப்புக் கூறப்பட்டது.

துத்தற்சொல் நான்முறை வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. "துப்பாய துப்பாக்கி"
என்பது சொற்பின் வருநிலையணி. துப்பாய தூஉம் என்பது இசைநிறை யளபெடை.

மணக்குடவர் உரை
பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

English Meaning - As I taught a kid - Rajesh
For all the humans (/living organisms) that consume food, it (rain water) becomes the food. For the food to become the food it (rain water) is the main ingredient without which it is not possible. Hence, we can say that the humans (/living organisms) consume the rain water. All lives in this world depend on rain water. 

Questions that I ask to the kid
What do humans and all living organisms actually eat?  Explain in detail?

வான்நின்று உலகம் வழங்கி

குறள் 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகு

நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.)

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி; நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு; மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர்; உயர்குணம்; வானம்

வழங்கி - III. v. i. pass current (as money or words), be in use; 2. proceed in a suit, advance, செல்லு; v. t. distribute, give, ஈ; 2. use, கையாடு; 3. speak; 4. direct, நடத்து.
வழங்கு-தல்- To last; to endure; to stand established; நிலைபெறுதல்.

வருதலால் தான்  - கொடையாக வருவதனால் தான்
அமிழ்தம் - அமிர்தம், தேவருணவு, உணவு, s. Ambrosia, nectar, the elixir of life,
என்று உணரல்  - உணரு, II. v. i. feel, perceive, understand, அறி; 2. realize, conceive, imagine, பாவி; v. i. recover from langour, அயர்வு நீங்கு; 2. wake from sleep, துயிலெழு; 3. become reconciled after a love quarrel, பிணக்கு (ஊடல்) நீங்கு.
பாற்று - உரியது

முழுப்பொருள்
எல்லோரும் மழையினை அமிழ்தம் என்று கருதுகிறார்கள் என்பதை தாண்டி உணருகிறார்கள் என்பதற்கு காரணம் உண்டு.  மழை என்பது இவ்வுலகிற்கு மிக முக்கியமானது. எல்லா ஜீவ ராசிகளுக்கும் மழை இன்றியமையாதது.

அப்பேர்பட்ட மழை ஒரு பருவம் நின்றால் கூட முதலாவதாக விவசாயம் பாதிக்கும். விவசாயம் பாதித்தால் உண்ண உணவு கிடைக்காது.

இரண்டாவதாக காட்டில் மழை பெய்யவில்லை என்றால் ஆறுகளில் தண்ணீர் வரத்து பாதிக்கும். ஏனெனில் காடுகளில் உள்ள மரங்களே மழை நீரை வேர்களில் தேக்கி பிடித்து பின்பு ஆறாக கொடுக்கும். (குறள் 742: மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்) . ஆற்றில் நீர் வரத்து பாதித்தால் அதனால் பல இன்னல்கள் வரும் 1) ஆற்றை நம்பிய விவசாயம் பாதிக்கும், உணவு உற்பத்தி பாதிக்கும் 2) ஆற்றையும் மழையும் மட்டும் நம்பிய ஏரி குளங்கள் வற்றிப்போகும். ஆதலால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

பருவம் தவறாமல் பெய்யும் மழையால் இவ்வுலகம் இயங்குகிறது. நிலைபெற்று இருக்கிறது. இல்லையேல் இவ்வுலகம் இந்த நிலையில் செழிப்பாக இருக்காது. ஆகவே மழை இவ்வுலகிற்கு ஒரு மிக பெரிய கொடை என்கிறார் திருவள்ளுவர்.

சம்பந்தர் தேவாரத்தில் “பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்செய்தவன்” என்று கூறப்பட்டுளதையும் கவனிக்கவேண்டும். “அமிழ்துதிகழ் கருவிய கணமழை” என்று வரும் பதிற்றுப்பத்து பாடலும் மழையினை அமிழ்தென கூறியதும் கவனிக்கத்தக்கது.  "இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம் 70).

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.).

மணக்குடவர் உரை
மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை வரையறவாய் நின்றுவிடாது தொடர்ந்து பெய்துவர அதனால் உலகம் நடைபெற்று வருதலால்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை உலகிற்குச் சாவாமருந்து என்று கருதப்பெறுந்தன்மையது.

உலகம் என்பது அதிலுள்ள உயிர்களைக் குறித்தலால் இங்கு இடவாகுபெயர். அமிழ்தம் என்றது சாவா மருந்தாகிய இருவகையுணவை. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசிதகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இருமருந்து எனப்பெறும்.

"இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" (புறம் 70). நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. ஆயினும், உயிர்கட்கெல்லாம் பிணிமூப்புச் சாக்காடிருத்தலால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கினவனைச் சாவினின்று தப்பினான் என்று கூறும் வழக்கைக் காண்க.

அமிழ்தம் என்னும் சொல் சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும்.

அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ் - அவிழ்து - அவிழ்தம் - அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம் "(மணி. 28: 116). அவிழ்து -
அமிழ்து - அமுது = சோறு, உணவு, நீர்.

நீரும் உணவாதலால் அமுதெனப் பெற்றது. அமிழ்தம் - அமுதம் = சோறு, நீர்.

மருமம் - (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு.

பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம் அமுது என்னும் சொற்களின் ஒருபுடையொப்புமையினாலும், அமுது என்னும் சொல்லும் பாலைக் குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால்.

அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை (மரணத்தை)த் தவிர்ப்பது என்று பொருளுறுத்தி, அதற்கேற்பத் தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங் கட்டிவிட்டனர் வடமொழியாளர்.

இங்ஙனங்கட்டினும், மீண்டும் அது தென்சொல் திரிபேயாதல் காண்க.

அல் (எதிர்மறை முன்னெட்டு) - அ. ஒ. நோ : நல் - ந. மடி - மரி - ம்ரு (வ.) - ம்ருத, ம்ருதி, ம்ருத்யு (சாவு).

தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவரமுதம் என்னும் இல்பொருளை உவமையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென உணர்க.

மு.வ உரை
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்) 
வானத்தில்  அமுதம்  அது  இருக்குதென்று
           வழிவழியாய்  முன்னோர்கள்  சொல்லித் தந்தார்
போனால்த்தான்  கிடைக்கும்  என்றும் அவரே  சொன்னார்
           பொய்யென்று  சிலர்  அதனை  எதிர்த்தும் நின்றார்
ஆனால்  நம்  வள்ளுவரோ  தெளிவு தந்தார்
           அறிவு  தந்தார  நந்தமையே  உணர வைத்தார
வான்  தானாய்  தீங்கின்றி  வழங்குகின்ற
           வளர் மழை தான்  உயிர்க்கெல்லாம்  அமுதமென்றார்

நீர்வள மேலாண்மை (நன்றி: கீற்று - மு.நாகேந்திர பிரபு)
விவரங்கள்
    எழுத்தாளர்: மு.நாகேந்திர பிரபு
    தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
    பிரிவு: புவி அறிவியல்
    வெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2014

நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் - 18
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; - 20
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே!
…………… இவண் தள்ளா தோரே! - 30 - புறநானூறு 18 (18-30)

இறுதிப் பொருள் : அதனால் வேந்தே! சிறிதும் புறம் தள்ளாது; நிலத்தில் பயிர்கள் செழித்து வளர நீர்ப்பெருக்கு இருக்க வேண்டும். எனவே நீர்நிலை பெருகுமாறு குளங்கள் போன்றவற்றை தோண்டி அமைப்பாயாக. இவ்வாறு செய்பவனே புகழ்பெற்ற மன்னனாக விளங்குவார்கள். பாடியவர் : புலவர் குட புலவியனார், பாடப்பெற்றவர் : தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

“வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோன் உயரும்” - ‘வரப்புயர’ - ஒளவையார் - பொருள்

“நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய என ஆளும் வேந்தே” - புறநானூறு 58:10

300மனித உடலானது 55% முதல் 78% வரையில் நீரால் ஆனது. இரத்தத்தில் 90% நீர் தான் உள்ளது. ஆண்கள் நாளொன்றுக்குக் குறைந்தது 2 லிட்டர் நீரும், பெண்கள் 2.7 லிட்டர் நீரும் குடிப்பது அவசியமானது. ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் நேஷனல் ரிஸேர்ச் கவுன்சில்’ 3.7 லிட்டர் நீரைப் பரிந்துரைக்கிறது. ‘ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க மற்றும் உடல்நலன் பேண என குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான்’ என்று ‘ஐக்கிய நாடுகள் சபை’ குறிக்கிறது.

தாவர வேர்த்தூவிகள் வேர் மற்றும் மண்ணிற்கு இடையே அயனிகளின் செறிவு வேறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன. இச்செறிவு வேறுபாட்டை நீக்க நீரானது மண்ணிலிருந்து வேருக்குள் செல்கிறது. இன்னொரு வகையாக செல்களில் நீர்மூலக் கூறுகள் ஆவியாதலினால் உருவாகும் ஓர் இழுவிசை வேர்களின் சைலத்திலிருந்து நீரை மிக உயரத்திற்கு மேலேற்றுகிறது. நீராவிப் போக்கானது வேரிலிருந்து நீர் மற்றும் கனிமப் பொருட்களை உறிஞ்சுவதற்கும், அவற்றினை இலைகள் வரை மேல்நோக்கிக் கடத்துவதற்கும் உதவுகிறது. வெப்பநிலையைச் சீராக்கிக்கொள்ள, கழிவை வெளியேற்ற, ஆற்றலை உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்ல மனித உயிர்களும், மரம் செடி கொடிகளும் நீரை உட்கொள்ளவும், உறிஞ்சவும் செய்கின்றன. நீர் உடலிலிருந்து மலம், சிறுநீர், வியர்வை, மூச்சுக்காற்று இவற்றின் மூலமாக வெளியேறுகிறது. ஒரு மனிதனால் தண்ணீர் இல்லாமல் 7 நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருக்க முடியும். உணவுப் பொருட்களில் பால் 87 சதவீதம், உருளைக்கிழங்கு 75 சதவீதம், முட்டை 73 சதவீதம் என எல்லாமும் ஒரு குறிப்பிட்ட சதவீத நீரைத் தன்னுள்ளாக கொண்டுள்ளன.

‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனம், சரத்து - 25’-ன் படி “ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவனது குடும்பத்தின் சுகாதாரமான வாழ்க்கை மேம்படவும் அடிப்படையான ஒரே தேவை - சுத்தமான தண்ணீர். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் அடிப்படை உரிமையாகும்”. ‘ஆசிய மனித உரிமைகள் சாசனம் - 1998, பிரிவு 7:1’-ன் படி “ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கைக்கான அடிப்படை தேவையைப் பெறுவதற்கும், சுரண்டல் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு பெறவும் உரிமை உடையவர்கள். கல்வி அறிவு பெறவும், உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் வீடு ஆகியன பெறவும், நலமான இருத்தலுக்கான மருத்துவ உதவி பெறவும் உரிமை உண்டு. தொழில்நுட்பம் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எல்லாத் தனி மனிதர்களுக்கும், மனித குழுக்களுக்கும் உரிமை உண்டு”. ‘இந்திய அரசியலமைப்பின்’படி “தண்ணீர் பொதுச்சொத்து. சாதி, மத, பொருளாதார, இனப் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் அதைப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது”. ‘ஐ.நா சபையின் முன்னால் தலைவர் கோபி அன்னன்’ அளித்த செய்தி ஒன்றில் “தண்ணீரைப் பயன்படுத்துவோர் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படும்போது, காசு இல்லை என்ற காரணத்தால் ஒருவன் தாகத்தால் தவித்துச் சாக வேண்டிய துர்பாக்கியம் நேர்ந்துவிடக் கூடாது. ஆனால், இன்றைய உலகச் சூழ்நிலை அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகக்குறைந்த வருமானமுள்ள மக்கள் தான் தண்ணீருக்கு அதிக விலை தர வேண்டி உள்ளது”.

வனமாக விளங்கும் மலைகளில் சருகுகள் நிறைந்து காணப்படும். சருகுகள் பெய்யும் மழையை உள்வாங்கி சிறிது சிறிதாகக் கசிகிறது. இந்த சொட்டுக்கள் ஒன்று சேர்ந்து நீரோடையாகி அவை இணைந்து அருவியாய் சமவெளியை அடைந்து நதியாகிறது. மேலும் நதிகள் பனி உருகுவதாலும் பிறக்கின்றன. சரிவை ஒட்டி ஓடும் வேகம் இருக்கிறது. நீரில் கார்பன்-டை-ஆக்ஸைடு கரைவதால் ஏற்படும் சிறிய அளவு கார்பானிக் அமிலம் பாறைகளையும் கரைக்கும் திறன் உடையது. ஓடும் பாதையில் இருக்கும் மணலையும், பாறைகளையும் அரித்துவிடுவதால் படுகைகள் பிறக்கின்றன. நீரின் தன்மை மட்டத்தில் பரவி இருப்பது, நிலத்தின் சிறு கீறல் கூட நாளடைவில் ஆற்றின் வழித்தடமாக மாற்றம் பெறலாம்.

நாடாளுமன்ற (2006) செய்திக் குறிப்பில் “இந்தியாவில் நீரியல் சுழ‌ற்சி மூலம் கிடைக்கும் மொத்த மழை அளவு 4 இலட்சம் கோடி கனமீட்டராகும். அதில் 1,12,300 கோடி கனமீட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்கிறது. ‘தமிழக பொதுப்பணித்துறை’ செய்திக் குறிப்பில் “மழை மூலம் பெறப்படும் நீரில் 170 டி.எம்.சி. (1 டி.எம்.சி = ஆயிரம் மில்லியன் கன அடி நீர்) தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது” என்கிறது. தமிழக அரசு 2009- ல் முன்வைத்த ‘வெள்ள நீர் கால்வாய்த் திட்டத்தின்’ செய்திக் குறிப்பில் “மழைக் காலங்களில் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது” என்று குறித்து இருக்கிறது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, ‘சொட்டு சொட்டாக நீர் சிந்துமானால் அதன் அளவு ஒரு நாளைக்கு 60 லிட்டர் என்ற அளவில் இருக்கும்’ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

‘இரண்டு கி.மீட்டர் பரப்பளவில் 6 குளங்கள் வெட்டிவிட்டேன்; இனி அதற்குள்ளாக விழும் அவ்வளவு தண்ணீரையும் சேர்க்கப்போகிறேன்’ என்று சொல்லுவது எவ்வளவு அபத்தமானதோ அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். தமிழகத்தைப் பொருத்தவரையில் இனி நதிநீரை நம்பி இருப்பது பயன் தராதது; அதற்கு மாற்றான வளம் தான் மழை வளம்.

நீரில் கொதித்தல் செயல் நீர் முழுமையாக நிகழ்வதாகவும், ஆவியாதல் என்பது நீரின் மேற்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகவும் இருக்கிறது. மழை நீர் ஆங்காங்கு குட்டைகளாகத் தேங்கிவிடுவதால் ஏற்படும் அதிகப்படியான ஆவியாகும் பரப்பைக் குறைக்க வேண்டும். நீர்பரப்பு குறையும்போது வெப்ப ஏற்பின் அளவு குறைந்து ஆவியாதலும் குறைகிறது. குழியான மற்றும் பரந்த பரப்பில் என இருநிலைகளிலும் வைக்கப்பட்ட சம அளவிலான நீரில் முதலில் ஆவியாவது பரந்த பரப்பிலான நீராகவே இருக்கும். இனி மழை நீருக்கு என்று தனியாக ஒரு வழித்தடத்தை உருவாக்க முடியாது. இருக்கும் ஒரே இணைப்பு சாக்கடைகள் தான். சாக்கடைத் தடங்களை மழை நீருக்குப் பயன்படுத்த முடிவு செய்து சாக்கடைகளை சாலையில் விட்டுவிடவும் முடியாது. ஒரு புது முயற்சி ‘இரண்டையும் இணைத்து நிலத்தடி நீராக மாற்றிப் பயன்படுத்தப் பார்ப்போம்’.

இயல்பான தட்ப வெப்ப நிலையில் நீரானது சுவையற்ற, மணமற்றதொரு திரவமாகும். குறைந்த அளவுகளில் நீர் நிறமற்றுத் தோன்றினாலும், நீரும் பனிக்கட்டியும் உள்ளார்ந்த வெளிர் நீல நிறத்தை உடையவை. நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது. உப்புக்கள், சர்க்கரைகள், அமிலங்கள், காரங்கள், வாயுக்களில் ஆக்சிஜன் மற்றும் கரியமில வாயு மற்றும் புரதங்கள், டி.என்.ஏ, கூட்டுச்சர்க்கரைகள் (பாலிசேக்கரைடுகள்) என செல்களின் அனைத்து கூறுகளும் நீரில் எளிதில் கரையும் தன்மையுடையனவாக இருக்கின்றன. நீர் ஒரு மிகச்சிறந்த கரைப்பான்; கரைக்கப்படும் பொருள் எதுவாயினும் நீர் முழுமைக்குமாக கரைகிறது. கரைக்கப்படும் பொருளின் அளவுக்கு ஏற்ப கரைக்கும் பொருள் ஆதிக்கத்தை இழக்கிறது. கடலில் கரைத்த பெருங்காயம் என்பது அதன் பரப்பின் வலிமையைப் பறைசாற்றுவதே. சாக்கடைகளை மட்டும் சேர்க்க போவதில்லை, அதோடு மழை நீரை அதிகமாக சேர்க்கப்போகிறோம். கூவம் நதியைக் கரைபுரண்டு ஓடச்செய்தால் அது ‘சாக்கடை’ என்ற பெயரை இழந்துவிடும். சமைத்ததில் உப்பு கொஞ்சம் அதிகமாய் போனால் உணவென்ன குப்பைக்கா போகிற‌து? அளவைக் குறைக்க கூடுதல் தண்ணீர்; அவ்வளவு தான். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளில் நிரம்பிய நீர் போக உபரி நீரும் சாக்கடைகள் வாயிலாக அருகில் உள்ள நீர்நிலைகளில் சேர்க்கப்பட வேண்டும். குடிநீருக்கு, விவசாயத்திற்கு, பிற தேவைகளுக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நீர்நிலைகள் பிரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்துள்ளன. அதே போன்றதொரு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீரை உறிஞ்சுவதில் ஒரு காய்ந்த மற்றும் ஈரமான பஞ்சுக்கு இடையேயான வித்தியாசம் உணர்த்திவிடும், இன்று மேற்கொள்ளும் பல முறைகள் நிரந்தரத் தீர்வாகாது என்பதற்கு. இந்த வித்தியாசம் இல்லாமல் இருந்துவிடுமானால், என்றைக்கும் ஏரி குளங்கள் வற்றியே இருக்கும். எந்த ஒரு பருப்பொருளும் தனக்கென தனித்த நீர் ஏற்புத்திறனைக் கொண்டிருக்கும். பூமியிலிருந்து எடுக்கப்படும்போது தான் அதில் நிரப்பப்படுவதற்கு இடம் கிடைக்கும். நிலத்துக்குக் கீழே 250 அடி ஆழத்தில் நீர் கிடைத்தாலும் ஊற்றும் நீரையெல்லாம் பூமி உடனே உறிஞ்சி விடாது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவது என்பது மிகச் சரியான அணுகுமுறை.

பொதுவாகவே பூமியின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் நிரம்பியது. அடிப்படையில் பாதுகாப்பானதும், எளிமையானதும் என்பதால் பள்ளமான பகுதிகள் கண்டறியப்பட்டு அவைகள் நீர்நிலைகளாக மாற்றப்பட வேண்டும்.

“அறையும் பொறையும் மணந்த தலைய
எண்ணான் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர் சிறுகுளம்………” - புறநானூறு 118 : 1-3 வரிகள்
பொருள் : பள்ளமான பகுதிகளே அன்றி அறைகளையும், பொறைகளையும் இடையிடையே கரையாக பிறை வடிவில் குளம் அமைத்துள்ள பாங்கு.

“கான்யாற்(று) அடைகரை ஊர் இனி(து)…......” - இனியவை நாற்பது - 4
பொருள் : ஆற்றுநீர் அடைகரைக்கண் உள்ள ஊர் வாழ்வதற்கு இனிது.

“குளந்தொட்டு வளம்பெருக்கிப்” - 284 - பட்டினப்பாலை
பொருள் : தூர்ந்துபோன குளங்களைத் தூர்வாறி நீர்வளம் பெருக்கி நாட்டின் செல்வ வளத்தைப் பெருக செய்தான். பாடியவர் : கடியலூர் உருத்திரங்கண்ணனார், பாடப்பட்டதன் பொருள் : சோழன் செய்த சிறப்பு.

நீர்நிலைகளின் கரைகளைக் கான்கிரிட் கொண்டு பலப்படுத்துவதை விடவும் வண்டல் மண், மணல் மற்றும் களிமண் (1:3:2) என்ற விகிதத்தில் அமைப்பதும்; அதன் உச்சியை அகலப்படுத்தி மரம், செடிகளை வளர்ப்பதும் கரையைப் பலமுள்ளதாகவும், வேகமாக நிலத்தடி நீராக மாற வாய்ப்புள்ளதுமான முறையாகும்.

முதல் நிலை சுத்திகரிப்பில் சிறியது பெரியதான மூன்றடுக்கு சல்லடைப் பரப்பில் கழிவுநீரை ஓடவிட்டு அதன் கடைசியில் சிறிய அளவிலான வலைப்பின்னலை 450 குறுக்காக அமைத்து அதில் எஞ்சியவை நீர்நிலைக்கு வெளியே சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்த வேண்டும். வண்டல் மண்ணில் 10-40 சதவீதம் வரை நுண்துளைகள் உள்ளன. சராசரியாக 100 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் உள்ள மணல்பரப்பானது தனக்குள் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் திறன் கொண்டது. களிமண் பரப்பில் நீர் கசிவது மெதுவாக இருக்கும். குப்பைக் கூள‌ங்களோ, பாசிகளோ அல்லது நீர்த் தாவரங்களோ மேற்பரப்பை மூடி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தெளிந்த வண்ணம் இருக்கும்போது நீர்த் தாவரங்கள் சூரிய ஒளியைப் பெற்று நீருக்குள்ளேயே வாழ முடிகிறது. ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் என எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்று நிரம்பும்போது அதன் உபரி நீர் மற்றொன்றை அடைய வழி ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைக்கான வழித்தடங்களைச் சென்டிமீட்டர் சென்டிமீட்டராக ஆழப்படுத்திக்கொண்டே போக வேண்டும் என்று அறிவுரையெல்லாம் சொல்லப்போவதில்லை. இயற்கை அதை ஏற்கனவே நேர்த்தியாக செய்துவிட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழை நீர்நிலைகளைச் சென்று அடைவதில் செயற்கையாக தடைசெய்த வழிகளைக் களைந்துவிட்டால் போதும்.

நீர்நிலைகளை ஒட்டி ஆழ்துளைக் கிணறு அமைத்து அதிலிருந்து நீர் எடுத்துப் பயன்படுத்த வேண்டும். தரிசாக விடப்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயம் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். மரம், செடி, கொடிகள் மண்ணை இலகாக்குகின்றன. அதனால் மேல்மட்ட நீர் எளிதாக உரிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது. ஆறுகளிலிருந்து மணல் அள்ளுவதற்கு மாற்றாக கடலிலிருந்து அள்ளுவதும், ஆற்றின் கழிமுகங்களை ஒட்டி அள்ளுவதும் சரியானதாக இருக்கும். பிரம்மாண்டமான அளவுக்கு ஆழப்படுத்தப்படுவதால் அதனை நீர்வழிப்பாதைகளாகவும் பயன்படுத்த முடியும். நதிகளுக்கு குறுக்காக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். திடக்கழிவுகளைப் பெருக்கி குவிப்பதற்கு மாற்றாக பொறுக்கி எடுத்து மறுசுழ‌ற்சிக்கு உற்படுத்த வேண்டும். திறந்த முறை சாக்கடை என்பது பாதாள சாக்கடைகளை விட கையாள சரியானது.

பெட்டாஷ் படிகாரமும், சுண்ணாம்பும் சேர்க்கப்படும்போது அவை நீரில் உள்ள மாசுப்பொருட்களைத் திரித்துவிடுகின்றன. இதனால் கசடுகள் ஒன்று சேர்ந்து துகள்களாகி நீர்க்கலனின் அடியில் படிந்துவிடுகின்றன. தேத்தாங்கொட்டை கன உலோகங்களை (காட்மீயம், காரியம்) பிரிக்கிறது மற்றும் அவசியமில்லாத தாதுக்களை நீக்குகிறது. வண்டல் படிமமானது துரு மற்றும் கால்சியம் கார்பனேட் உள்ளிட்ட துகள்களை நீக்குகிறது. கழிவு நீரில் இருக்கும் உப்பை வேலிக்காத்தான் முள் பிரித்தெடுக்கிறது. ரோகுக்கெண்டை, மிர்கால்கெண்டை மற்றும் கட்லாகெண்டை வகையான மீன்கள் கழிவு நீரில் உள்ள கசடுகளை உண்டு வளர்கின்றன. வாழைப்பழ தோல் உலோக நச்சுப் பொருட்களைத் தன்னகத்தே உறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதாக்கதிர்கள் பாக்டீரியா, ஈகோலி வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் தன்மை கொண்டது. திலேப்பியா மொசாம்பிகா, கம்பூசியா, சன்னா ஸ்ட்ரையேட்டஸ் வகையான மீன்கள் மனிதர்களுக்கு நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. வாத்துகள் நீர்நிலைகளில் மீன் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் பூச்சி மற்றும் நத்தையினங்களை உட்கொள்கின்றன.

குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும், மற்ற பயன்பாடுகளில் 1-2 பார்ட் பெர் மில்லியன் (PPM) என்ற அளவிலும் பயன்படுத்தப்படும் குளோரின் நோய் ஏற்படுத்தும் உயிரிகளைக் கொல்கிறது. முருங்கை விதை நீரில் உள்ள தேவையற்ற பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்ற நுண்ணியிர்களையும் மற்றும் வேதிப்பொருட்களை அழிக்கிறது. உமியின் சாம்பல் (Activated Carbon) நோய் உண்டாக்கும் கிரிமிகளை அழித்து நீரைத் தூய்மைப்படுத்துகிறது. அவரை விதை நீரின் கலங்கல் தன்மையை நீக்குகிறது. ஒரு கார்பன் (கரி) வடிகட்டி கரிம வேதிப்பொருட்களை மற்றும் குளோரினை நீக்குகிறது. வெட்டி வேர் நீரில் உள்ள துர்நாற்றத்தை நீக்குகிறது. கரி (குறிப்பாக சவுக்கு) நீரில் உள்ள நச்சு வாயுக்களை மற்றும் துர்நாற்றத்தை உறிஞ்சுவதுடன் மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. பசுவின் சாணம் துர்நாற்றத்தைப் போக்குகிறது. தண்ணீரில் காணப்படும் நோய்பரப்பும் பாக்டீரியா கிருமிகளை தெளிவாக வடிகட்டி தண்ணீரைச் சுத்தப்படுத்தும் திறன் மணலுக்கு உண்டு. ஒரு இடத்தில் தேக்கி வைக்கப்படும் மணலின் அளவுக்கேற்ப அந்த இடத்தில் காணப்படும் தண்ணீர் மிகவும் தெளிவாகவும், நோய் தொற்று கிருமிகள் நீங்கியும் காணப்படும். வேம்பு வயிற்றுப் பூச்சியை நீக்குகிறது மற்றும் மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது.

‘மலம்’ என்பது செரிக்கப்படாத உணவே. ‘கழிவு’ என்று சொல்வதும் கூட ‘எஞ்சியது’ என்ற பொருளையே தரும். செரிமான‌ம் என்பது மூலக்கூறுகளைப் பிரித்து தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளும் உயிரியல் செயலே. ‘அசுத்தம்’ என்று சொல்வதெல்லாம் ‘சுத்தம்’ என்று சொல்லியதிலிருந்து வந்தது. ‘மலம்’ என்பது நேற்று சாப்பிட்டதன் ‘எச்சம்’; அது எப்படி அசுத்தமாகும்? மலமும், அழுகிய உடலும் உணவே என்பதை ஏற்க மனிதர்கள் வேண்டுமானால் மறுக்கலாம். மலத்தில் வாழும் புழுக்களும், வேறு சில உயிர்களும் அதனை அருவறுப்பு என்று ஒதுங்கி நிற்பதில்லை. தன் கழிவைத் தானே உண்பதில் பலனில்லை. காரணம் அந்த குறித்த உயிரைப் பொருத்தவரையில் மட்டும் அது வெறும் சக்கை. அதில் கிரகிக்க வேறு சில சத்துக்களும் இருக்கிறன. அதனால் தான் மற்ற உயிர்கள் அதை எடுத்துக்கொள்கின்றன. கழித்த உயிரினுக்கே அது வாசனையானால்; ஈர்க்கும் என்பதால் தான் ஒதுக்கும் நாற்றம் என்றாகி இருக்கிறது. ஒதுக்கப்படுவதும் ஏற்கப்படுவதும் கூட கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்தது. தான் உணவாக ஏற்றுக்கொண்ட ஒன்று கிடைக்காமல் போனது என்றானபின் வேறு ஏதோ ஒன்றைத் தன் உணவுப்பட்டியலில் எடுத்துக்கொள்கிறது உயிர். கொஞ்சம் தத்துவார்த்தமாக சொல்வதானால் அழகில்லை, அருவருப்பு, அசுத்தம் இப்படிப்பட்ட வார்த்தைகள் படைப்பில் இல்லை. கழிவுகள் எல்லாமே உணவாகிப்போகும் எனும்போது; ஏன் நீரில் கலந்திருக்கும் கழிவுகளை அவற்றை உண்ணும், உறிஞ்சும் உயிரினங்களை வளர்த்து நீக்கக்கூடாது? இயற்கை மிக மிக நேர்த்தியாக தன்னைக் கட்டமைத்து இருக்கிறது. கழிவுகளை இயற்கையின் வசம் விட்டு மறுசுழற்சி செய்வது தான் சரியான அணுகுமுறையே தவிர அதைத் தனிமைப்படுத்தி சேர்த்து வைப்பதெல்லாம் மடத்தனமே.

நடைமுறை கழிவு மேலாண்மை முறைகளில் ‘நிலத்தில் நிரப்புதல்’ (Land Fills) என்பது இராணுவம் தொடர்பான இடர்பாடுகளைத் தரும் கழிவுகளும், கதிர்வீச்சுக் கழிவுகளும் பாதுகாப்பாக பூமிக்கு அடியில் சேமிக்கப்படுவதாகும். நிலத்தடியில் உள்ள மிகவும் ஆழமான குழிகளுக்குள் பல்வேறு வேதிப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து குறுக்கு வினையில் ஈடுபடவிடாமல் மிக அதிக அளவில் கதிர்வீசும் திறன்கொண்ட கழிவுகள் தனித்தனியே சேமிக்கப்படுகின்றன. பின்னர் இக்குழிகள் காற்றும் நீரும் புகமுடியாத படிக்கு களிமண் கொண்டு மூடப்படுகின்றன. குழியினுள் ஏதாவது கசிவு ஏற்பட்டால் அதைச் சீர்செய்வதற்குக் கால்வாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து இக்குழிகள் கண்காணிக்கப்படுகிறது. ‘ஆழ்க்கிணறு பாய்ச்சல்’ (Deep Well Injection) முறையில் துகள்கள், துளைகள் கொண்ட மண்பரப்புடைய பூமியின் மிக ஆழத்துள், நிலத்தடி நீருக்கும் கீழே ஆழக்கிணறுகள் தோண்டப்பட்டு இடர்பாடுகள் தரும் திரவக்கழிவுகள் செலுத்தப்படுகின்றன. இவை மண்ணிலுள்ள துகள்கள் மற்றும் துளைகட்குள் நுழைந்து காலம் காலமாகத் தனிமைப் படுத்தப்பட்டு அப்படியே இருக்கும். ‘மேற்பரப்பில் மூடிவைத்தல்’ (Surface Impoundments) முறையில் தரையில் சிறுகுளங்கள் வெட்டப்பட்டு அவற்றினுள் சிறிதளவே வேதியக் கழிவுகளைக் கொண்ட ஏராளமான திரவக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. குளத்தின் தரைப்பகுதி நீர்க்கசிவு ஏற்படாவண்ணம் நன்கு பூசப்பட்டுவிடுவதால், நீர்க்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படும்போது, நீர் ஆவியாகிவிடும்; திடக்கழிவுகள் தரைப்பரப்பில் தொடர்ந்து படிந்துவிடும்.



‘எரித்து சாம்பலாக்கல்’ (Incineration) முறையில் மனித உடல் கழிவுகள், தூக்கி எறியப்படும் மருந்துகள், நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள், இரத்தம், சீழ், விலங்குகளின் கழிவுகள், நுண்ணுயிரியல் மற்றும் உயிரிய தொழில்நுட்பக் கழிவுகள் போன்ற இடர்ப்பாடு தரும் உயிரிய மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. ‘உயிரியத் தீர்வு (Bioremediation) முறையில் இயற்கையிலேயே காணப்படும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள், கன உலோகங்கள் போன்ற கழிவுகளைச் சிதைக்கவோ அல்லது உறிஞ்சிக்கொள்ளவோ அல்லது அதன் நச்சுத்தன்மையைக் குறைக்கவோ செய்கின்றன. தாவரத்தீர்வு முறையாக பல தாவரங்கள் மாசுக்களை ஒற்றி எடுத்துக்கொள்ள/ உறிஞ்சிக்கொள்ள பயன்படுகின்றன. மரபுப் பொறியியல் முறை மூலம் தூண்டப்படும் நுண்ணுயிரிகள் (Genetically Engineered Micro Organism) ஏராளமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு தீங்குதரும் அணுக்கதிர்களையும், பாதரசம், குரோமியம், காட்மியம் போன்ற கன உலோகங்களையும் நீக்க பயன்படுத்தப்படுகின்றன. ஜிப்ரல்லா பியூசேரியம் (Gibberella Fusarium) என்ற தாவரத்தின் மூலம் சயனைடுகள் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன. சூப்பர் பக் (Super Bug) என்று அழைக்கப்படும் சூடோமோனாஸ் (Pseudomonas) பாக்டீரியா பல்வேறு தீங்கு தரும் கூட்டுப்பொருட்களையும், எண்ணெய்க் கழிவுகளையும் சிதைக்கின்றன.

உயிரினங்கள் தனக்குத் தேவையான புரதம், நியூக்ளிக் அமிலத்தைத் தயாரிக்கத் தேவையான முக்கிய தனிமம் நைட்ரஜன். வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் இருந்தாலும் அவை அம்மோனியா, அமினோ அமிலங்கள் அல்லது நைட்ரேட்டுகளாக மாற்றப்படாதவரை உயிர்கள் நேரிடையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ‘நைட்ரஜன் நிலைநிறுத்தப்படுதலில்’ அஸோட்டோபாக்டர், ரைசோபியம் (வேர்முண்டு பாக்டீரியா), நீலப்பச்சைப் பாசிகளான ஆசிலட்டோலரியா, அனபீனா, நாஸ்டாக் வகை உயிரினங்களும்; ‘அம்மோனியாவை நிறுத்துவதில்’ பாசில்லஸ், ரமோஸஸ் வகை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற உயிரினங்களும்; ‘நைட்ரேட்டாதலில்’ நைட்ரோசோமோனாஸ், நைட்ரோபாக்டர் வகையான உயிர்களும்; ‘நைட்ரஜன் வெளியேற்றலில்’ சூடோமோனாஸ் என்ற உயிரினமும் பங்கெடுக்கிறன. மேலும் பாக்டீரியாக்கள் கார்பன், ஆக்சிஜன், மற்றும் சல்பர் போன்ற தனிமங்களின் சுழற்சிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இறந்த தாவர மற்றும் விலங்குகளின் உடலில் உள்ள சிக்கலான புரதங்களை அம்மோனியா, நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன. பாக்டீரியாக்கள் உயிரியல் துப்புரவாளர்களாகச் செயல்பட்டு கரிமச் சேர்மங்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கார்பன் மூலக்கூறுகள், கரியமில வாயுவாக மாற்றம் அடைவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. விண்வெளிப் பயணங்களில் வெளியிடப்படும் கரியமில வாயு, பிற கழிவுகளை நீக்கவும் மற்றும் சிறுநீரை சிதைக்கவும் குளோரெல்லா பைரெனோய்டோஸோ எனும் பாசி பயன்படுத்தப்படுகிறது.

ஸ்டெப்ரோமைசிஸ் கிரேசியஸ், பேசில்லஸ் சப்டிலிஸ் பாக்டீரியாக்கள் ‘ஸ்டெப்ரோ மைசின் பாசிட்ராசின்’ என்ற எதிர்மருந்தின் உற்பத்தியிலும்; பெனிசிலியம் நொட்டேட்டம், பெனிசிலியம் கிரைசோஜீனம் பாக்டீரியாக்கள் ‘பெனிசிலின்’ என்ற எதிர்மருந்தின் உற்பத்தியில் பயன்படுகிறது. பாசில்லஸ் மெகாதீரியம் என்ற பாக்டீரியா தேயிலை, புகையிலை, காப்பிக் கொட்டைகள், கோக்கோ ஆகியவற்றிற்கு ‘நொதித்தலின் மூலம் நறுமணத்தைக்’ கொடுக்கிறது. பேசில்லஸ் லேக்டிஸ் என்ற லாக்டிக் அமில பாக்டீரியா ‘பாலைத் தயிராக’ மாற்றுகிறது. ஆசட்டோபாக்டர் அசெட்டி என்ற பாக்டீரியா நொதித்தல் செயலால் ‘சர்க்கரைக் கரைசலிலிருந்து வினிகரைத்’ தயாரிக்கிறது. கிலாஸ்டிரிடியம் அசட்டோ பூட்டிலிக்கம் என்ற பாக்டீரியா ‘சர்க்கரை பாகிலிருந்து ஆல்கஹால் மற்றும் மீத்தைல் ஆல்கஹால்’ உற்பத்தி செய்கிறது. ஆஸ்பெர்ஜில்லஸ் நைகர் என்ற பூஞ்சை ‘நொதித்தலின் மூலம் ஆக்சாலிக் அமிலத்தை’ உற்பத்தி செய்கிறது. சாக்கடலுக்கு அடியில் உப்பை உணவாக உட்கொள்ளும் ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம், ட்யூனாலைலா எனும் நுண்ணுயிர்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளைத் தாமாக உற்பத்தி செய்து உணவைப் பெறுகின்றன. ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிர்கள் ஆக்சிஜன் அற்ற நிலையில் எடுத்துக்கொள்ளும் உணவிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன.

ஒரு உயிரின் வாழ்க்கைச் சூழல் இமயமலையின் உச்சியில் இருக்கிறதா? தார் பாலைவனத்தின் மேற்பரப்பில் இருக்கிறதா? இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் இருக்கிறதா? எங்கு இருந்தாலும்; இயற்கை சூழலுக்கு ஏற்ப உயிர்களை தகவமைத்துக்கொள்ள அனுமதித்து இருக்கிறது. கற்பனைக்கும் எட்டாத அளவிலும், வகையிலும் நுண்ணுயிர்கள் பூமியில் வாழ்கின்றன. படைப்பில் அவசியமற்றது என்று எதுவுமே இல்லை. பரிணாமத்தின் தொடக்க கால உயிரினங்களாக இருப்பதால், அவை தான் பரிணாமத்தின் அடுத்த நிலை உயிர்களுக்கு உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றன.

நீரை மின்னாற்பகுத்தலின் மூலம் 20000 சென்டிகிரேடு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும்போது தனித்தனி தனிமங்களாக பிரிந்துவிடுகிறது என்கிறது அறிவியல். மரங்களும் சுவாசத்திற்கு ஆக்சிஜனையே எடுத்துக்கொள்கின்றன. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதாக இருந்தால் அது காற்று வெளியிலிருந்து பெற முயலாது. ஒன்று தேவையானது என்றான போதே பரிணாம‌ம் நாளடைவில் அதை சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய தகவமைப்பை உருவாக்கியிருக்கும். மரங்கள் தன் உணவு உற்பத்திக்குத் தேவையான ஹைட்ரஜனை நீரிலிருந்து எடுத்துக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றிலிருந்து கார்பனை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஆக்சிஜனை வெளியிட்டு விடுகிறது. மரம் எவ்வளவு வெப்பத்தை செலவிடுகிறது, நீரிலிருந்து ஹைட்ரஜனை, கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றிலிருந்து கார்பனை பிரித்து எடுத்துக்கொள்ள?

நீர்வாழ் உயிரினங்கள் நீரில் உள்ள ஆக்சிஸனை எடுத்துக்கொண்டு எஞ்சிய ஹைட்ரஜனைக் காற்றுக்குமிழ்களாக வெளியிடுகிறன. கடல்வாழ் உயிரினங்கள் எவ்வளவு வெப்பத்தை செலவிடுகின்றன, நீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து எடுத்துக்கொள்ள? சிறுவயதில் மீன்தொட்டியில் ஒவ்வொரு முறை தண்ணீர் மாற்றும் போதும் நீர் காய்ந்து போன கண்ணாடியின் ஓரங்களைக் கடுப்புடன் தேய்த்தெடுத்த ஞாபகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. அவ்வளவு வேகத்தில் நீர் புற வெப்பநிலையால் ஆவியாகிப் போய்விடுவதற்கு வாய்ப்பே இல்லை. நீர் மூலக்கூறுகளுக்கிடையேயே சர்க்கரை மூலக்கூறு அளவில் மாற்றமேயில்லாமல் கலக்கக்கூடியதாகும் எனும்போது வாயு நிலையில் அதன் இடைவெளிகளை மேலும் பல மூலக்கூறுகள் நிரப்பவே செய்யும். இயற்கையான ஒரு சூழலில், ஒரு சேர்மத்தின் மூலக்கூறு சமன்பாடு அதை நீர்மமாக செயல்பட வைக்கும்போது; அந்த நீர்மமானது வாயுநிலையை ஏற்கும்போது கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாற்றத்தைக் கொண்டிருக்கக் கூடியதான ஒன்று மாற்றமேயில்லாமல் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஒன்றாக மாறி நிற்காது. அது இவ்விதம் மாறாத போது, இது அவ்விதம் ஆகாது. எந்த ஒரு தனிமமும் இன்னொரு தனிமமாக மாறக் கூடியதாக கூட இயற்கை தன்னைக் கட்டமைத்துக்கொண்டு இருக்கலாம். நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக அது நிஜமாக இருக்காது என்று மறுக்க முடியாது.

வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு உயிரின உலகத்திற்கு அதாவது பசுந்தாவரங்களுக்குள் ஒளிச்சேர்க்கை மூலம் கார்போஹைட்ரேட்டுகள் (உணவு) தயாரிப்பதற்காக நுழைகிறது. தாவர உண்ணிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் சிறிய, பெரிய ஊன் உண்ணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு உணவூட்ட நிலையிலும் சுவாசச் செயல்பாடுகள் கரியமில வாயுவை வளிமண்டலத்திற்குத் திருப்பி அனுப்புகின்றன. இறந்த கரிமப்பொருள்களின் சிதைவு, படிம எரிபொருள்கள் எரிதல் மூலமாகவும் கரியமில வாயு வளிமண்டலத்திற்குத் திரும்புகிறது. எல்லா உயிரினங்களும் கார்பன் அணுக்களால் கட்டமைப்பு ஆனவையாக இருக்கிறது. இயற்கையின் எந்த ஒரு கூறும் சுழ‌ற்சிக்கு உட்படாமல் அப்படியே இருக்கிறது என்று சொல்வதற்கில்லை. இங்கு எதுவுமே தீர்ந்து போகாது; காரணம் எதுவும் செலவாகாது. ஒரு துளி நீரும் கூட இந்தப் பிரபஞ்சத்தில் புதிதாக வெளியிருந்து வந்து சேர்வதில்லை/ பிறப்பதில்லை. அக்காலத்திலும் நீர் நிலைகள் இருந்தன; மக்கள் தங்களின் தேவைகளுக்கு அவைகளைத் தான் நாடினர். நீரியல் சுழற்சி என்பது பிரபஞ்ச விதிகளுள் ஒன்றானது என்றானபோதே, என்றோ ஒருவர் வாய் கொப்பளித்த நீர் ஒருநாள் குடிநீராகும் என்ற உண்மை விளங்கும். இந்த பூமி உயிர் தோற்றத்திலிருந்து எண்ணிடங்காத கோடி உயிர்களை தன் கருவில் சுமந்து இருக்கிறது. அவைகள் உண்டதில் எஞ்சியதும், உருமாறி மலமானதும் இங்கே தான் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். வீழும் மழைத்துளி தரையில் விழும் முன்னே பிடித்து வைக்கப்படுவதில்லை. கோடான கோடி உயிர்களுக்கு இந்த பூமி வாழ்விடமாக இருக்கிறது. 11 நவம்பர் 2013 அன்று பாண்டிச்சேரியில் அந்த குறித்த மாமரத்தில் காய்த்த மாங்காய் தான் கடைசி; அதோடு தீர்ந்துவிட்டது என்று ஏதும் கணக்கு கிடையாது. பிறந்த எல்லா உயிர்க்கும் இங்கு இடமுண்டு, உணவும் உண்டு.

“ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
…………… வாழ உலகினில் பெய்திடாய்” - திருப்பாவை - 4
பொருள் : கடல் நீர் முழவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம்.

கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழிலி………” - கார்நாற்பது - 33
பொருள் : கடல்நீரை மேகம் உட்கொள்கிறது.

“கார்என்று பேர்படைத்தாய் ககனத்(து) உறும்போது;
நீர் என்று பேர்படைத்தாய் நீன்நிலத்தில் உற்றதன்பின்;” - காலமேகப் புலவர்
பொருள் : ஆகாயத்தில் இருக்கும்போது இதற்கு மேகம் என்று பெயர். மழையாக பூமியில் விழுந்த பிறகு இதற்கு நீர் என்று பெயர்.

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று”
- திருக்குறள் : வான்சிறப்பு - குறள் - 11
பொருள்:மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம் என்றுணர வேண்டும்.

பார்க்கும் அளவிற்கே பிரச்சனை பூதாகரமானதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை அப்படியே பூதாகரமானதாக இருந்துவிட்டாலும் அதற்குத் தீர்வும் அதே அளவில் இருக்க வேண்டும் என்று இல்லை. தண்ணீர் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது; தண்ணீர் அரசியலாக்கப்பட்டுவிட்டது; இவையாவும் அதன் உண்மைத் தன்மையை மறைத்துவிட்டன. இந்த தேசம் நீருக்காக அடித்துக்கொண்டு சாகக்கூடாது. தேவையே இயக்கத்தைத் தூண்டி விடுகிறது; ஆதனால் இயக்கம் தேவையை நோக்கியதாக இருக்கிறது. உயிர்த் தோற்றத்தையும், பரிணாமத்தையும் தொடங்கி வைத்தது மற்றவற்றிலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும். ‘இப்போது புலி புல்லைத் தின்னப்போகிறதா’ இல்லை ‘எனக்கான உணவு இல்லை’ என்று சொல்லி மடியப்போகிறதா? புலி நிச்சயமாகப் புல்லைத் தின்னும்; காரணம் அதைத் தான் இன்று பரிணாமம் என்ற பெயரில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஓர் இடத்தில் உயிர் வாழ்க்கை இருக்கிறது எனும்போதே வாழும் அவ்வுயிர் ஏதோ வளம் ஒன்றைப் பற்றி வாழ்கிறது என்பதையே குறிக்கிறது. இயற்கையை உணரும்போது நடப்பவை எல்லாம் சரியாக நடக்கிறது என்ற நம்பிக்கைப் பிறக்கிறது. இயற்கையை எல்லைக்குள் வைத்து மதிப்பிடாதீர்கள். நியதி என்பதும், எல்லை என்பதும் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது. இயற்கை நியதிக்கு உட்பட்டதாக இருக்கிறது; ஆனால் எல்லைக்குட்பட்டதாக இல்லை. நீ எவ்வளவு பெரிய முட்டாளாகவும் இரு, அதற்கு ஈடாக எந்த முட்டாள்தனத்தையும் கூட செய்துவிட்டுப் போ. இயற்கை தன் நிலையில் அதை சரிசெய்துவிடும். ஒன்றை அதன் இயல்பிலிருந்து மாற்றுவதற்குத் தான் முயற்சி தேவையே தவிர மீண்டும் அது தன் இயல்பிற்குத் திரும்ப முயற்சி தேவையில்லை. இயற்கையின் எந்தவொரு கூறையும் வரையறைக்குள் கொண்டு வந்து விட்டாலும் அதற்கு அடங்காததாக ஒன்றும் அதில் அடங்கி இருக்கிறது.

மேற்கோள் நூல்கள் : சமச்சீர் கல்வி புத்தகங்கள் : 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை மற்றும் 11 & 12.

- மு.நாகேந்திர பிரபு (nagendraprabu@gmail.com) 

வெப்பமயமாகும் பூமி  (நன்றி: ரமேஷ் - இலக்கிய சோலை)
கரியமிலவாயுவின் அளவு அதிகரித்துக்கொண்டே போக, இந்த பூமியானது நாளுக்கு நாள் வெப்பமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், உலகெங்கும் கால நிலைகள் கடுமையாக மாறி வருகின்றன. பருவம் பொய்த்துப் போகிறது என்று நொந்துகொள்வதில் அர்த்தம் இல்லை. எவ்வளவு நல்லவர்கள் இருந்தாலும் மாதம் மும்மாரி பொழியாமல் போகும்.

மழை இல்லாவிட்டால் அதன் கொடுமை என்னவென்பதை 1983-1985 வரை எத்தியோப்பியாவில் தலைவிரித்தாடிய பஞ்சம் பற்றிப் படித்தால் புரியும். இதனால், இறந்த மனித உயிர்களின் எண்ணிக்கை சுமார் 400,000. உணவில்லாமல் சாவு நடப்பது இந்த மனித குலத்திற்கே நேர்ந்த பேரவலம்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

என்று சொன்ன பாரதி பார்த்திருந்தால் என்ன பாடியிருப்பான்?

2011-ல் சோமாலியாவில் நிலவிய பஞ்சத்திற்கு மூலகாரணம் உலக வெப்பமயமாக்கம்தான் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். இனி வரும் காலங்களில் காற்றிலுள்ள கரியமிலவாயுவின் தாக்கத்தை கட்டுப் படுத்தினாலொழிய அங்கு இருக்கும் பஞ்சத்தை தவிர்ப்பது இயலாதது என்றும் கூறுகிறார்கள்.

வானம் பொய்க்காமல் குறித்த காலத்தில் மழை பெய்ய வேண்டுமென்றால், பருவ நிலை அபரிமிதமாக மாறக்கூடாது. அப்படி மாறாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்பமயமாக்கலைத் தடுக்க வேண்டும். புவி வெப்பமயமாக்கலைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். அதுதான் ஒரே வழி.



அப்படி இல்லாத சூழ்நிலை விஞ்ஞானிகள் கண்டறிந்தபடி பஞ்சத்திற்கு அடிகோலும். பட்டினிச்சாவுகளைத் தடுக்கும் ஒரே வழி தேவையான அளவுக்கு உணவுப் பொருள்களை விளைவிப்பதுதான். அதனால், உயிர் வாழ உதவும் உணவுதான் நமக்கு அமிழ்தம்.  அந்த அமிழ்தத்தை தருவது பொய்யா மழை.


புவி வெப்பமயமாக்கலை விஞ்ஞானப் பூர்வமாக விளக்காவிட்டலும், அதன் தன்மையை அன்றே புரிந்து சொன்னவன் நம் செந்நாப்போதன். அவன் சொல்லுகிறான்;

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

வானத்தில் மேகமாய் நின்று, பொய்யாமல் பெய்து, உலகத்துக்கு கொடுத்து வரும் காரணத்தால், மழையை அமிழ்தமாக உணரலாம்.

உலகம் நிலைபெற வேண்டுமென்றால் உணவும், தண்ணீரும் அவசியம். அந்த இரண்டையும் தவறாமல் கொடுப்பது வானத்திலிருந்து பொய்யாமல் பெய்யும் மழை. அந்த மழைதான் நம்மை உணவின்றி சாகாமல் வாழச் செய்யும் அமிழ்தம். அதை உணருவோம் நாம்.

நின்று என்றால் பொய்யாமல் என்று அர்த்தம். இன்றைய சூழ்நிலையில் மரங்கள் இருந்தால்தான் மழை நின்று பெய்யும். அதனால் மரங்களை வளர்ப்போம் மழை பெறுவோம்.

English Meaning - As I taught a kid - Rajesh
The clouds in the sky stop and shower rain upon this world. Thereby, all the living organisms and humans are able to consume water, grew crops and consume food. Hence rain is realized/felt as nectar. Because, If the clouds stop for even one or few seasons and doesn't rain, it will result in drought. once all the food stocks exhaust, no living organism can survive. 

Questions that I ask to the kid
Is rain considered as nectar? Why?