Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_017. Show all posts
Showing posts with label Athikaaram_017. Show all posts

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்

குறள் 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அழுக்கு மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரியமாசுபடிந்தஆடை; மலசலாதிகள்; பிள்ளைப்பேற்றின்பின்வடியும்ஊனீர்; ஆமைவகை.

அற்று அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

அகன்றாரும் - அகன்று - அகலுதல் - நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல்

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

அஃது  - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

இல்லார் - இல்லாதவர்

பெருக்கத்தின் - பெருக்கம் - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு.

தீர்ந்தாரும்  - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
பொறாமை இருந்தும் உயர்ந்தாரும் இல்லை அதுப்போல பொறாமை இன்றி இருந்தும் தாழ்ந்தோரும் இல்லை என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

பொறாமை இருப்பவர்கள் வாழ்வது போல் தோன்றினாலும், எல்லோர் வாயிலும் வீழ்ந்து எழுவார்களே அல்லாது, அவர்கள் சமூகத்தில் ஒரு உயர்ந்த அளவில் வைக்க சமூகத்தினர் ஒப்பார்.  அதேபோல, பொறாமை என்னும் தீக்குணம் அற்றவர்கள் செல்வங்கள் இல்லாது வரியராய் தாழ்நிலையிலேயே இருப்பர் என்றும் கூறமுடியாது. 

கம்பராமாயண ஆரணியகாண்டத்தில், சூர்பனகை சூழ்ச்சிப்படலத்தில், இராவணன் சந்திரனைப்பார்த்து கூறுவதாக உள்ளபாடலில், “மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால், வெற்றி ஆகவற்று ஆமோ?" என்கிறார் கம்பர். பிறர் வளம் கண்டு இங்ஙனம் சிதைவுற்றால் வென்று உயர்தல் இயலுவதாகுமோ? என்பதால் அழுக்காறு உடையவர்களுக்கு ஆக்கமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறான்.

பொறாமை குணத்தோர் வாழ்வது போல் தோன்றினாலும் வீழ்ந்தாரே, அக்குணம் அற்றவர் வீழ்ந்தது போல தோன்றினாலும் வாழ்வாரே என்பதே இக்குறளின் சுருக்கக் கருத்து.

மேலும்: அஷோக் உரை 

ஒப்புமை
”மாற்றார்செல்வம் கண்டழிந்தால் வெற்றியாக வற்றாமோ” (கம்ப.மாரீச.115)

பரிமேலழகர் உரை
அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.

மு.வரதராசனார் உரை
பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.

Thirukkural - Management - Not Being Envious
A person who is envious of others cannot become an acceptable person. According to Valluvar, no person who is envious of others has succeeded and there is no person who is not envious of others has failed, as in Kural 170.

None has gained through envy, 
Nor the unenvious ever lost.

Your becoming acceptable to others depends on your not being envious. Envy and nobility are incompatible. They do not go hand in glove. If we gain envy, we will lose many noble things in our life. If we lose envy, we will gain many noble things in our life.


English Meaning - As I taught a kid - Rajesh
An envious person does not attain glory and is not considered an acceptable person. There is no (noble) person who has no envy who has fallen from glory. 

Questions that I ask to the kid
Can a jealous person attain glory? 

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

குறள் 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
அவ்வித்து - அவ்வி-த்தல் - avvi-   11 v. intr. 1. To become intolerant, impatient; பொறுமையொழிதல்.அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 2. To pervert the mind; மனத்தைக் கோணச்செய்தல். (குறள்,167, உரை )  

அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

உடையானைச் - உடையவர், செல்வம் கொண்டவர்கள்

செய்யவள் - செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார்.

தவ்வையைக் - தவ்வை - தாய்; தமக்கை; மூதேவி.

காட்டி - காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.

விடும் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
பிறருடைய செல்வம் புகழ் மகிழ்ச்சி நிம்மதி ஆகியவற்றை கண்டு சற்றும் பொறுக்கமுடியாமல் ஒருவர் பொறாமை படுவார் என்றால் அவருடன் இருக்கும் (செல்வத்தை கொடுக்கும்) திருமகள் அவனை போலவே பொறுமை இழந்து அவனை விட்டு வெளியேறுவாள். வெளியேறுவது மட்டும் இன்றி அவனுக்கு ஏற்றவள் அவளுடைய அக்காள் மூதேவி (தரித்திர நாராயணி) தான் என்று மூதேவியை அவனிடம் விட்டுவிட்டுச் செல்வாள். மூதேவி வந்தால் அவனுடைய செல்வம் எல்லாம் போய் விடும். தரித்திரம் வளரும். மன அமைதி குன்றிவிடும். 

ஏனெனில் திருமகள் அவனுக்கு செல்வத்தை கொடுத்தாள் ஆனால் அவனுக்கோ அது போதவில்லை. அவனுக்கு பிறர் செல்வத்தின் மீது பொறாமை. இவ்வளவுக்கு செல்வம் கொடுத்தாலும் அவனுக்கு போதவில்லை. மனம் நிறைவடையவில்லை. நிம்மதி கொள்ளவில்லை. ஆதலால் அவனுடன் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே சரி என்று மூட்டையை கட்டிவிடுவாள். அவன் செல்வமும் அழிந்துவிடும். 

ஆதலால் பொறாமை கொள்ளாதே என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

அப்படியென்றால் வறுமையில் இருப்பவர்கள் பொறாமை கொள்ளலாமா? வீட்டிற்கு வந்தவள் பொறாமையை கண்ட உடனே சற்றும் பொறுக்காமல் அவனைவிட்டு விலகி சென்றுவிட்டாள். அப்படியிருப்பின், வறுமையில் இருப்பவனிடம் பொறாமை இருப்பதை கண்டால் அவள் எப்படி உள்ளே வருவாள். வரவே மாட்டாள்.

மேலும்:
தவ்வை என்ற சொல்லை இளங்கோ, வள்ளுவரைத்தவிர வேறு யாரும் சொல்லாடல் செய்ததாகத் தெரியவில்லை.  தகவலாழியாம் இணயத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள். மூதேவி என்பவள் ஸ்ரீதேவிக்கு முன் பார்க்கடலில் தோன்றிய மூத்தோள், முன்னவரை குறிக்கும் “ஜேஷ்டா” என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பிடப்படுபவள். சங்க இலக்கியங்களில் மாமுகடி, காக்கைக் கொடியோள், பழையோள் என்று பதினான்கு விதப்பெயர்கள் உண்டென்று ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி என்பவர் கூறுகிறார். அவர் பழனி அருகிலுள்ள மானூரில் உள்ள சிவன்கோவில் வெளிச்சுற்றில் இவளுக்கும், இவளது மகன் குளிகன், மகள் மாந்தி இவர்களுக்குச் சிலைகள் உண்டு என்கிறார்.  இதில் காக்கை கொடி இடதுபுறம் திரும்பி இருத்தல், கிரீட மகுடம், மூதேவி மட்டும் பூணூல் அணியாதிருத்தல் ஆகியவை சிறப்பம்சம். மூவரும் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளனர். திருவள்ளுவர், அவ்வையார் பாடல்களில், சோம்பலின் அம்சமாக கூறப்பட்ட சூழலில் மூதேவி வழிபாடு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இளங்கோவடிகளும் தவ்வையை, தமக்கை, மூத்தவள் என்ற பொருளிலேயே கையாண்டிருக்கிறார்.

சமணர்கள் அவ்வை என்ற சொல்லைப் பெண்துறவிகளைக் குறிக்கச் சொல்லுவார்கள். அவ்வையராயினீர் என்று மணிமேகலையில் ஓரிடத்தில் சாத்தன் எழுதுகிறார். துறவிகள் கைகளில் ஓடேந்தி பிச்சை எடுப்பவர்கள் என்பதனால் பிச்சையெடுக்கச் செய்திடுவாள் என்று கொள்ளலாம். ஆனால் பொறாமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகையால், அதை பிச்சையெடுக்கும் பெண்துறவிகளுக்கு ஒப்பாக கூறியிருக்க முடியாது.

இணையத்தில் பொன். சரவணன் என்கிற தமிழாராய்ச்சியாளர் ஒரு வேறுபட்ட சிந்தனையை முன்வைக்கிறார். தவ்வை என்ற சொல்லுக்குப் பதிலாக கவ்வை என்ற சொல்லை இட்டு, “பேராசையால் காழ்ப்புணர்ச்சி உடையவனை அவனது இல்லாளின் ஆரவார ஒலியே காட்டிக் கொடுத்து விடும்” என்கிறார். செய்யவள் என்பதற்கு மனையாள் என்றம் கவ்வை என்பதற்கு ஆரவார ஒலி (சண்டையில் மிகுந்த குரல்) என்றும் பொருள் கொண்டு விளக்குகிறார். 

வள்ளுவரின் சமயச் சார்பின்மையை நிறுவ இவர் செய்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே எனினும், பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியகள் செய்த உரை பொருத்தமாகத்தான் உள்ளது. 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
கொடுப்பது - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை

அழுக்கு - மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரியமாசுபடிந்தஆடை; மலசலாதிகள்; பிள்ளைப்பேற்றின்பின்வடியும்ஊனீர்; ஆமைவகை.

அறுப்பான் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

உடுப்பதூஉம் -  உடு-த்தல் - uṭu-   11 v. tr. [K. M. uḍu.] 1.To put on, as clothes; ஆடைமுதலியன தரித்தல் பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264). 2. To surround,encircle; சூழ்தல் அருங்குறும்புடுத்த கானப்பேரெயில்(புறநா. 21).  

உண்பதூஉம்  - உண்ணுதல் -  உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

இன்றிக் - இல்லாமல்.

கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
பிறர் இன்னொருத்தருக்கு கொடுப்பதை கண்டு பொறாமை பட்டு அதனை தடுப்பான் என்றால் அவன் மட்டும் அல்ல அவனுடைய சுற்றத்திற்கு உடுத்த ஆடையும் உண்ண உணவும் இன்றி கெட்டுப்போகும் அவனுடைய குடும்பத்தின் வாழ்வு. 

பொறாமைப்படுவது மிகக் கீழான குணமாகும். பிறர்க்கு உதவி செய்வதை தடுப்பது மாபெரும் குற்றம் என்பதை வலியுறுத்தவே பொறாமைப்படுபவன் மட்டும் அல்ல அவன் சுற்றமும் சேர்ந்து கெட்டுப்போகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

கம்ப இராமாயணத்தில் வேள்விப்படலத்தில் (33), இராமனுக்கு மகாபலியின் கதையைச் சொல்லும் விசுவாமித்திரர், மகாபலி தன்னுடைய குலத்துக்கு ஆசிரியனாம் சுக்கிராச்சாரியாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.
“எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!”
பெருந்தன்மை இல்லாத  சுக்கிரனே, நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர் ஒருவர் பொருளை  எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ? ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே! உன்னைச்  சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது, உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல் விடுகின்றாய் என்பதை அறிவாயாக என்கிறான் மகாபலி. வள்ளுவனின் குறள் கருத்துக்களை குறள் சொல்லும் சொற்களிலேயே கம்பன் வெகு பொருத்தமாக பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.

ஒப்புமை
குறல் 1079

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

குறள் 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

உடையார்க்கு - உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்

ஒன்னார் - பகைவர்

வழுக்கியும் - வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல்.

கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை.

ஈன்பது - ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்-

முழுப்பொருள்
அழுக்காறு என்னும் பொறாமை ஒன்றே போதும் ஒருவருக்கு வேறு பகை தேவையில்லை. ஏனெனில் “தன்வினைத் தன்னைச் சுடும்” என்ற சொல்வழக்கு போன்று, பிறர்மேல் ஒருவர் கொள்ளும் பொறாமையானது, மிக்கக் கெடுதலைத் தனக்கே செய்துகொள்ளும். ஏன் பொறாமை ஒன்றே போதும்? பகைவர் கூட நமக்கு மனம் மாற்றம் அடைந்து தீமை தராமல் இருந்து விடலாம். ஆனால் பொறாமை நமக்கு கெடுதலை தராமல் ஓயாது. ஆதலால் பொறாமை ஒரு பொல்லாத குணம்.

“அவ்வியம் பேசேல்” என்பது ஒளவையின் வாக்கு. “அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்” என்பார் திருமூலர் திருமந்திரத்தில். கம்பர் “அவ்வியம் நீத்து உயர்ந்தமனது அருந்தவனைக் கொணர்ந்து” என்று கலைக்கோட்டு முனிவரைப் (ரிஷியச்ருங்கர்) பற்றி திரு அவதாரப் படலத்திலே கூறுவான்.  அவ்வியம் என்ற சொல் குறிப்பது பொறாமையைத்தான்.

மேலும்: அஷோக் உரை 

ஒப்புமை
”அடுப்ப வரும்பழி செய்ஞ்ஞரு மல்லர்
கொடுப்பவர் முன்பு கொடேலென நின்று
தடுப்பவ ரேபகை தம்மையு மன்னர்
கெடுப்பவ ரன்னதோர் கேடிலை யென்றான்” (கம்ப.வேள்விப் 31)

பரிமேலழகர் உரை
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.).

மணக்குடவர் உரை
அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

Thirukkural - Management - Not Being Envious
The enemy is within is a proverbially accepted statement. A person's personal quality either helps him succeed or forces him to fail. If a person possesses the quality of envy in him, he does not need any enemy to destroy him. His envious quality is enough to destroy him, warns Kural 165.

The envious need no other foes
Their envy is enough

The best self-defense is to defend yourself from your envious feeling. A person cannot have strong external security to protect him from his negative qualities. He has to safeguard himself from himself. Instead of trying to safeguard yourself from others, learn to safeguard yourself from your most destructive quality, that is., envy.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
அழுக்காறு  - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

ஆற்றின் -  ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அல்லவை - தீயவை; பயனின்மை; மற்றவை ; அல்லாதவற்றை

செய்யார் - பகைவர்; செய்யமாட்டார்கள்

இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை.

படு - (வி)படுத்துக்கொள்; விழு.

பாக்கு -  அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும்வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பாக்குக்குப்பதிலாகப்பயன்படும்பட்டையையுடையஒருசெடிவகை.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

முழுப்பொருள்
பொறாமை (என்னும் மனதழுக்கு) கொண்டால் நமக்கு துன்பம் வரும் என்பதை அறிந்த அறிவுடையவர்கள் பிறரின் மேல் பொறாமை கொள்ளமாட்டார்கள். பிறரின் நன்மை போற்றுவர்.

ஒருவனிடம் இருக்கும் கல்வியை பார்த்துப் பொறாமை (அக்கல்வியை அவன் வினைப்பயனால் பெற்றான்), ஒருவனிடம் இருக்கும் செல்வதை பார்த்துப் பொறாமை, பொறாமை இருந்தால் மனதாலே, வாக்காலே(சொல்லாலே), செயலாலே  தீமை செய்வோம்.

மகாபாரதத்தை படித்தால் தெரியும் பொறாமையினால் துரியோதனனும் கௌரவர்களும் அழிந்தார்கள். தருமன் எல்லாவற்றையும் எத்தனையோ தடவை அவர்கள் செய்த பிழைகளை பொறுத்துதான். பொறுக்கவேண்டிய அளவிற்கு பொறுத்தான். பாண்டவர்கள் வனவாசம் முடிந்தபிறகு கிருஷ்ணன் தருமனிடம் கேட்கிறார் என்ன செய்வோம் என்று. தூதனுப்புவோம் என்று தருமன் கூறுகிறார். கிருஷ்ணன் மற்றவர்களை கேட்கிறான். பீமன் சொல்கிறான் என் அண்ணனிடம் எல்லாம் இருக்கிறது.மானம் மட்டும் இல்லையென்று. "ஊனமிலான் மானமிலாதுரைப்பதற்கென் செய்வதென்றான்". தீமை செய்தவனை எப்படி மன்னிப்பது? அதற்கு தருமன் சொல்கிறான்  "கண்மலரிற் கை படாதோ, பொருதொழிலுங் கடைநிலத்திற் கிடந்ததேயென மொழிந்தான் புகழேபூண்பான்". அதாவது கை கண்ணை அறியாமல் குத்திவிடுகிறது. கண் நோகிறது. அதனால் நாம் கையை வெட்டுகிறோமா? சண்டை வந்தால் இருவரும் சாகப்போகிறோம். ஆதலால் நிறுத்து.  உறவினர்களடா, சின்ன சின்ன பிழைகள் நடக்கும் (பாஞ்சாலிக்கு/திரௌபதிக்கு துயில் உரிந்ததையும் சேர்த்துச்சொல்கிறான்). அதனை மன்னிக்கவேண்டும். அதுவே பெருந்தன்மை. ஆனால் துரியோதனன் அதற்கு நேரெதிராக இருந்தான். அதற்கு காரணம் பொறாமை. பொறாமையினால் அந்த சந்ததியே ஓட்டுமாதமாக அழிந்தது.

அறிவுள்ளவனாக இருந்தால் பொறாமைக் கொள்ளமாட்டார் அதுவே பொறாமைக்கொள்ள நினைக்க தொடங்கிவிட்டால் அதனை சொல்ல நேரிடும். தீமை சொல்ல நேரிடும். சந்தர்ப்பம் வரும் பொழுது தீமைசெய்ய நேரிடும். ஆகவே அதனை வேரிலேயே அறுத்துவிட வேண்டும்.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.).

மணக்குடவர் உரை
அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

மு.வரதராசனார் உரை
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார்

குறள் 162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
விழுப்(பமான) - விழுப்பம் - viḻuppam   n. id. 1. Seeவிழுமம், 1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் (குறள், 131).2. Good; benefit; நன்மை. (பிங்.) 3. Family,ancestry; குலம். (பிங்.) 4. See விழுமம், 4. நின்விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23).

பேற்றின் -  பேறு - பெறுகை; அடையத்தக்கது; இலாபம்; நன்கொடை; பயன்; தகுதி; பதினாறுவகைப்பட்டசெல்வம்; நல்லூழ்; நிலத்தின்அனுபோகவகை; இரை; படைப்பு; முடிவு.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

ஒப்பது - ஒப்ப - oppa   part. ஒ-. Adverbial word ofcomparison; உவமவாய்பாடுகளுள் ஒன்று (தொல்.பொ. 291.) 

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)

அழுக்காறு -  பிறர் ஆக்கம் பொறாமை; மனத்தழுக்கு

ஆற்றின் - ஆற்று-தல் - āṟṟu-   5 v. intr. 1. To become strong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. To be sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To 

அன்மை - aṉmai   s. (அல்) negation of a quality, அல்லாமை,  ; தீமை

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
நாம் பெறக்கூடிய வளர்த்துக்கொள்ளக்கூடிய நன்மைகளில் அழுக்காறு போன்று வேறொன்றும் இணை இல்லை. ஏனெனில் பிறர் யார்மீதும் பொறாமை கொள்ளாமல் இருத்தல் மிக சிறந்த குணம். பொறாமை எனப்படுவது மிக தீமையான ஒன்று. அது நமது அழிவிற்கே வித்து எனலாம். பொறாமை எனப்படுவது நம்மில் தீய குணங்களை வளர்ந்துவிடும். அதனால் அழிவை தரும் தவறான காரியங்களை செய்வோம். அதுமட்டும் இன்றி பொறாமை நமது மன அமைதியை குலைத்துவிடும். அதனால் தான் அழுக்காறு குணம் போன்று நன்மை தரக்கூடிய குணம் வேறில்லை

ஆமை நுழைந்த வீடும், பொறாமை நுழைந்த மனமும் உருப்படுவதில்லை. நம்முடைய நாட்டிலே ஒரு சொல்வழக்கு இருக்கிறது. “அசலான் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்” என்று. மனிதர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு எள்ளத்தனையாவது பொறாமை என்கிற பொல்லாங்கு ஒட்டிக்கொண்டிருக்கும். பிறருடைய வளங்களைக் கண்டு, வளர்ச்சியைக்கண்டு, அவர்களின் மக்கட் செல்வங்கள் செல்லும் உயரங்களைக்கண்டு மகிழ்ச்சியைவிட பொறாமையே கொள்ளுவர் தொண்ணுற்று ஒன்பது விழுக்காடு மக்கள். இவ்வழுக்காறு, மனிதர் செய்யும் தவறுகளுக்கு ஒரு முக்கிய முதல் காரணியாக இருப்பதாலேயே, அஃதில்லாதிருத்தலை ஒரு சிறந்த பேறாக வள்ளுவர் குறிக்கிறார். மற்றவர் வாழ்விலே மகிழ்வு கொள்ளும் மாண்பு யாருக்கிருக்கிறதோ அவர்களை விட சிறந்த நலன்களை உடையவர் யார்?

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

Thirukkural - Management - Not Being Envious
There is nothing greater a fame or name to a person than the possession of the quality of not being envious of others' possessions. As usual, Valluvar resorts to a comparison in Kural 162 also.

That excellence is unmatched if one can learn
To be free of envy.

If you want to have peace with yourself and others, lead a life free of envy. Envy forces a person to be greedy. Remember Gandhi's, “There is enough for everyone's need, but not for greed.”

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன்

குறள் 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து 
அழுக்காறு இலாத இயல்பு
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]

பொருள்
ஒழுக்கு - ஒழுகுகை; நீர்முதலியனஓடுகை, நீரோட்டம்; வரிசை; நடைமுறை; நன்னடை, ஆசாரம்; oḻukku   n. ஒழுகு-. [M. oḻukku.]1. Leaking, dripping; பொள்ளல்வழியாக நீர்கொட்டுகை. 2. Flowing; நீரோட்டம் ஆற்றொழுக்கு (நன். 19). 3. See ஒழுக்கம், 1. பொல்லாவொழுக்கும் (திவ். இயற். திருவிருத். 1).
ஒழுக்குநீர்ப்பாட்டம் oḻukku-nīr-p-pāṭ-ṭam, n. ஒழுக்கு- +. Tax on running waterthat is used for irrigation, opp. to நிலைநீர்ப்பாட்டம் ஆற்றுக்காற் பாசனவரி. (Insc.)

ஆறாக் - ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

கொள்க - கொள்ள வேண்டும்

ஒருவன் - ஒருத்தர்; ஒரு மனிதன்

தன் - தன்னுடைய

நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமை; மனத்தழுக்கு

இலாத - இல்லாத

இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று.

முழுப்பொருள்
தங்கு தடையின்றி ஓடும் நீரோட்டம் போன்று அழுக்குகளை ஓதுக்கிவிட்டுச்செல்லும் ("ஓடும் நதியில் கலங்கம் இல்லை") நதியை போன்று நாம் உள்ளம் கொள்ள வேண்டும்.  ஒரு நதியின் துவக்கத்தில் தூய்மையாகவே இருக்கும் ஆனால் வழியில் சில அழுக்குகள் வந்து கலக்கும். ஆயினும் நதி கலங்காது. அழுக்குகளை ஓரம் தள்ளும். அதனால் தான் நீரோட்டம்(ஒழுக்கு) போன்று அறத்தை (ஆறு-ஆக) கொள்க

அதுப்போல தன்னுடைய நெஞ்சத்தில் பிறர்மேல் பொறாமை கொள்ளாமல் இருக்க வேண்டும். பிறர் மேல் நமக்கு ஒரு சில நொடிகள் பொறாமை எண்ணம் வரக்கூடும் (அது இயல்பே). ஆனால் அதனை மனதில் தங்க விடாமல், பொறாமையுடன் வாழ்வில் பயணிக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு பொறாமை இல்லாத நெஞ்சத்தின் இயல்பு நதிப்போன்று தூய்மையாக இருக்கும். உள்ளத்திற்கும், உடலிற்கும், வாழ்விற்கும் கேடு இருக்காது.

அதுவே பொறாமை இருந்தால் அதில் இருந்து வஞ்சகம், நிம்மதியின்மை பிறக்கும். தன்னுடைய அறத்தில் இருந்து தவரக்கூடும். நம் அழிவும் துவங்கும். ஆகவே பொறாமை முளைக்கும் பொழுதே அதனை கிள்ளி எரிந்துவிட வேண்டும். மரமாய் வளர்ந்த பின் வெட்டி சாய்ப்பத்தை விட முளையிலேயே கிள்ளி எரிவது எளிதானது.

உதாரணமாக பள்ளிக்கூடங்களில், உனக்கு என்னடா நீ நல்ல மார்க் (mark/மதிப்பெண்கள் எடுக்குற) முதல் ரெங்க் (rank) மாணவன் நீ, அல்லது உனக்கு என்ன உனக்கு கார் இருக்கு உனக்கு என்ன கவலை எனக்கு ஒன்னும் இல்லையே என்று பொறாமை கொள்வதிற்கு பதிலாக நாம் நமது பாடத்தை கவனமாக படித்தால் நாமும் முன்னேறலாம். பொறாமைக்கொண்டால் செயலில் கவனம் செலுத்த முடியாது. 

யோசித்துப்பார்த்தால் இன்று சாதனை செய்த பெரிய மனிதர்களில் பெரும்பாலானோர் ஏழைக்குடும்பங்களில் இருந்தோ அல்லது நடுத்தர வர்கத்தில் இருந்தோ வந்தவர்களே. அமேரிக்காவில் 80% (சதவிகித) மில்லியனர்ச் (millionaires) / பெரும் பணக்காரர்கள் தங்கள் தாய் தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெறவில்லை. அவர்களாகவே உழைத்து சம்பாத்திப் பெற்றார்கள். ஏனெனில் அவர்கள் பணக்காரர்களை கண்டு பொறாமை கொள்ளாமல் செயலில் கவனம் செலுத்தினார்கள்.

திரிகடுகத்தின் ஆசிரியர், அழியாப்புகழைப் படைப்பவர்களுள், பகைமை உண்டான காலத்தும் பிறர் வளமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர்களையும் சொல்லுவார்.

“என்றும் அழுக்காறு இகந்தானும், – இம் மூவர்நின்ற புகழ் உடையார்”. ஆசாரக்கோவை, “பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்” என்று சிந்திக்கக்கூடாத நான்கினுள் ஒன்றாக அழுக்காறைக் கூறுகிறது.

ஆனால் அழுக்காறு என்பதை ஒரு கவிதை நயமாக எடுத்து ஆண்ட புலவர்களும் உண்டு.  சீதையைக்கண்டு மயில் பகை உணர்வு அடைந்ததை கி.வா.ஜ அவர்கள் , கம்பரின் பம்பைபடலப் பாடலை எடுத்துக்காட்டுகிறார். “ஓடா நின்ற களிமயிலே! சாயற்கு ஒதுங்கி உள்ளழிந்து கூடா தாரின் திரிகின்ற   நீயும் ஆகம் குளிர்ந்தாயோ?”. முன்பெல்லாம் சீதையைக் கண்டால் மயில் முன்னே நிற்காமல் ஓடும்; அவளுடைய சாயலைக்கண்டு, ‘இந்தச்சாயல் நமக்கு இல்லையே!’ என்று அழுக்காறு அடைந்து ஒதுங்கி மனம் வெதும்பிப் பகைவரைப் போலே திரியும்”

தொல்காப்பியம் போலி ஆசிரியர்களுக்கு உண்டான குணக் குறைகளைக் கூறும்போது, அழுக்காறு கொண்டவர்கள் ஆசிரியராகும் சிந்தனை கூட இல்லாதவர்கள் என்கிறது.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
(இதனுள் 'அழுக்காறு' என்பது ஒருசொல்.அதற்குப் பொருள் மேலே (குறள்: 35) உரைத்தாம். அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று 'அழுக்காறாமை' என நின்றது. இப்பொறாமையும் பொறைக்கு மறுதலையாகலின், இதனை விலக்குதற்கு இது பொறை உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.].

மணக்குடவர் உரை
ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

Thirukkural - Management - Not Being Envious

Feeling of inadequacy and feeling of deserving more have been universal grudges of people universally. The result of these two feelings is the longing for something a person does not possess. He becomes envious. “Envy,” according to Oxford Advanced Learner’s Dirtionoy (1996, p. 387), “is the feeling of wishing to have what somebody else has or to be like somebody else.” That sort of longing causes many mental diseases. Valluvar visualized that people would complicate their lives by desiring for things that do not belong to them and suggested cures for that mental disease. Kurals elaborate on the importance of not being envious.

When a person is disciplined not to have any desire for others' possessions in his heart, he can consider that quality as his personal discipline to achieve many greater and admirable things in his life. Kural 161 presents this thought succinctly.

Matte it a way of life to expel
Envy from your heart.

Envy, that is., longing for others' possessions, has psychological and physical consequences. Envy is similar to acid as acid always damages the container. So, do not harbor that negative quality in you and damage yourself.

அழுக்காறு எனஒரு பாவி

குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமை, மனத்தழுக்கு, பொய்,

என - என்ற

ஒரு - ஒரு; ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

பாவி - பாவம், கேடு விளைவிக்கும் எண்ணம் / குணம்

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

செற்று - கொல்லுதல், அழித்தல், செதுக்குதல், பதித்தல், செறிதல், அழுந்துதல்
செற்று - நெருக்கம்

திருச்செற்றுத்  (திருச் செற்று) - சிறப்பான நட்பினையும், நெருக்கத்தையும், உறவையும்

தீ - பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு,கோபம், விடம் (விஷம்), நரகம்
உழி - அலைதல், இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு,

தீயுழி - விஷத்தை போன்று உடம்பில் அலைந்து, கோபத்தை போன்று மனதில் அலைந்து நரகத்தில் 

உய்த்தல் - செலுத்துதல், ஆயுதம் பிரயோகித்தல்
உய்த்து -  அழித்து
விடும் -  விடும்

முழுப்பொருள்
குறிப்பு:இக்குறளுக்கு 2-3 அர்த்தங்கள் பலரால் சொல்லப்பட்டு உள்ளன். நான் புரிந்துக்கொண்ட பொருளினை இங்கு கூறுகிறேன்.

பிறர் மேல் ஏற்படும் பொறாமை குணம் ஒருவனுக்கு வந்தால் அது ஆபத்து. ஏனெனில் உடம்பில் விஷம் அலைந்து உயிரை அழிப்பது போன்று பொறாமை எண்ணம் மனதில் அலைந்து மனதை அலைக்கழைத்து மனதில் பரவி நம்மை அழித்து விடும்.

அது மட்டுமின்றி நாம் பொறாமை கொண்டுள்ள நபரிடம் நமக்குள்ள சிறந்த நெருக்கத்தையும் நட்பையும் பொறாமை கொன்றுவிடும்.

இரக்கத்திற்கும் கருணைக்கும் எதிரான உணர்ச்சி சினம் அன்று, பொறாமைதான். ஏனென்றால் சினம் தீர்வது, பொறாமை தீராது. அது சினத்தைவிடவும் கொடியது. பொறாமை தோன்றிவிட்டால் முதலில் மனத்தில் நுழைவது தாழ்வு மனப்பான்மை. தாழ்வு மனப்பான்மை வேரூன்றியதும் உடனடியாக ஆக்கம் கெடும். அது நம் செயலாற்றலை மெல்ல மெல்ல முடக்கும். கைப்பொருள் அழியும். இந்த நிலைகுலைவு மேலும் மேலும் மூர்க்கத்தைத் தோற்றுவிக்கும். இறுதியில் எதையும் செய்யும் மனப்பாங்கை உருவாக்கித் தீச்செயல்கள் செய்யத் தூண்டும். தீமைகள் உங்களை அழித்துப் புதைக்கும் கடமையைச் செவ்வனே நிறைவேற்றும்.

பொறாமை கொண்டால் இன்மையில் (இப்பிறவியில்) அவன் செல்வம் குன்றிவிடும் என்று முந்தைய குறளில் பார்த்தோம். மேலும் மறுமையில் நரகத்திற்கு அனுப்பிவிடும். அங்கு நாம் அழிவோம். 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு 80 வயது நாடக நடிகரிடம் நீங்கள் எப்படி இளமையாக இருக்கீரீர்கள் என்று கேட்கப்பட்டது. அது அவர் சொன்னல் இரண்டு காரணங்கள் 1) பிறர் மீது நான் பொறாமை கொள்வதில்லை 2) நான் நாடகத்தில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறேன். மக்களின் கைத்தட்டல்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுகிறது. அதில் அவர் பொறாமையை முதலில் கூறியப்போது எனக்கு இக்குறள் நினைவிக்கிற்கு வந்தது. பொறாமை இருந்தால் மனதில் நோய் உண்டானது போன்றது. அது நமது ஆரோக்கியம் என்னும் செல்வத்தை கரைத்துவிடும். நாளடைவில் உடல் சார்ந்த நோய்க்கு வழிவகுத்து நம்மை அழித்து விடும்.

மேற்சொன்ன காரணங்களுக்காக தான் அழுக்காறு தீயுழி உய்த்து விடும் என்றார் திருவள்ளுவர். ஆதலால் தான் பொறாமை ஒரு நிகரற்ற தீக்குணம். பொறாமை என்பது ஒப்பற்ற ஒரு பாவம். ஆதலால் பொறாமை படாதே என்றென்கிறார் திருவள்ளுவர். 

பள்ளிகளில் பார்த்தால், குழந்தைகள் நண்பர் வைத்து இருக்கும் விலை உயர்ந்த பென்சில் பெட்டி அழகாய் தோன்றும். அங்கு பொறாமை ஏற்படலாம். ஆனால், உண்மையில் அக்குழந்தைக்கு கற்று தரவேண்டியது, ஒருவர் மேடையில் நன்றாக உடை அணியலாம். ஆனால் இருந்தியில் அவர் எவ்வாறு மேடையில் தன் பேச்சையோ பாட்டையோ நாடகத்தையோ ஆற்றினார் என்பது மனதில் நிற்கும், அணிந்த உடை இரு நாட்களுக்குப்பின் நினைவில் இருக்காது. ஆதலால் செயலில் கவனம் செலுத்த வேண்டும்.

பொறாமையிருந்தால் நமது செயல்களில் கவனம் செலுத்த மாட்டோம்.  அதனால் நமது ஆக்கம் குறைந்து செல்வமும் குறையும். ஆதலால் பொறாமையை தவிர்க்கவேண்டும். நமது தட்டில் இரண்டு இட்லி இருப்பதை பார்க்க வேண்டும். பக்கத்தில் இருப்பவன் தட்டில் ஐஸ்கிரீம் இருக்கிறது என்று பார்த்தால் நமது இட்லியை ருசிக்க முடியாது மேலும் நமது இட்லியின் அருமையும் அதனால் ஏற்படும் பலனும் தெரியாமல் போய்விடும். நம்மிடம் இல்லாத ஒன்றைப் பற்றி நினைத்து இருக்கும் சந்தோஷத்தை இழக்கக் கூடாது. நம்மிடம் இருக்கும் 1000 வாய்ப்புகளையும் செல்வங்களையும் பயன்படுத்தவேண்டும். 

பொறாமை தோன்றாமல் இருக்க என்ன செய்யலாம்? நம்மிடம் இருக்கும் செல்வங்களையும் வாய்ப்புகளையும் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். ஆனால் அதனை அப்பொழுது நினைத்தப்பார்ப்பது கடினம். அதனால் நம்மிடம் இருப்பவற்றை தினம் தினம் நினைக்க வேண்டும். நாள்தொறும் நம்மிடம் இருக்கும் ஒன்றைப்பற்றி நினைத்து நன்றிக்கூறவேண்டும். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், எப்படி இன்னும் நன்றாக பயன்படுத்தலாம் என்று பார்க்கவேண்டும். அவ்வாறு செய்தால் நாம் நிறைவும் கொள்வோம், மற்ற பொருள்கள் இருந்தால் கூட அவற்றை நாம் பயன்படுத்துவோமா என்று கேட்டுக்கொள்வோம். 

உதாரணமாக சொன்னால் நம் அருகில் ஒரு நூலகம் இருக்கும். அதனை பயனபடுத்த மாட்டோம். ஆனால் ஒரு ஊரில் நூலகம் இல்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும். அதுப்போல் நம் அருகில் இருப்பவற்றின் அருமைகளை உணர ஆரம்பித்தாலே நம்மிடம் இல்லாதவற்றின் மீது பொறாமைக்கொள்ள மாட்டோம். 

ஆங்கிலத்தில் Gratitude Journal என்று கூறுவார்கள். அதனை தினம் தினம் எழுதினால் நாம் நிறைவும் கொள்வோம், பொறாமை கொள்வதையும் எளிதாக தவிர்க்க முடியும். 

மேலும்
”தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
அம்மா பெரிது என்று அகம் மகிழ்க, தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று
நூல்: நீதிநெறி விளக்கம் (#14)
( "உனக்குக் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு"  பாட்டு  வருகிறதா ?) என்பதையும் நினைவில் கொள்க

மேலும்: அஷோக் உரை

உதாரணம்: ஆடுகளம் திரைப்படத்தில் பேட்டைகாரன் கருப்பிடம் (தனுஷிடம்) கொள்ளும் பொறாமையால் தீக்குணம் கொண்டு தீய செயல்களை செய்து கடைசியில் நிம்மதி இழந்து தன்னுடன் நெருங்கி இருந்து மனைவி, தன் சிஷ்யர்கள் ஆகியோரை இழந்து கடைசியில் தன்னைதானே மாய்த்துக்கொள்வார்.

பரிமேலழகர் உரை
அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அழுக்காறு என ஒரு பாவி-பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்-தன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான்.

பொறாமைக் குணத்தை ஒரு கொடியனாகக் குறித்தது ஆட்படையணி (Personification). தீயுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர். விடும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கரிசி (பாவம்)-கரிசன் (ஆண்பால்), கரிசு (பெண் பால்).

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: அழுக்காறு என ஒரு பாவி - பொறாமை என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, திரு செற்று தீயுழி உய்த்து விடும் - செல்வத்தைக் கெடுத்து நரகத்தின்கண் புகுத்தி விடும்.
அகலம்: தருமர் பாடம் ‘பாவம்’.

கருத்து: பொறாமை செல்வத்தைக் கெடுத்து நரகத்திற் புகுத்தி விடும்.

மு.வ உரை
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பாவங்கள் செய்பவரைப் பாவி என்று
பகர்வதுவே உலகத்தார் பழக்கம் இங்கே
பாவி என்று அழுக்காற்றைப் பகருகின்றார்
பல தெளிவும் உயர் அறிவும் தந்த தந்தை
கூவத்தைப் போல் மனது கொண்டு வாழும்
கூட்டத்தின் பொறாமையினைப் பார்க்கும் போது
ஆபத்தை நமக்குணர்த்த வள்ளுவனார்
அருளிட்ட அக்குறளே நினைவில் வரும்

குறட் கருத்து 2  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பாவங்கள் செய்தவர் தான் பாவியாவார்
பாவம் ஒன்றே மிகச் சிறந்த பாவியாகும்
கேவலத்தைச் சொல்லுகின்றார் நமது தந்தை
கேட்கையிலே அவர் பெருமை நாம் உணர்வோம்
பாவிகளில் மிகச் சிறந்த பாவியென்று
பகர்ந்து நின்றார் வள்ளுவரும் பொறாமையினை
தேடி அதைக் கொள்வோர்கள் கொண்டிருக்கும்
திரு இழந்து தீய வழி சேர்வார் என்றார்

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
கோவிலுக்குப் போகிறோம். அங்கே கோபுர வாசலில் அல்லது படிக்கட்டுகளில் நாம் தவறாது காணும் காட்சி ஒன்றுண்டு. இரவலர்கள் வரிசையாய் அமர்ந்திருப்பார்கள். நைந்த பழந்துணி அணிந்து, உழைக்கும் திறனிழந்த உடலுடன் திருவோட்டையோ அல்லது தட்டு போன்ற பாத்திரத்தையோ ஏந்தியிருப்பார்கள். மலைப்படிக்கட்டுகளில் அமர்ந்து இரந்துண்டு வாழும் சாதுக்கள் தமக்குள் நன்றாகக் கதைபேசிக்கொண்டு களித்திருப்பதுமுண்டு. மாறாக, கோவில் வாசலில் அமர்ந்துள்ள இரவலர்களுக்குள் பேச்சுவார்த்தை உள்ளதுபோலவே ஒருவருக்கொருவர் வசைமாரி பொழிந்து வைதுகொள்வதும் உண்டு. இடப்பற்றாக்குறை முதலான காரணங்கள் இவற்றை உள்ளிருந்து இயக்கும். அவர்களும் மனிதர்கள்தாமே, மனித இனத்தின் தொல்பெரும் பண்பொன்று அவர்களையும் பாடாய்ப் படுத்துவதுண்டு. 

பிச்சைக்காரர்கள் இருவர் கோவில் வாசலில் அமர்ந்து திருவோடு ஏந்தி வருவோர் போவோரிடம் இரந்துகொண்டிருக்கிறார்கள் எனக் கொள்வோம். இருவரும் நேற்றுவரை ஒரே மாதிரி இருந்தவர்கள்தாம். ஏறத்தாழ ஒரே வகையான நைந்து கிழிந்த துறவாடை அணிந்திருந்தவர்கள்தாம். இருவரும் நன்றாக ஒடுங்கிய அலுமினியத் தட்டை ஏந்தியிருந்தவர்கள்தாம். இருவருக்கும் ஒரே பரதேசிக் கோலம். ஆனால் இன்று, முதலாமவரைவிட இரண்டாமவர் வைத்திருக்கும் ஒன்று, முதலாமவரை நிம்மதியிழக்கச் செய்துவிட்டது. 

இத்தனை நாளாகத் தன்னோடு அமர்ந்திருந்தவனுக்கு இப்படியொன்று கிடைத்துவிட்டதா என்று எண்ண எண்ண முதலாமவருக்கு உடலும் குடலும் பற்றி எரிகிறது. நானும்தான் அவனைப்போலவே இருந்தேன், அவனைவிட ஓங்கிக் குரலெடுத்து இரந்தேன், அவன் எழுந்துசென்ற பின்பும் கோவில் நடை சாத்தும்வரை கையேந்திக் கரைந்தேன், ஆனால் இன்று அவனுக்கு இப்படியொன்று கிடைத்திருக்கிறதே, அது எப்படி ? எவ்வாறு ? ஐயோ, என்னால் பொறுக்க முடியவில்லையே. 

அப்படி என்ன இரண்டாமவருக்குக் கிடைத்துவிட்டது என்கிறீர்களா ? நேற்றுவரை ஒரே வகையான, ஒடுக்கங்கள் நிறைந்த அலுமினியத் தட்டை இருவரும் வைத்திரந்தார்கள் அல்லவா... இன்று அதில் ஒரு மாற்றம். இரண்டாமவர் எங்கோ கடைவீதியில் இரந்து நின்றபோது, யாரோ பாத்திரக் கடைக்காரர் புத்தம் புதிய அலுமினியத் தட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டார். 

இரண்டாமவர் புத்தம் புதிய தட்டுடன் இரந்துகொண்டிருக்கிறார். முதலாமவர் அதே பழைய அலுமினியத் தட்டோடு இருக்கிறார். முதலாமவரால் பொறுக்க முடியுமா ? முடியவில்லை. தன்னுடைய தட்டு இத்தனை பழையதாக இருக்கிறதே, இவனுக்குப் புதிதாக ஒன்று கிடைத்துவிட்டதே, அதில் ஒடுக்கங்களே இல்லையே, என்னுடையது ஒடுங்கி நசுங்கி ஒன்றுக்கும் உதவாததுபோல் உள்ளதே... பொறுக்க முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பொறாமை ! அழுக்காறு !

அந்தப் பொறாமையைத்தான் மனித இனத்தின் தொல்பெரும் பண்பு என்று குறிப்பிட்டேன். அந்தப் பிச்சைக்காரன் எதைப் பார்த்துப் பொறாமைப்பட்டான் ? தன்னோடு நேற்றுவரை ஒன்றாக அமர்ந்திருந்து, தன்னைப்போலவே உடைமையோடு இருந்த ஒருவனுக்குப் புத்தம் புதிதாக ஒரு பிச்சைப் பாத்திரம் கிடைத்துவிட்டதே என்று பொறாமைப்பட்டான். தன் தட்டைவிட அடுத்தவன் தட்டு ஒடுக்கங்கள் குறைவாக உள்ளதே என்று பொறாமைப்பட்டான். 

பொறாமை ஆதி குணம் என்றால், அந்தப் பிச்சைக்காரன் நியாயமாக யாரைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும் ? கோவிலுக்குப் பொன்னும் மணியும் பட்டும் அணிந்து வரும் செல்வந்தர்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். தன்னெதிரே விண்ணளாவ எழுந்து நிற்கும் மாட மாளிகைகளைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். விலையுயர்ந்த மகிழுந்துகளில் குளிர்காற்றுரச கோவில் வாசலில் வந்திறங்குபவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பார்த்து பொறாமைப் படவில்லை. செல்வந்தர்களைக் கண்டதும் ‘ஈ’ என்று இரப்பதற்குத்தான் அவன் மனம் பழகியிருக்கிறது. ஆனால் இத்தனை காலம் தன்னோடு இருந்த ஒருவனுக்குச் சற்றே மேன்மையாக ஒன்று கிடைத்துவிட்டால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பிச்சைக்காரனின் பொறாமை திருவோட்டின்மீது. நம்முடைய பொறாமை எதன்மீது ? அண்டை அயலான் மீது. உற்றார் உறவினர் மீது. நண்பர் தோழர் மீது. ஏனென்றால் அவர்கள்தாம் நம்மோடு நம்மைப் போலவே இருந்துவிட்டு இப்போது முன்னேறுகிறார்கள். அவர்கள் முன்னேற்றம் நம்மை ஒருபடி கீழிழுக்கிறது. அது பொறுக்க முடியவில்லை. டாடா பிர்லாக்கள் மீதோ முகேஷ் அனில் அம்பானிகள் மீதோ நமக்குப் பொறாமையே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கும் நமக்கும்தான் எந்தத் தொடர்பும் இல்லையே.

பொறாமையைப் பற்றிக் கூறவேண்டிய கட்டாயத்திற்கு வள்ளுவரே ஆளாகியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் காலத்திலும் இது பெரும் மனிதக் கீழ்மையாக இருந்திருக்கிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் வெந்து புழுங்கியிருக்கின்றனர். எளிமையான பழங்கால வாழ்க்கையிலேயே பொறாமை புகுந்து விளையாடியிருக்கிறது என்றால் நம் காலத்தில் சொல்லவா வேண்டும் ?

இரக்கத்திற்கும் கருணைக்கும் எதிரான உணர்ச்சி சினம் அன்று, பொறாமைதான். ஏனென்றால் சினம் தீர்வது, பொறாமை தீராது. அது சினத்தைவிடவும் கொடியது. பொறாமை தோன்றிவிட்டால் முதலில் மனத்தில் நுழைவது தாழ்வு மனப்பான்மை. தாழ்வு மனப்பான்மை வேரூன்றியதும் உடனடியாக ஆக்கம் கெடும். அது நம் செயலாற்றலை மெல்ல மெல்ல முடக்கும். கைப்பொருள் அழியும். இந்த நிலைகுலைவு மேலும் மேலும் மூர்க்கத்தைத் தோற்றுவிக்கும். இறுதியில் எதையும் செய்யும் மனப்பாங்கை உருவாக்கித் தீச்செயல்கள் செய்யத் தூண்டும். தீமைகள் உங்களை அழித்துப் புதைக்கும் கடமையைச் செவ்வனே நிறைவேற்றும். வள்ளுவர் மொழியில் சொன்னால்...

அழுக்கா(று) எனவொரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும். 

பொறாமை என்னும் பெருந்தீயவன் செல்வத்தை அழித்து வறுமையென்னும் நரகத்திற்குக் கொண்டு செல்வான்.

English Meaning - As I taught a kid - Rajesh
Jealousy is an evil / devil / sin. Because, jealousy kills all the wealth that we way. Jealousy leads to being unsatisfied/unfulfilled with anything in life leading to internal anger, restlessness, disturbances etc. which takes our focus away from our work. When, work is impacted we lose our wealth, money, health etc. Rather being jealous, one should feel grateful for what we have and utilize all the opportunities around us.

Questions that I ask to the kid
What jealousy does to you ? 
What does jealous lead to you ? (internal anger, distraction, take away energy)
What should we do (daily) to overcome jealousy? gratitude journal. grateful for opportunities. identify opportunities and utilize them


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

குறள் 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அவ்வி - avvi   VI. v. i. become impatient; 2. pervert the mind, மனங்கோணு.  
அவ்வித்தல் - பொறுமைஇழத்தல்; மனம்கோணச்செய்தல்.

அவ்விய - பொறாமை, அழுக்காறு கொண்ட

நெஞ்சம் - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு

ஆக்கம் -  ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு.

ஆக்கமும் - செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்

செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள்.

செவ்வியான் - நேர்மையுடையவன்

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

கேடும் - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை 

நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நினைக்கப் படும் - சில நேரங்களில் மனங்களிலே நினைத்துப்பார்க்கின் 

முழுப்பொருள்
மனதில் பொறாமை கொண்ட ஒருவன் செல்வந்தராக இருக்கக்கூடும். ஆனால் நேர்மையான ஒருவர் மிகவும் ஏழ்மையில் இருப்பார். இவ்வாறு நல்லவராக இருப்பவர் நமது எதிர்ப்பார்பிற்கு நேர்மறையாக ஏழ்மையில் இருப்பதும், மனதில் பொறாமை யுடையவர் செழிப்பாக இருப்பதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாது. 

ஆனால் இந்நிகழ்வை கண்டு நாம் வருந்தக்கூடாது. நாம் அதை பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு உள்ளவர்கள் வாழ்வில் அடையும் உண்மையானவை வேறு. நல்லவர்கள் நற்பெயர் பெறுவர். உலகம் அவர்களை அவர்களுக்கு முன்னும் பின்னும் போற்றும். ஆனால் பொறாமை கொண்டவர்களை மூகஸ்துதி(முகத்துதி) செய்துவிட்டு பின்பு யேசும். அப்படி சிந்திக்கையில் நமக்கு உண்மை விளங்கும். 

பொதுவாக பொறாமை படுபவனிடம் செல்வமும் இருக்காது. பொறாமை படாதவனிடம் (அதாவது நல்லவரிடம்) செல்வம் இருக்கும். ஆனால் ஒருவேளை பொறாமை படுபவனிடம் செல்வம் இருப்பின் அல்லது நல்லவரிடம் செல்வம் இல்லை எனில் அவனை ஏசாது அதற்கான காரணத்தை இவ்வுலகம் ஆராய்ச்சி செய்யும். ஏனெனில் நல்லவன் கெட்டால் அதுபற்றி இவ்வுலகம் ஆராயும். 

சிலப்பதிகார அடைக்கலக் காதையில் மாடலமறையோன், கோவலனைப்பார்த்து இங்கனம் கூறுகிறான், “இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” என்று. இப்பிறவியில் நீ செய்தன யாவும் நல்லறங்களே ஆகும், அவ்வாறிருக்க, திருமகளை ஒத்த இம்மாணிக்கக் கொழுந்தாகிய கண்ணகியோடு துன்புற்று இங்கு நீ வந்திருப்பது உன்னுடைய முற்பிறப்பின் தீவினை போலும்” என்கிறான்.

உதாரணம்
அண்ணாமலை படம் : 
"கெட்டுப்போனவன் வாழலாம். ஆனா நல்லா வாழ்ந்தவன் கெட்டுப்போக கூடாது" என்று அண்ணாமலை கதாபாத்திரம் நினைத்து உதவி செய்யும். 


(பாட்ஷா பட வசனம்)
நல்லவங்கள ஆண்டவன்
சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்,
கெட்டவனுக்கு நிறைய
கொடுப்பான் ஆனா ஆண்டவன்
கைவிட்டுடுவான். ...

(காண்க - 2:30 முதல்)


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)


மனித வாழ்க்கை தருகின்ற பல அய்யப்பாடுகள் குறித்து வள்ளுவரைத் தவிர யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலும்.
என் தந்தை எனக்கு சிறு வயதில் இருந்தே சொல்லித் தந்தது. என்ன அய்யம் ஏற்படினும் அதனை ஒரு கேள்வியாக்கிக் கொண்டு
வள்ளுவரிடம் செல் உறுதியாகப் பதில் உண்டு என்பார்கள்.

மக்களுக்கு எப்போதும் இருக்கின்ற ஒரு பெரிய அய்யம்.

தவறுகளுக்கு அஞ்சாமல் தவறுகளையே வாழ்க்கையாக்கி வருவாய் ஈட்டி பெருஞ் செல்வந்தர்களாக வாழ்ந்து வருபவர்களும்
நேர்மை நாணயம் ஒழுக்கம் என்று உண்மையாக மனிதர்களாக வாழ்பவர்கள் வறுமையில் வாடுவதும். எதனால் என்ற அய்யத்திற்கு
விடை கேட்டு வள்ளுவரிடம் சென்றேன்.

அவரிடம் எனது அய்யம் குறித்து வினவினேன்.

நீ என்ன கருதுகின்றாய் என அவர் என்னையே வினவினார்

தவறானவர்கள் மிகப் பெரிய இடங்களிலே இருக்கின்றனர். அவர்களையும் இந்த மக்கள் வணங்கி நிற்கின்றனர்.
கோயில்களில் கூட அவர்கள் எல்லோருக்கும் முன்னர் நின்று இறைவனைத் தொழுகின்றார்கள். மக்கள் அங்கேயும் கூட அவர்களை
வணங்கி நிற்கின்றனர்.

நல்லவர்களை மக்கள் வணங்கவில்லை என்கின்றாயா என்றார்

இல்லை அவர்களையும் வணங்கத்தான் செய்கின்றனர்.

இரண்டிற்கும் ஏதாவது வேறுபாடு கண்டாயா என்றார்

சரியாகப் பார்க்கத் தவறி விட்டேன் என்றேன்.

இனிப் போய்க் கவனி.ஒன்றைப் புரிந்து கொள்வாய் என்றார் பேராசான்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவது விபச்சாரத்தைத் தொழிலாகச் செய்வது ஏழைகளின் உழைப்பைத் திருடுவது. எவர்
சொத்தையும் அபகரித்துக் கொள்வது என்று வாழ்பவர்களை ஊரில் மக்கள் வணங்குவதும் அவர்களைக் கண்டால் குழைந்து
நிற்பதும் வார்த்தைக்கு வார்த்தை அய்யா அய்யா என்பதும் அவர்களைத் தொழுவது போல நிற்பதுவும் பார்த்த நீ கொஞ்சம்
அங்கேயே நின்று கவனித்திருந்தால்தான் உண்மை உனக்குப் புரிந்திருக்கும் என்றார்,

ஒருமுறை நின்று பார். அந்தத் தவறானவன் அந்தப் பக்கம் போனதும் வணங்கி நின்றவர்கள் கடவுளிடம்
சினம் கொள்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். இவனையெல்லாம் உடனடியாகத் தண்டிக்காமல் விட்டாயானால் எங்களுக்கு
உன் மீது உள்ள பக்தியே போய் விடும் என்று வேகப் படுவார்கள்.இவனுக்கு ஒரு சாவு வராதா. நல்லவர்கள் வாழ்கின்ற
இடத்தில் இவனைப் போன்றவர்களையும் இறைவன் வாழ வைத்துள்ளானே என்று மிக மிக உள்ளம் வருந்துவார்கள்,


அதே நேரம் நல்லவர்களைக் கண்டவுடன் முக் மலர்ந்து தாள் பணிந்து அவர்களின் ஏழ்மை நிலை குறித்துத்
தங்களின் மன வருத்தங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு இறைவன் அவர்களுக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்ய
வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவார்கள். அய்யா உங்களைப் போன்றவர்களால்தான் மழை பெய்கின்றது. அச்சப்பட்ட ஏழை
மக்கள் உங்களைப் போன்ற நேர்மையாளர்களைப் பார்க்கும் போதே கடவுளை நம்புகின்றோம்.என்றெல்லாம் அவரோடு உரை
யாடுவார்கள். நாங்கல்லாம் உங்கள் பிள்ளைகள் என்பார்கள்.

புரிகின்றதா தம்பி. மக்களால் இவர்கள் இருவருமே நினைக்கப் படுவார்கள். ஆனால் நினைக்க்ப் படுகின்ற முறைதான்
வேறு. தீயவர்களை மனம் நொந்து சாபங்களோடு வணங்குவார்கள். நல்லவர்களை அகமும் முகமும் மலர தெய்வமாகவே வணங்கு
வார்கள்.

குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்


மேலும் அஷோக்


யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி உரை

அறவழி பிறழ்ந்தும் குறுகிய நோக்கத்துடனும் பிறர்க்குதவியின்றி சுயநலத்தோடும் வாழ்பவர்கள் பொருள், புகழ், அதிகாரம், புலன், இன்பம் இவற்றில் மேலோங்கி வளமாக வாழ்வதும், ஒழுக்கம், ஈகை, கடமை எனும் மூன்றிணைப்பு அறவழியில் நெறி பிறழாமல் வாழ்பவர்கள் மனித சமுதாயத்தில் வளம் குறைந்து வருந்தி துன்பம் மிகுந்த வாழ்வை அனுபவிப்பதும், மேலாகப் பார்த்தால் ஒருவருக்கு விளங்காது. ஆழ்ந்து பொறுப்புணர்ச்சியோடு விரிந்து ஆழ்ந்த அறிவோடு சிந்தித்தால் அவற்றிற்குக் காரணம் விளங்கும் என்று கூறுகிறது இக்குறள். தமிழில் அகப்படும் என்ற வார்த்தைக்கு அகம்+படும், சிந்தித்துப் பார்த்தால் அறிவிற்கு எட்டும் என்பதே நினைக்கப்படும் என்ற சொல்லாகும்.

ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று வகையான் வினை விளைவுகள் இனைப்பாகச் செயல்புரிகின்றன. 1)தனிப்பட்ட முறையில் தான் ஆற்றும் வினை. இதோடு கருத்தொடராக பல்லாயிரம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் வினைகள். 2) சமுதாயத்திலிருந்து பிரதிபலிப்பாக விளையும் வினைகள் 3) பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளான பரிணாமம் இயல்பூக்கம் என்ற தொடரில் இயற்கையின் முதல் நிலையான இறைவெளியும், விண் துகள்களில் எழும் அலைகளும் கூடி பேரியக்க மண்டலம் முழுவதும் காந்தக் களமாகி ஒவ்வொரு பொருளிலும் அதன் அணுக்கூட்டுத் திணிவு நிலைக்கேற்ப ஊறு, ஒலி ஒளி, சுவை, மணம், மனம் ஆகத் தன்மாற்றம் பெற்றூ இயங்கி பல்வேறு விளைவுகளைத் தொடராகக் கொடுத்துக் கொண்டிருக்கும் அருட்பேராற்றலின் திருவிளையாட்டுத் தொடர் விளைவுகள். ஆக மூன்று வகைச் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் உட்பட்ட உயிரியக்க நிலையமே மனிதன்.

ஒரு மனிதனுடைய பிறப்பு, முடிவு, வாழும் காலத்தில் ஏற்படும் மன, உடல், பொருள், நட்பு, புகழ், செல்வாக்கு இவற்றின் வளம் இவை மேலே சொல்லப்பட்ட மூவகை விளைவுகளில் எங்கிருந்து இந்த மனிதனுக்கு இந்த வளம் வந்திருக்கின்றது என்ற விளக்கம், விரிந்த அறிவில் ஆழ்ந்து சிந்தித்தால் விளங்கும் என்பதே இக்குறளின் கருத்தாகும். செயலில்லாத விளைவில்லை. விளைவு இல்லாத செயலில்லை. ஒவ்வொரு விளைவின் தரமும் அளவும், காலமும் கொண்டு ஆழ்ந்து ஆராயும்போதுதான் காரணம் விளங்கும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.

வினைத்தூய்மை
வினை எதுவும் நலம் தீது என்பது இல்லை
      விளையும் அதனை ஆற்றுபவர் நோக்கம் கொண்டே
வினையதை நலம்தீது எனப் பிரிப்போம்
      விழிப்புடனே எண்ணம் எழும்போதே தேர்வோம்.
வினை காலம், இடம் தொடர்பு பொருள்களுக்கு ஏற்ப
      வெவ்வேறு அளவு இன்ப துன்பம் நல்கும்
வினைகள்தமை உடல் தகுதி, உலகம் ஒப்ப,
      உயர் இயற்கை நியதி ஒக்க ஆற்றமேலாம்.

உலக நலம் வேட்டல்
அறிவறிந்தோர் எண்ணிக்கை பெருகவேண்டும்
      அன்பு கடமை ஆட்சி அறம் தொண்டெல்லாம்
அறிவறிந்தோர் விளக்கும் வாறுணர்ந்து போற்றி
      அருள் நெறியில் மக்களெல்லாம் வாழவேண்டும்
அறிவறிந்தார் விளக்கத்தால் பழக்கம் சீராம்
      அறக்கல்வி குழந்தைகட்குக் கிட்ட வேண்டும்
அறிவறிந்தோர் அகன்ற கருத்தில் உதிக்கும்
      ஆட்சி முறை மலர்ந்துலகம் உய்ய வேண்டும்.    

பரிமேலழகர் உரை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
விளக்கம்
(கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும்-பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; நினைக்கப்படும்-எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும்.

இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால் அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்.

"இம்மைச் செய்தன யானறி நல்வினை
யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது"

என்னும் மாடலன் கூற்றும் (சிலப். 15;91-93.)
"என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே".

என்னும் பட்டினத்தார் பாடலும், இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.

மணக்குடவர் உரை
அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்

பொருள்: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் - கோடிய உள்ளத்தானது செல்வமும் நேரிய உள்ளத்தானது வறுமையும், நினைக்க கெடும் - (ஒருவன்) நினைக்கும் (கால) அளவில் அழியும்.

அகலம்: மணக்குடவர் பாடம் ‘நினைக்கக் கெடும்’. மற்றை நால்வர் பாடம் ‘நினைக்கப்படும்’. ‘பொல்லாதவர் நன்மை பொருந்துவதும், நல்லார் மிகவன் றுயர் நண்ணுவதும், தொல்லார் வினையால் வரினுந் தொடர்பாய், நில்லா தெனும்வாய் மொழிநிச் சயமே’ - பிரபோத சந்திரோதயம்.

கருத்து: இவ் விரண்டும் வெகு விரைவில் நீங்குவன.

மு.வரதராசனார் உரை
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.


(பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.)

எந்த ஒரு சமுதாயத்திலும் கேடுகளும், தீங்குகளும் மலிந்தே கிடக்கின்றன. நல்லவர் என்பதாலேயே ஒருவர் வெற்றி பெற்று விடுவதில்லை. அதற்கான சூழ்நிலைகளும், நியதிகளும் சமூகத்தில் இருந்தால்தான் நல்லவர்களுக்கு மதிப்பு இருக்கும்.
கேடுகள் நிறைந்த சமூக நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. வள்ளுவர் காலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல போலும். இந்த நிலைமைகளைக் கண்ணுற்ற வள்ளுவர் அதற்காக வருந்தியுள்ளார். அவருடைய வேதனையின் வெளிப்பாடுதான் மேற்காணும் குறளாக வடிவெடுத்துள்ளது.
அறக்கருத்துக்களை சொல்லி வெற்று உபதேசியாக மட்டும் அவர் இருக்கவில்லை. கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற சமூக விஞ்ஞானியாக வள்ளுவர் திகழ்ந்துள்ளார். அதனால்தான் தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய குறைபாட்டை தனது பாடலில் பதிவு செய்து அதற்கான ஆய்வை மேற்கொண்டு சமூகத்தை திருத்த வேண்டும் என்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த குறட்பா மூலம் புலனாகும் ஆழமான அவரது சமூக நலன் நாடும் வேட்கையையும், ஆய்வு மனப்பான்மையையும் சமூகவியலாளர்கள் வியந்து போற்றுகிறார்கள்.
1330 குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் வகையில் தனித்துவமானதுதான். அவற்றிலும் ஒரு சில குறட்பாக்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிந்தனைச் செழுமையில் வேறுபட்டு தனித்து மிளிர்கின்றன. அத்தகையவற்றில் ஒன்றுதான் இந்த குறட்பா.
வள்ளுவர் நீதிநூல் மட்டும் எழுதியவர் அல்ல. அவர் ஒரு சமூகப் புரட்சியாளர். அந்த உண்மையை இந்தக் குறட்பா பதிவு செய்து வைத்துள்ளது. அதன் ஆழமான பொருளை நுணுகி ஆராய்ந்து படிக்க வேண்டியது வாசகர்களின் கடமையாகும்.

மேலும்: தினமணி
றம், நியாயம், தர்மம் என்பனவற்றை அந்தந்த நாடும் அந்தந்த சமுதாயமும் அங்கீகரித்துப் பின்பற்றும் பொழுதுதான் நடைமுறையில் இருக்கின்றன. அவை அங்கீகரிக்கப்படாதபோது இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் அறத்தின் விலை வேறு வேறாக இருக்கிறது.

திருவள்ளுவர் காலத்திலும் இந்த நிலையே இருந்தது என்பதை அவர் எழுதியுள்ள, "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்' (169) என எழுதுவதால் தெரிகிறது.

கெட்ட எண்ணம் உடையவன் பண வசதியோடு ஜொலிக்கிறான். நல்லவன் வறுமையால் அல்லல்படுகிறான் என்பது அவர்தம் குறட்பாவிலிருந்து கிடைக்கும் செய்தி.

அறத்தை நிலைநாட்ட நல்லவர்கள் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டி இருக்கிறது. போராட வேண்டி இருக்கிறது.

தீமைக்கு இப்படி ஆள் துணையும், தோள் துணையும் தேவைப்படுவதில்லை. நீதி, அநீதிகளை நிலைநாட்டவும் தரம்பிரிக்கவும் எந்தச் சமுதாயத்தில் உறுதிப்பாடு இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தில் மட்டும்தான் நீதி, அநீதி என்பனவற்றைத் தெளிவாக வரையறுக்க முடியும்; வாழும் கோட்பாடுகளாக ஒப்புக்கொள்ள முடியும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The wealth in the hands of a person with jealousy at heart, and the destitution/impoverishment of a person, devoid of jealousy, are aberrations/abnormalities/anomalies that (need to/)would be analyzed. Because when one sees a jealous wealthy person, people might salute him/her but behind the back they would wonder how this person is wealthy. Similarly when one person devoid of jealousy is in poverty, then people will also wonder about it. So, one must understand that if we are jealousy people might praise us in front of us but the popular opinion in the society would be bitter. It will hurt us very deeply.

Questions that I ask to the kid
How would a jealous wealthy person be perceived by the society? How would the poverty of a person devoid of jealousy would be perceived?

அறன்ஆக்கம் வேண்டாதான்

குறள் 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை ]

பொருள்
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம்,

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து.

ஆக்கம் - படைப்பு - உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டாதான் - வேண்டாதவன்

என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன்.

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்; ஈட்டம்; கொடிப்படை; திருமகள்; மங்களகரம்; வாழ்த்து.

ஆக்கம் - படைப்பு - உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு.

பிறனாக்கம் - பிறருடைய / மற்றவர்களுடைய ஆக்கம்(வளர்ச்சியை)

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்
பேணாமாக்கள் - அகதிகள்.பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் (மணி. 28, 223).

பேணாது -  பேணக்கூடாத; விரும்பக்கக்கூட கூடாத

அழுக்காறு - பொறாமை, மன அழுக்கு, மாசு, மலம்
அழுக்காறு - பிறர்ஆக்கம்பொறாமை; மனத்தழுக்கு

அழுக்கு - மாசு; மனமாசு பொறாமை ஆணவமுதலியபாசம்; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை; மலசலாதிகள்; பிள்ளைப் பேற்றின்பின் வடியும் ஊனீர்; ஆமைவகை.

அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

அழுக்கறுப் பான் - பொறாமையை அறுப்பான்

முழுப்பொருள்
மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஒருவன் அவர்களை போற்ற வேண்டும். அவர்களை பேண வேண்டும். அதுவே அறம். 

எனக்கு ஒரு உதாரணம் தோன்றுகிறது, எனது கல்லூரி வகுப்பு மாணவி சொன்னது, நட்பென்பது சீ-சாவில் நாம் கீழே சென்றாலும் நண்பன் மேலே செல்வதை பார்த்து ஆனந்தம் அடைவதாகும். அதுப்போல பிறரின் வளர்ச்சியைப் பார்த்து இன்புறுவதே அறம்.

ஆனால் பிறரின் வளர்ச்சியையும், உயர்நிலையும் பார்த்து ஆனந்தபடாதாவன், பொறாமைகொள்கின்றவன் அறன் தரும் நல்லூழ்களை வேண்டாம் என்று சொல்பவனாவன். அறம் தரும் பயன்கள் - பெரியோரின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், உறவுகள், - மற்றும் பல. பொறாமை படுபவனை யாரும் தன்னுடன் வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

அதுமட்டும் இல்லாமல் பொறாமை கொண்டால் தன்னுடைய வேலைகளில் கவனம் செய்வதை விட்டுவிட்டு பிறரின் வேலைகளில் கவனம் செலுத்தி, தனது வேலைகளில் சொதப்பிக் கோட்டை விட்டுவிடுவார்கள். ஒழுங்காக தங்களது வேலை செய்திருந்தால் வரும் பயனை அவர்கள் இழந்துவிடுவார்கள். 

பலர் அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு வயிறெரிச்சல் பட்டு தங்கள் நிம்மதியும் இழந்து, உடல் நலனையும் இழப்பார்கள். கேடுவான் கேடு நினைப்பான்`

மேலும்: அஷோக்

பரிமேலழகர் உரை
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்-மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான்-பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான்.
விளக்கம்
('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஆக்கம் அறன் வேண்டாதான் என்பான் -இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன்.

பொறாமைக்காரன் பிறனுக்கு ஒரு தீங்குஞ் செய்ய இயலாது தனக்கே கேட்டை வருவித்துக் கொள்கின்றான் என்பது, இதனாற் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வத்தை (க் கண்டு) மகிழாமல் பொறாமை கொள்பவன், அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - அறமும் பொருளும் வேண்டாதவன் என்று (பெரியோரால்) சொல்லப்படுவான்.

அகலம்: அழுக்கறு என்பது பகுதி. அழுக்கறு - பொறாமை கொள். ‘பேணாது’ என்பது ஈண்டு மகிழாமல் என்னும் பொருட்டு.

கருத்து: அழுக்காறு உடையவனுக்கு அறமும் பொருளும் இல்லை.

நன்றி MovingMoon
ஆக்கமாய் உலகம் போற்றும்
.. அறவழிச் செயல்கள் யாவும்
நீக்கியே நினைந்தி டாது
.. நெறியிலா துலகில் வாழ்வோன்
போக்கெலாம் அழுக்கா றேற்றுப்
.. பிறர்பெறும் போகம் செல்வம்
நோக்கியே பொறாமை கொள்ளும்
.. நிலைதனில் உழல்வான் என்றும் (3)